கலைஞர்கள் திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்த பின்னரே அரசியலில் அதிகம் ஈடுபட ஆரம்பித்தார்கள்.
என்.எஸ்,கே., எம்.ஆர்.ராதா ஆகியோர் பெரியாரின் கொள்கைகளால் கவரப்பட்டவர்கள். பெரியாருக்குப் பின்...எம்.ஆர்.ராதா தி.க.வின் தலைவராக ஆகலாம் என்ற நிலை இருந்தும்...ராதாவால் கை காட்டப்பட்டவர் வீரமணி.
தி.மு.க.வில்...அண்ணா,கலைஞர்,சிவாஜி,கே.ஆர்.ராமசாமி,எஸ்.எஸ்.ஆர்.,ஆகியோர் இருந்தனர்.பின்னர் சிவாஜி விலகினார்...காங்கிரஸ் ஆதரவாளராய் இருந்த எம்.ஜி.ஆர்., உள்ளே வந்தார்.இன்றும் தி.மு.க.வில் திரை உலக சம்பந்தப்பட்டவர்கள் நிறைய உண்டு.ராம.நாராயணன்,நெப்போலியன்,சந்திர சேகர்,தியாகு,குமரி முத்து.(சமீபத்திய ராதாரவி)ஆகியோரை சொல்லலாம். இவர்களுக்கு கழகத்தில்
உரிய மரியாதை தரப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க.,வில் எம்.ஜி.ஆர்., இருந்தவரை நடிகர்களுக்கு பதவியும் குடுத்து அழகு பார்த்தார். திருச்சி சௌந்தரராஜன்.ஐசரி வேலன் ஆகியோரை அமைச்சராகவே ஆக்கினார்.
ஆனால்..இன்று அ.தி.மு.க.,வில்..தேவைப்படும்போது நடிகர்களை பயன்படுத்திக்கொண்டு..பின் கறிவேப்பிலையைப் போல தூக்கி எறியப்படுகிறார்கள்.
அன்று ராமராஜன், நேற்று ராதா ரவி..நாளை எஸ்.வி.சேகர்...(சந்திரன் என்றோ தெரியாது)
இதற்கு காரணம்...நடிகர்கள்...என்று இல்லை...பொதுவாக கலைஞர்கள்..விரைவில் உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்களது தன்மானம்..கேள்விக்குறி ஆகுமேயாயின் ..வெளியே தள்ளப்படுகிறார்கள்..அல்லது வெளியே வருகிறார்கள்.