Tuesday, November 29, 2016

சிவாஜி ஒரு சகாப்தம்..- 1
சிவாஜி கணேசன்...

தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்..

இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான்.

ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது.
படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப்படித்தான் இருப்பார்கள்..என்று நம் கண் முன் நிறுத்திய ஒப்பற்ற கலைஞன்.

ஆம்...அவர் ஒரு பல்கலைக்கழகம்..சகாப்தம்..

இனி வாரம்தோறும் வெள்ளியன்று..1952 முதல் அவர் நடித்த படங்கள் பற்றி..எழுதலாம் என்ற ஆசை.இப்பதிவு..அவர் நடிப்புப் பற்றி மட்டுமே..இதில்..அரசியல் வாழ்க்கை போன்றவற்றை எழுதப்போவதில்லை.

என் நினைவிலிருந்தும்..படித்த சில புத்தகங்களை வைத்தும் இப்பதிவு எழுதப்படுவதால்..இதில்..ஏதேனும் விட்டுப்போயிருந்தாலோ..தவறிருந்தாலோ..அவற்றை சுட்டிக்காட்டினால்..பதிவில் மாற்றம் செய்துவிடுகிறேன்.

இனி..கலையுலக சக்கரவர்த்தியாய் திகழ்ந்தவர் பற்றி..

தமிழ் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த வி.சி.கணேசன் 1952ல் பராசக்தி மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.இவர் ஏற்ற பாத்திரத்தில் ..கே,ஆர்.ராமசாமி நடிக்க வேண்டும்..என்று சம்பந்தப் பட்டவர்கள் கூற.. அப்படத்தின் கதை வசனம் எழுதிய கலைஞர் பிடிவாதமாக..கணேசன் தான் நடிக்க வேண்டும் என்றாராம்.கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கணேசன் பேசிய முதல் வசனம் 'சக்சஸ்..சக்சஸ்" என்பதுதான்.பின் திரையில் வெற்றியுடன் ஆட்சி புரிந்தார் என்று நாம் அறிவோம்.

