Showing posts with label அரசியல்..தேர்தல் 2009. Show all posts
Showing posts with label அரசியல்..தேர்தல் 2009. Show all posts

Thursday, March 26, 2009

தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,இணைகிறது

பா.ம.க., வின் பொதுக்குழு கூடி..அ.தி.மு.க.உடன் கூட்டணியா..பா.ம.க.உடன் கூட்டணியா..என விவாதித்து..தி.மு.க.கூட்டணியுடன் இணைவது என்று முடிவெடுத்தனர்.

அ.தி.மு.க., இலங்கை தமிழர் நலத்திற்கு எதிரான கட்சி என்றும்...சாமான்ய மக்கள் பற்றி கவலைப் படாத கட்சி என்றும்..ராமதாஸ் தெரிவித்தார்.

என்ன..முரண்பாடான செய்தியாய் இருக்கிறது என்கிறீர்களா?

2011 சட்டசபை தேர்தலில்...ராமதாஸின் நடவடிக்கைதான் மேலே குறிப்பட்டுள்ளது.

சரி..இன்றைய நிலை என்ன..

இன்று..சென்னை வானகரத்தில்..வழக்கமாக அ.தி.மு.க., பொதுக்குழு கூடும் இடத்தில் பா.ம.க. பொதுக்குழு கூடியது.அதில்..நடந்த ரகசிய வாக்கெடுப்பில் 2453 வாக்குகள் அ.தி.ம.க., கூட்டணி வேண்டுமென்றும்..117 வாக்குகள் தி.மு.க., கூட்டணி வேண்டுமென்றும் 10 பேர் நடுனிலைமை வகித்ததாகவும் தெரிகிறது.

ஆகவே..நாடாளுமன்றதேர்தலில் பா.ம.க., அ.தி.மு.க.உடன் கூட்டணி இறுதியாகி(கோவி.உறுதி என்ற வார்த்தை தவிர்த்துள்ளேன்)விட்டது.

இன்னும் இரண்டு நாட்களில் பா.ம.க., மத்திய அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் எனத் தெரிகிறது.

இந்நிலையில்... பல மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து...மாநில கட்சிகள் விலகுவது குறித்து சோனியா..முக்கிய மூத்த தலைவர்களுடன் கலந்து ஆலோசித்ததாக தெரிகிறது.