Showing posts with label ஏ.ஆர்.ரஹ்மான்-காமென்வெல்த். Show all posts
Showing posts with label ஏ.ஆர்.ரஹ்மான்-காமென்வெல்த். Show all posts

Saturday, October 16, 2010

மன்னிப்பு கேட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

யாரையும் கவராத காமன்வெல்த் தீம் பாடல்
காமன்வெல்த் போட்டிக்காக தான் போட்டுக் கொடுத்த தீம் பாடலின் ட்யூன் பிரபலமாகமால் போனதற்காக மன்னிப்பும், வருத்தமும் தெரிவிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், காமன்வெல்த் போட்டிக்கான தீம் பாடலின் ட்யூன் சரியில்லை, தரமானதாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

இளைய தலைமுறையினரை மட்டும் குறித்து இந்தப் பாடல் வரிகள் இடம் பெற்று விட்டது. மற்றவர்களையும் அதில்சேர்த்திருக்க வேண்டும்.

இந்தப் பாடலும், ட்யூனும் மக்களைக் கவராமல் போய் விட்டது உண்மைதான். இதற்காக வருத்தப்படுகிறேன். எனது பாடலால் யாராவது ஏமாந்திருந்தால், என்னை மன்னித்து விடுங்கள்.

அடுத்த முறை இதுபோல நேரிடும்போது மிகவும் கவனமாக இருப்பேன்.
அனைவருக்கும் பொருத்தமான பாடலையும், ட்யூனையும் தேர்வு செய்வேன் என்றார் ரஹ்மான்.

காமன்வெல்த் போட்டிக்கான தீம் பாடல் யாரையும் கவரவில்லை என்ற தகவல் பரவியதைத் தொடர்ந்து அதை சரி செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டார் ரஹ்மான். இருப்பினும் இந்தப் பாடல் யாருக்குமே பிடிக்காமல் போய் விட்டது குறிப்பிடத்தக்கது.
(நன்றி தட்ஸ்தமிழ்)

இனி நாம்..
பல மனிதர்கள் பிரபலங்கள் ஆனதும்..தான் செய்வது தான் சரி..தான் செய்ததை புரிந்துக் கொள்ளும் திறன் மற்றவருக்கு இல்லை என்றெல்லாம் புகழ் உச்சிக்கு ஏற மமதையில் பிதற்றுவது உண்டு.இந்நிலையில் பாடல் பிரபலமாகவில்லை..என்பதற்கு..தன் தவறுதான் காரணம் என்று மன்னிப்புக் கோரும் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டுக்கு உரியவர்.அவருக்கு நமது மனமார்ந்த பாராட்டுகள்.
(எல்லாப் புகழுக்கும் இறைவன் காரணம்..)தவறுக்கு ஆண்டவனை இழுக்கவில்லை ரஹ்மான்.