பராசக்தி .... சில சிறப்புத் தகவல்கள்.
1. கொழும்பு மைலன் தியேட்டரில் 294 நாட்களும், யாழ்ப்பாணம் வெலிங்டனில் 116 நாட்களும் ஓடி, முதன்முதலாக வெளிநாட்டில் வெள்ளிவிழா ஓடிய தமிழ்த் திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றபடம் 'பராசக்தி'.
2. கதை, வசனம் இசைத் தட்டாகவும், புத்தகமாகவும் வெளிவந்த முதல் சமூகப்படம் 'பராசக்தி'.
3. 60 க்கும் மேற்பட்ட அரங்குகளில் 50 நாட்களைக் கடந்த முதல் தமிழ்ப்படம், பராசக்தி'.
4. சென்னையில் 5 திரைகளில் 50 நாட்களை முதல் வெளியீட்டில் கடந்த முதல் தமிழ்ப்படம் 'பராசக்தி'.
பாரகன் 106 நாட்கள்.
பாரத் 100 நாட்கள்.
அசோக் 50 நாட்கள்.
லட்சுமி 56 நாட்கள்.
கினிமா சென்ட்ரல் 50 நாட்கள்.
5. 2593 இருக்கைகள் கொண்டிருந்த ஆசியாவின் மிகப் பெரிய அரங்கமான மதுரை தங்கம் திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் திரைப்படமும், 112 நாட்களைக் கடந்த முதல் படமும் பராசக்தியே.
6. 1100 இருக்கைககள் கொண்டிருந்த திருச்சி வெலிங்டனில், 245 நாட்கள் ஓடிய ஒரே திரைப்படம் பராசக்தி. மேலும், அங்கிருந்து மாற்றம் செய்து ராக்ஸி அரங்கில் 35 நாட்களும் ஓடியது.
7. எம் கே. தியாகராஜ பாகவதற்குப்பின் தமிழ்த்திரையில் ஒரு நாயகனின் அறிமுகப்படம் வெள்ளிவிழா ஓடியதும், ஒரே இரவில் உச்ச நட்சத்திரம் ஆனதும் நடிகர்திலகம் ஒருவர்தான்.
8. அதுவரை, கதைவசனம் எழுதி வந்த கலைஞர் முதன்முதலாக பாடல் எழுதியதும் பராசக்தியில்தான்.
9. ஷிப்டிங் முறையில் தொடர்ச்சியாக மதுரையிலும், திருச்சியிலும் 15 மாதங்கள்வரை ஓடியபடம் பராசக்தி
10. சமூக மாற்றத்திற்காக சினிமாவில் குரல் கொடுத்த கோபக்கார கதாநாயகன் பராசக்தி ( சிவாஜி) குணசேகரன்.
11. எஸ்.எஸ். ராஜேந்திரன், கண்ணதாசன், கள்ளபார்ட் நடராஜன் ஆகியோர் நடிகர்களாக அறிமுகமானதும் பராசக்தியில்தான்.
12. பராசக்தி படத்தை கேலி செய்து, தினமணிக்கதிர் அட்டைப்படமாக ' கதை- வசவு தயாநிதி ' என்றும் படம் ' பரப்பிரும்மன்' என்றும் கார்ட்டூன் வெளியிட்டதாம். அதைக்கண்டு கோபமுற்ற கலைஞர், 'பரப்பிரும்மன் ' என்ற பெயரிலேயே ஒரு நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்.
13. பராசக்தியில் சிவாஜியை நீக்கிவிட்டு, வேறொருவரை நாயகனாக போடலாம் என்று திரு. ஏவி.எம். அவர்கள் சொன்ன கருத்துக்கீ மறுப்பு தெரிவித்து நடிகவேள் திரு. எம். ஆர். ராதா அவர்கள் பெருமாள் முதலியாரிடம், "எந்தப்பய கணேசன் மாதிரி நடிக்க இருக்கான்? நாடகத்திலேயே நடிச்சவனுக்குத்தான் சினிமாவிலே நடிக்கத் தெரியும். இவனையே வெச்சு எடுங்க... இல்லைன்னா படம் டப்பாவாகப் போகும்" என்று கூறினார்.
14.மறு வெளியீட்டில், ஆரணி லட்சுமி அரங்கில் 100 நாட்கள் ஓடியதாக ஒரு தகவல் உண்டு. தெரிந்தவர்கள் பதிவிடவும்.
15.இப்படத்தின் 'மேக்கப் டெஸ்ட்' டுக்காக திருச்சாயிலிருந்து விமானத்தில் சென்னைக்கீ அழைத்து வரப்பட்டார் நடிகர்திலகம்.


அதே வருஷம் வந்த படம் பணம்..என்.எஸ்.கே.,மதுரம்.,பத்மினி., ஆகியோர் நடித்தது.

பராசக்தி 42 வாரங்கள் ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

1953ல் சிவாஜி நடித்து வந்த படங்கள்..பூங்கோதை,திரும்பிப்பார்,அன்பு,கண்கள்,மனிதனும் மிருகமும்,பரதேசி(தெலுங்கு),பொம்புடு கொடுகு(தெலுங்கு)

பூங்கோதையில் அஞ்சலி தேவி நாயகி,படம் ஓரளவு வெற்றி.அடுத்து..திரும்பிப்பார்..இதிலும் கலைஞர் வசனம்..பண்டரிபாய் கதாநாயகி..படம் வெற்றி..இதில் இவர் ஏற்று நடித்த பாத்திரம் பெயர் பரந்தாமன்..காதானாயகன் கெட்டவன்.சிவாஜி..இமேஜ் பற்றி கவலைப்படாமல்..நடிப்பவர் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.
அன்பு ஒரளவு ஓடியது.மற்றவை சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை

