கலைஞர்கள் திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்த பின்னரே அரசியலில் அதிகம் ஈடுபட ஆரம்பித்தார்கள்.
என்.எஸ்,கே., எம்.ஆர்.ராதா ஆகியோர் பெரியாரின் கொள்கைகளால் கவரப்பட்டவர்கள். பெரியாருக்குப் பின்...எம்.ஆர்.ராதா தி.க.வின் தலைவராக ஆகலாம் என்ற நிலை இருந்தும்...ராதாவால் கை காட்டப்பட்டவர் வீரமணி.
தி.மு.க.வில்...அண்ணா,கலைஞர்,சிவாஜி,கே.ஆர்.ராமசாமி,எஸ்.எஸ்.ஆர்.,ஆகியோர் இருந்தனர்.பின்னர் சிவாஜி விலகினார்...காங்கிரஸ் ஆதரவாளராய் இருந்த எம்.ஜி.ஆர்., உள்ளே வந்தார்.இன்றும் தி.மு.க.வில் திரை உலக சம்பந்தப்பட்டவர்கள் நிறைய உண்டு.ராம.நாராயணன்,நெப்போலியன்,சந்திர சேகர்,தியாகு,குமரி முத்து.(சமீபத்திய ராதாரவி)ஆகியோரை சொல்லலாம். இவர்களுக்கு கழகத்தில்
உரிய மரியாதை தரப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க.,வில் எம்.ஜி.ஆர்., இருந்தவரை நடிகர்களுக்கு பதவியும் குடுத்து அழகு பார்த்தார். திருச்சி சௌந்தரராஜன்.ஐசரி வேலன் ஆகியோரை அமைச்சராகவே ஆக்கினார்.
ஆனால்..இன்று அ.தி.மு.க.,வில்..தேவைப்படும்போது நடிகர்களை பயன்படுத்திக்கொண்டு..பின் கறிவேப்பிலையைப் போல தூக்கி எறியப்படுகிறார்கள்.
அன்று ராமராஜன், நேற்று ராதா ரவி..நாளை எஸ்.வி.சேகர்...(சந்திரன் என்றோ தெரியாது)
இதற்கு காரணம்...நடிகர்கள்...என்று இல்லை...பொதுவாக கலைஞர்கள்..விரைவில் உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்களது தன்மானம்..கேள்விக்குறி ஆகுமேயாயின் ..வெளியே தள்ளப்படுகிறார்கள்..அல்லது வெளியே வருகிறார்கள்.
8 comments:
என்ன ஒரு ஆராய்ச்சி தலைவா...?
கலக்கிட்ட போ...
//ஆனால்..இன்று அ.தி.மு.க.,வில்..தேவைப்படும்போது நடிகர்களை பயன்படுத்திக்கொண்டு..பின் கறிவேப்பிலையைப் போல தூக்கி எறியப்படுகிறார்கள்.
//
அ.தி.மு.க வில் நடிகர்கள் என்று இல்லை. அனைத்து வகை அரசியல்வாதிகளும் குறிபிட்ட கலத்தில் தூக்கி எறிய படுகிறார்கள். நடிகர்களுக்கு என்று மட்டும் ஒரு விதி அங்கு இல்லை.
//தி.மு.க.வில்...அண்ணா,கலைஞர்,சிவாஜி,கே.ஆர்.ராமசாமி,எஸ்.எஸ்.ஆர்.,ஆகியோர் இருந்தனர்.பின்னர் சிவாஜி விலகினார்...காங்கிரஸ் ஆதரவாளராய் இருந்த எம்.ஜி.ஆர்., உள்ளே வந்தார்.இன்றும் தி.மு.க.வில் திரை உலக சம்பந்தப்பட்டவர்கள் நிறைய உண்டு.ராம.நாராயணன்,நெப்போலியன்,சந்திர சேகர்,தியாகு,குமரி முத்து.(சமீபத்திய ராதாரவி)ஆகியோரை சொல்லலாம். இவர்களுக்கு கழகத்தில்
உரிய மரியாதை தரப்பட்டு வருகிறது.//
தாங்கள் சொல்வது எம்.ஆர்.இராதா மகன் சபரிமலை பக்தர் இராதாரவி தானே அவரு இருபது ஆண்டுகளுக்கு முன்னதாகவே திமுக சார்பில் எங்கள் ஊருக்கு பிரச்சாரத்துக்கு வந்தபோது பார்த்திருக்கிறேன்.
இந்த காலத்துல அப்பன் சொல்றத பிள்ளைங்க எங்க கேக்குது!
அதிமுகவில் சிரிப்பு நடிகர் கூட எம்.பி ஆக முடிந்தது. இவர்(சந்திரன்) எம்.பி ஆனதால் திமுகவில் சரத்குமாருக்கு எம்.பி பதவி கிடைத்தது.
சார் அரசியல்வாதிகளே நடிகர்கள் தான், ஒரு வேளை யார் சிறந்த நடிகர் என்பதில் போட்டி வந்து வேளியேற்றபடலாம்...
அடுர் கோபலகிருஷ்ணான் சொன்னது “ஒரு நல்ல நடிகரால் நல்ல அரசியல்வாதியாகவும் நடிக்க முடியும்”..
நன்றாக சம்பாதித்த பின் தானே வெளியேறுகிறார்கள்
//பொதுவாக கலைஞர்கள்..விரைவில் உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்களது தன்மானம்..கேள்விக்குறி ஆகுமேயாயின்.....//
அப்ப அவிங்களுக்குத் தன்மானம் இருக்குங்களா?
வருகைக்கு நன்றி டக்ளஸ்.......
மற்றவர்கள் தூக்கி எறியப் பட்டாலும் ..தேவைப்படும் போது மீண்டும்.அழைக்கப்பட்டு..இவர்களும் பதவி ஆசையில்..பட்ட அவமானங்களை மறந்து ஓடுகின்றனர்.(உ.ம்.- பொன்னையன்,தம்பித்துரை...பட்டியல் நீள்கிறது)
நன்றி சதுக்க பூதம்
வருகைக்கு நன்றி
ஜோதிபாரதி
அக்னி பார்வை
மாண்புமிகு பொதுஜனம்
Post a Comment