ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Sunday, June 20, 2010
நன்றி..நன்றி..நன்றி..நண்பர்களே...
சென்ற சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் நான் எழுதிய 'கலைஞர் என்னும் கலைஞன்' புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது.கலைஞர் கதை,வசனம் எழுதியுள்ள படங்கள் பல நமக்குத் தெரியும்..ஆனால் தெரியாத படங்கள் அதிகம்.ஆகவே எல்லா படங்களைப் பற்றிய சிறு குறிப்புகள் அடங்கிய சிறு நூல் இது.இனி வரும் நாட்களில் இது குறித்து விரிவாக எழுத ஆசை.அப்படி ஒரு புத்தகம் வருமேயாயின்..அது வரும் நாட்களில் பல இளைஞர்களுக்கு பயன் படு ம் நூலாக அமையக்கூடும்.
புத்தகத்தை கலைமகள் ஆசிரியர் 'கீழாம்பூர்' வெளியிட 'அஜயன் பாலா பெற்றுக் கொண்டார்'
பொன்.வாசுதேவன் (அகநாழிகை) வரவேற்புரை வழங்க..நான் நன்றியுரை வழங்கினேன்.நண்பர் அப்துல்லா தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதுடன் வாழ்த்துரையும் வழங்கினார்.
அஜயன்பாலா பேசுகையில் கலைஞர் அவ்வளவு சின்ன வயதில் சினிமாத்துறையில் வந்ததும் ,'என் அருமைக் கன்னுக்குட்டி' பாடல் அவர் எழுதியது என இப்புத்தகம் பார்த்துத் தான் தெரிந்துக் கொண்டேன் என்றார்.
கீழாம்பூர்..'கலைஞர் சினிமாக்கள் குறித்து வந்துள்ள டிரைலர் இந்த புத்தகம் என்றும்..விரைவில் பெரிய புத்தகமாக இது வர வேண்டும் என்றும் கூறினார்.
அப்துல்லா தன் வாழ்த்துரையில்'இணையம்..நாடகம்,புத்தகம்' என பணி ஒய்வு பெற்றும்..சுறுசுறுப்பாய் செயல்படும் கலைஞன் என்று எனைக் கூறி, இப் புத்தகம் எழுத தகுதிவாய்ந்தவன் நான்'என்றார்.(ஹி...ஹி..சுயதம்பட்டம்)
என் ஏற்புரையில் 'உண்மையில் நான் பேசுவது ஏற்புரை இல்லை நன்றியுரைதான்' என்று கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தேன்.
புத்தக விழாவிற்கு வந்திருந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
தவிர்த்து..அலைபேசியிலும்..மின்னஞ்சலிலும் வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
விழாவை நேரில் பார்ப்பது போன்ற நிழல் படங்களுக்கு நன்றி !
வாழ்த்துக்கள் விரிவான நூலும் விரைவில் வெளிவர வேண்டும்.
விழாவுக்கு 'அப்துல்லா என்னும் அறிஞன்' வந்திருக்கார் போல !
:)
படங்களும் நிகழ்ச்சி தொகுப்பும் அருமை, சார். மிக்க நன்றி. வாழ்த்துக்கள்!
தெரியாமல் போனது வருத்தமே...
வாழ்த்துகள் சார் :)
வாழ்த்துகள் சார்.. அலுவலக வேலை; வர முடியாத சூழல்.. விழா நன்கு நடந்தது அறிந்து மிக மகிழ்ச்சி
வாழ்த்துகள் சார்:)
// கோவி.கண்ணன் said...
விழாவுக்கு 'அப்துல்லா என்னும் அறிஞன்' வந்திருக்கார் போல !
:)
//
ஏன் காலையிலேயே கொ.வெ?!?!?!
மிக்க மகிழ்ச்சி அய்யா...
வாழ்த்துகள் சார்...
எப்படியும் கலந்துக் கொள்ள வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்தேன். அலுவலக வேலை காரணமாக வர முடியவில்லை. மன்னிக்கவும்.
தங்கள் பதிவு நேரில் வர முடியாத குறையை நீக்கிவிட்டது.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் சார் :)
அப்துல்லாவின் கானம் கேட்கவேண்டியதும் மிஸ் ஆகிவிட்டதே! சென்னையில் நான் இருக்கும் நாட்களில் இந்த நிகழ்ச்சி வந்திருக்கக்கூடாதா என்று தோன்றும் அளவு நிகழ்ச்சி சிறப்பாக அமைந்துள்ளது என்பதை உங்கள் பதிவு தெரிவிக்கிறது மறுபடி வாழ்த்துகள் ராதா க்ருஷ்ணன்!
மகிழ்ச்சி..
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் சார்
வாழ்த்துகள் சார். விரைவில் பெரிய புத்தகம் வெளியிட வாழ்த்துகள்.
டிவிஆர் சார், உங்களுக்கு என்அன்பு நிறைந்த வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் நண்பரே!
வருகை புரிந்தவர்கள்,வாழ்த்து தெரிவித்தவர்கள்.ஆதரவு வாக்களித்தவர்கள்..எதிர் வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி
Post a Comment