Showing posts with label 'கலைஞர் என்னும் கலைஞன்' - புத்தகம் வெளியீட்டு விழா. Show all posts
Showing posts with label 'கலைஞர் என்னும் கலைஞன்' - புத்தகம் வெளியீட்டு விழா. Show all posts

Sunday, June 20, 2010

நன்றி..நன்றி..நன்றி..நண்பர்களே...




சென்ற சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் நான் எழுதிய 'கலைஞர் என்னும் கலைஞன்' புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது.கலைஞர் கதை,வசனம் எழுதியுள்ள படங்கள் பல நமக்குத் தெரியும்..ஆனால் தெரியாத படங்கள் அதிகம்.ஆகவே எல்லா படங்களைப் பற்றிய சிறு குறிப்புகள் அடங்கிய சிறு நூல் இது.இனி வரும் நாட்களில் இது குறித்து விரிவாக எழுத ஆசை.அப்படி ஒரு புத்தகம் வருமேயாயின்..அது வரும் நாட்களில் பல இளைஞர்களுக்கு பயன் படு ம் நூலாக அமையக்கூடும்.

புத்தகத்தை கலைமகள் ஆசிரியர் 'கீழாம்பூர்' வெளியிட 'அஜயன் பாலா பெற்றுக் கொண்டார்'

பொன்.வாசுதேவன் (அகநாழிகை) வரவேற்புரை வழங்க..நான் நன்றியுரை வழங்கினேன்.நண்பர் அப்துல்லா தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதுடன் வாழ்த்துரையும் வழங்கினார்.




அஜயன்பாலா பேசுகையில் கலைஞர் அவ்வளவு சின்ன வயதில் சினிமாத்துறையில் வந்ததும் ,'என் அருமைக் கன்னுக்குட்டி' பாடல் அவர் எழுதியது என இப்புத்தகம் பார்த்துத் தான் தெரிந்துக் கொண்டேன் என்றார்.


கீழாம்பூர்..'கலைஞர் சினிமாக்கள் குறித்து வந்துள்ள டிரைலர் இந்த புத்தகம் என்றும்..விரைவில் பெரிய புத்தகமாக இது வர வேண்டும் என்றும் கூறினார்.

அப்துல்லா தன் வாழ்த்துரையில்'இணையம்..நாடகம்,புத்தகம்' என பணி ஒய்வு பெற்றும்..சுறுசுறுப்பாய் செயல்படும் கலைஞன் என்று எனைக் கூறி, இப் புத்தகம் எழுத தகுதிவாய்ந்தவன் நான்'என்றார்.(ஹி...ஹி..சுயதம்பட்டம்)

என் ஏற்புரையில் 'உண்மையில் நான் பேசுவது ஏற்புரை இல்லை நன்றியுரைதான்' என்று கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தேன்.



புத்தக விழாவிற்கு வந்திருந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

தவிர்த்து..அலைபேசியிலும்..மின்னஞ்சலிலும் வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி.