Saturday, October 16, 2010

மன்னிப்பு கேட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

யாரையும் கவராத காமன்வெல்த் தீம் பாடல்
காமன்வெல்த் போட்டிக்காக தான் போட்டுக் கொடுத்த தீம் பாடலின் ட்யூன் பிரபலமாகமால் போனதற்காக மன்னிப்பும், வருத்தமும் தெரிவிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், காமன்வெல்த் போட்டிக்கான தீம் பாடலின் ட்யூன் சரியில்லை, தரமானதாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

இளைய தலைமுறையினரை மட்டும் குறித்து இந்தப் பாடல் வரிகள் இடம் பெற்று விட்டது. மற்றவர்களையும் அதில்சேர்த்திருக்க வேண்டும்.

இந்தப் பாடலும், ட்யூனும் மக்களைக் கவராமல் போய் விட்டது உண்மைதான். இதற்காக வருத்தப்படுகிறேன். எனது பாடலால் யாராவது ஏமாந்திருந்தால், என்னை மன்னித்து விடுங்கள்.

அடுத்த முறை இதுபோல நேரிடும்போது மிகவும் கவனமாக இருப்பேன்.
அனைவருக்கும் பொருத்தமான பாடலையும், ட்யூனையும் தேர்வு செய்வேன் என்றார் ரஹ்மான்.

காமன்வெல்த் போட்டிக்கான தீம் பாடல் யாரையும் கவரவில்லை என்ற தகவல் பரவியதைத் தொடர்ந்து அதை சரி செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டார் ரஹ்மான். இருப்பினும் இந்தப் பாடல் யாருக்குமே பிடிக்காமல் போய் விட்டது குறிப்பிடத்தக்கது.
(நன்றி தட்ஸ்தமிழ்)

இனி நாம்..
பல மனிதர்கள் பிரபலங்கள் ஆனதும்..தான் செய்வது தான் சரி..தான் செய்ததை புரிந்துக் கொள்ளும் திறன் மற்றவருக்கு இல்லை என்றெல்லாம் புகழ் உச்சிக்கு ஏற மமதையில் பிதற்றுவது உண்டு.இந்நிலையில் பாடல் பிரபலமாகவில்லை..என்பதற்கு..தன் தவறுதான் காரணம் என்று மன்னிப்புக் கோரும் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டுக்கு உரியவர்.அவருக்கு நமது மனமார்ந்த பாராட்டுகள்.
(எல்லாப் புகழுக்கும் இறைவன் காரணம்..)தவறுக்கு ஆண்டவனை இழுக்கவில்லை ரஹ்மான்.

27 comments:

R. Gopi said...

நல்ல பதிவு.

எனக்கு வேற ஒன்னு தோணுது. இந்தக் கல்மாடி விவகாரம் மற்ற எல்லாத்தையும் ஓவர் ஷேடோ செய்து விட்டது. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

vasu balaji said...

நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.

பிச்சைப்பாத்திரம் said...

மனுஷேண்டா!

(தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஒரு திரைப்பட வசனத்தில் சாயலில் சொல்லிப் பார்த்தேன்). :)

ரகுமானின் உண்மையான பணிவும் அடக்கமும் கூட அவரின் புகழிற்குக் காரணம்.

சுதர்ஷன் said...

ரகுமானின் இத்தகைய செயல் தான் அவரை இன்னும் உச்சத்தில் வைத்திருகிறது ...

.இதுவும் ஆயுத பூஜை தான் .. கொஞ்சம் சிந்திப்போம் ..இன்று என்ன நாள் ...???

http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html

Jerry Eshananda said...

மன்னிப்பு கேட்கும் அளவுக்கு இது ஒன்றும் பெரிய குற்றமில்லை.......

எஸ்.கே said...

மன்னிப்பு கேட்கும் அளவிற்கு பெரிய விசயம் இல்லையென்றாலும், மன்னிப்பு கேட்கும் இவர் பாராட்டுக்குரியவர்தான்!

Chitra said...

மன்னிப்பு கேட்கும் அளவிற்கு பெரிய விசயம் இல்லையென்றாலும், மன்னிப்பு கேட்கும் இவர் பாராட்டுக்குரியவர்தான்!

...so true!

அபி அப்பா said...

வேற ஒன்னும் இல்லை. மார்கட்டிங் சரியில்லை. அத்தனையே. 80ஆயிரம் கோடி செலவு செய்தபோதும் இதை அத்தனை டிவி சேனலிலும் தினமும் பத்து தடவையாவது போட்டிருந்தா ஹிட் ஆகியிருக்கும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Gopi Ramamoorthy said...
நல்ல பதிவு.

எனக்கு வேற ஒன்னு தோணுது. இந்தக் கல்மாடி விவகாரம் மற்ற எல்லாத்தையும் ஓவர் ஷேடோ செய்து விட்டது. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கோபி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.//

வருகைக்கு நன்றி Bala

Subankan said...

இறுதியில் நீங்கள் சொன்ன வார்த்தைகள் நிஜம் :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சுரேஷ் கண்ணன் said...
மனுஷேண்டா!

(தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஒரு திரைப்பட வசனத்தில் சாயலில் சொல்லிப் பார்த்தேன்). :)

ரகுமானின் உண்மையான பணிவும் அடக்கமும் கூட அவரின் புகழிற்குக் காரணம்.//
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி சுரேஷ் கண்ணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// S.Sudharshan said...
ரகுமானின் இத்தகைய செயல் தான் அவரை இன்னும் உச்சத்தில் வைத்திருகிறது ...

.இதுவும் ஆயுத பூஜை தான் .. கொஞ்சம் சிந்திப்போம் ..இன்று என்ன நாள் ...???

http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html//தங்கள் பின்னூட்டம் அருமை சுதர்ஷன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜெரி ஈசானந்தன். said...
மன்னிப்பு கேட்கும் அளவுக்கு இது ஒன்றும் பெரிய குற்றமில்லை.......//

அவர் தவறே இழைத்திருந்தாலும் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை..ஆனால்..அவர் பண்பாளர் என்பது இதனால் தெரிகிறது..அதைத்தான் நான் கூறியுள்ளேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// எஸ்.கே said...
மன்னிப்பு கேட்கும் அளவிற்கு பெரிய விசயம் இல்லையென்றாலும், மன்னிப்பு கேட்கும் இவர் பாராட்டுக்குரியவர்தான்!//

//Chitra said...
மன்னிப்பு கேட்கும் அளவிற்கு பெரிய விசயம் இல்லையென்றாலும், மன்னிப்பு கேட்கும் இவர் பாராட்டுக்குரியவர்தான்!

...so true!//

உண்மை
உங்கள் வருகைக்கு நன்றி
எஸ்.கே.,
சித்ரா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அபி அப்பா said...
வேற ஒன்னும் இல்லை. மார்கட்டிங் சரியில்லை. அத்தனையே. 80ஆயிரம் கோடி செலவு செய்தபோதும் இதை அத்தனை டிவி சேனலிலும் தினமும் பத்து தடவையாவது போட்டிருந்தா ஹிட் ஆகியிருக்கும்.//

இருக்கலாம்..
வருகைக்கு நன்றி அபி அப்பா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Subankan said...
இறுதியில் நீங்கள் சொன்ன வார்த்தைகள் நிஜம் :)//

நன்றி subankan

Paleo God said...

உயர்ந்த உள்ளம்! :)

ALHABSHIEST said...

"வேற ஒன்னும் இல்லை. மார்கட்டிங் சரியில்லை. அத்தனையே. 80ஆயிரம் கோடி செலவு செய்தபோதும் இதை அத்தனை டிவி சேனலிலும் தினமும் பத்து தடவையாவது போட்டிருந்தா ஹிட் ஆகியிருக்கும்".
அப்படின்னா அத சன் டிவில்லா தயாரிச்சிருக்கணும்

Unknown said...

மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவசியம் இல்லை
இது அவரின் பெருதன்மையை காட்டுகிறது

வந்தியத்தேவன் said...

இப்படியும் ஒரு கதை சொல்கின்றார்கள்.
தன் நாட்டு நிகழ்விற்க்கு ரகுமான் பணம் வாங்கலமா?

இந்தப் பாடலை இசையமைக்க ரஹ்மான் கோரிய தொகை 15 கோடி ரூபா.
சராசரி வருடவருமானமாக 40,000 இற்கு அண்மையாக உழைக்கும் ஒருநாட்டின் (இந்த 40000 உண்மையில் எத்தனை சாதாரணர்களுக்கு சாத்தியமாகக் கிடைக்கிறது என்பது வேறுவிடயம்) வரிப்பணத்தில் நடைபெறும் போட்டிக்கு தலைப்புப்பாடல் இசையமைக்க 15 கோடியை ஒருவர் கோருகிறார் என்றால் அந்தப் பாடலை தான் இசையமைப்பதன் மூலம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டித்தருவேன் என்ற நம்பிக்கையை அவர் வழங்கவேண்டிய கட்டாயம் உண்டு.
இறுதியில் ஐந்தரைக்கோடிக்குத்தான் இசையமைத்துக் கொடுத்தார் என்றாலும் ஐந்தரைக்கோடி பெற்று இசையமைத்த ஒரு பாடல் தோல்வியடைந்தால் அதற்கான பொறுப்பை இசையமைப்பாளர் ஏற்கவேண்டியது கட்டாயம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
உயர்ந்த உள்ளம்! :)//

வருகைக்கு நன்றி ஷங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Siva said...
"வேற ஒன்னும் இல்லை. மார்கட்டிங் சரியில்லை. அத்தனையே. 80ஆயிரம் கோடி செலவு செய்தபோதும் இதை அத்தனை டிவி சேனலிலும் தினமும் பத்து தடவையாவது போட்டிருந்தா ஹிட் ஆகியிருக்கும்".
அப்படின்னா அத சன் டிவில்லா தயாரிச்சிருக்கணும்//

:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வாழ்க்கை வாழ்வதற்கே said...
மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவசியம் இல்லை
இது அவரின் பெருதன்மையை காட்டுகிறது//

உண்மை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வந்தியத்தேவன் said...
இப்படியும் ஒரு கதை சொல்கின்றார்கள்.
தன் நாட்டு நிகழ்விற்க்கு ரகுமான் பணம் வாங்கலமா?

இந்தப் பாடலை இசையமைக்க ரஹ்மான் கோரிய தொகை 15 கோடி ரூபா.
சராசரி வருடவருமானமாக 40,000 இற்கு அண்மையாக உழைக்கும் ஒருநாட்டின் (இந்த 40000 உண்மையில் எத்தனை சாதாரணர்களுக்கு சாத்தியமாகக் கிடைக்கிறது என்பது வேறுவிடயம்) வரிப்பணத்தில் நடைபெறும் போட்டிக்கு தலைப்புப்பாடல் இசையமைக்க 15 கோடியை ஒருவர் கோருகிறார் என்றால் அந்தப் பாடலை தான் இசையமைப்பதன் மூலம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டித்தருவேன் என்ற நம்பிக்கையை அவர் வழங்கவேண்டிய கட்டாயம் உண்டு.
இறுதியில் ஐந்தரைக்கோடிக்குத்தான் இசையமைத்துக் கொடுத்தார் என்றாலும் ஐந்தரைக்கோடி பெற்று இசையமைத்த ஒரு பாடல் தோல்வியடைந்தால் அதற்கான பொறுப்பை இசையமைப்பாளர் ஏற்கவேண்டியது கட்டாயம்//

இப்படி ஒரு கோணம் இருக்கிறதா!!

erodethangadurai said...

இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஈரோடு தங்கதுரை said...
இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com////

வருகைக்கு நன்றி ஈரோடு தங்கதுரை