KV Rajamany என் மனதை கவர்ந்த படம திரும்பிபார்...
KV Rajamany பராசக்தியின் வசனங்கள் இசை தட்டாகி...அவை ஒலிக்காத...மூலை முடுக்குகளே.தமிழகத்தில் இல்லை
Bhoopal Singh வி.சி.கணேசன்.....விழுப்புரம் சின்னையா கணேசன்
KV Rajamany ஆனாலும் அவர் திருச்சி சங்கலியாண்டபுரத்தில் பிறந்தாரோ வசிித்தாரோ
Bhoopal Singh நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள்கூட கணேசன்தான் நடிக்க வேண்டுமென பிடிவாதம் பிடித்ததாக படித்திருக்கிறேன்.
Bhoopal Singh ஏ.வி.எம் ஸ்டூடியோவில் , அவர் முதல் வசனம் பேசி நடித்த இடத்தில் ஒரு நினைவு தூண் நட்டிருக்கிறார்கள். அதன் படத்தை நீங்கள் ஒஇப்போதுருமுறை போட்டீர்கள். இப்போது இன்னொரு முறை பதிவிடும்படி வேண்டுகிறேன்.
Naveen Kanna ஒப்பாரும், மிக்காருமில்லா கலைஞா் சிவாஜிசாா்...
Rathinam Ramasamy ஆரம்பிக்க வேண்டிய தொடர்.
நடிப்பில் இமயமலய்!
அரசியல் வெற்றியில் பரங்கிமலை!...See More
T V Radhakrishnan நன்றி சார்
Naveen Kanna T.V. ராமகிருஷ்ணன் சாா் உங்களுடைய "சிவாஜி ஒரு சகாப்தம்" படித்துள்ளேன், சிவாஜிசாா் தெலுகில் இவ்வளவு படம் செய்திருப்பது உங்கள் தொகுப்பில் இருந்துதான் தெரிந்துகொண்டேன், மேலும் மொத்த படத்தின் கதை சுருக்கத்துடன், முக்கிய தகவல்களும் இடம்பெற்றிருந்தன. இந்த தொடரில் மேலும் விாிவான தகவல்கள் கிடைக்கபோகிறது... தங்களின் சேவைக்கு பணிவான வணக்கங்கள்....
UnlikeReply318 hrs
Thredha Rohini தகவல் சுரங்கத்துள் மாணிக்க தொடர். ஆவலாய் எதிர்நோக்கி.
UnlikeReply317 hrs
Jeyasingh Michael நேற்று இவர் நடித்த வெள்ளைரோஜா பார்க்க நேர்ந்தது சிவாஜி ஒரு சகாப்தம் மட்டுமல்ல சரித்திரம்
LikeReply16 hrs
Jeyasingh Michael இன்று முதல்மரியாதை பார்த்தேன் நடிப்பா.................அது
LikeReply16 hrs
Rajeshwari Raji மாபெரும் சகாப்தம்
LikeReply15 hrs
Arul Arul தொடர் வளர வாழ்துக்கள்..
LikeReply15 hrs
Velayutham Muthukrishnan தங்களது பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..!
LikeReply115 hrs
Poovai Mani உலகமெங்கும் உள்ள
சிவாஜி ரசிகர்களால் இத்தொடர் பாராட்டப்படும்.
வாழ்த்துக்கள் TVR சார்...
LikeReply14 hrs
Ezhichur Aravindan 1953 முதல் ஒவ்வொரு பொங்கல் திருநாள் அன்றும் தன்னை ஆளாக்கிய பெருமாள்முதலியார் வீட்டுக்கு சென்று பொங்கல் பரிசு தந்து வணங்கி திரும்புவது சிவாஜியின் வழக்கம்
LikeReply24 hrs
Poovai Mani இந்த வழக்கத்தை சிவாஜி அவர்களைத் தொடர்ந்து அவரது மகன்கள் ராம்குமார்-பிரபு அவர்களும் தொடர்வதாகக் கேள்வி.
LikeReply14 hrs
KV Rajamany சிவாஜி நாடகத்தில் நூர்ஜகானாக பெண்வேடம் தரித்திருக்கிறார்....அவருக்கு சிவாஜி பட்டத்தை தந்தவர் ஈ வே ரா பெரியார்....அண்ணாவின்.சிவாஜிகண்ட இந்து சாம்ராஜ்ஜியத்தில் நடித்த போது....அந்த நாடகத்தில் பட்டராக நடித்தது அறிஞர் அண்ணா...

No comments: