விஜய் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கோபமாக பேசியது...நமது பதிவர்கள் பதிவுமேல் பதிவு போட்டு..விஜய்யை திட்டியும்...பாராட்டியும் தங்கள் பதிவை சூடாக்கிவிட்டார்கள்.
விஜய்யோ..ரஜினியோ...அவர்கள் சூபர் ஸ்டாராக இருந்தாலும்...மனிதர்கள்..அவர்கள் வாழ்விலும்...கோப,தாபங்கள்...இன்ப..துன்பங்கள் உண்டு என்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்.இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் அன்று ரஜினியும்...கன்னட மக்களை திட்டப்போக.பின் நடந்தவற்றை நாம் அறிவோம்.
சேர்ந்தாற்போல்...தோல்வி படங்களாக தரும் விஜய்..எப்பேர்ப்பட்ட மன உளைச்சலில் இருப்பார்..என சற்று எண்ணிப்பாருங்கள். நீங்கள் செய்யாத ஒரு தவற்றிற்காக..உங்களை மேலதிகாரி கோபித்தால்..வெளியே வந்ததும்...கிடைப்பவர்களை நீங்கள் காய்ச்சி எடுக்க மாட்டீர்களா?..அப்படி விஜய் என்ன சொல்லி விட்டார்...பேசும்பொது..கத்தியதற்கு..'டேய்..கத்தாதே..சைலன்ஸ்..பேசறேன் இல்ல" இதுதான் அவர் சொன்னது.அதுவும் யாரைச் சொன்னார் என்று அறுதியிட்டு கூறமுடியாது.
இந்த சமயத்தில்..வேறொன்றும் கூற ஆசைப்படுகிறேன்..
ஊடகங்கள் சற்று பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்ள வேண்டும்..ரஜினி..எந்திரனுக்கு 25 கோடி வாங்குகிறார்..கமலின் ரேட் 10 கோடி..என்றெல்லாம் மோட்டுவலையைப் பார்த்தபடி எழுதுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
அவர்கள் வாங்கும் சம்பளம் ஓரளவு யூகம்தான்..தயாரிப்பாளர்கள் கொடுக்கத் தயார் எனில்..இவர்கள் வாங்காமல் என்ன செய்வார்கள்.இது படத் தயாரிப்பாளர்கள் தவறு.எல்லாம் ஒன்றாய் சேர்ந்து...எங்களால் இதற்குமேல் தரமுடியாது என்றால்..இவர்களும் கிடைத்தது சரி என நடிப்பர்.ஆகவே நடிகர்களை குறை சொல்லாதீர்கள்.காற்றுள்ள போதே தூற்றிக்கொள்கிறார்கள்..அவ்வளவுதான்.
கடைசியாக...விஜய் நிகழ்ச்சியில்...விஜய்..எல்லோரிடமும்..நண்பனாய் நடந்து கொள்பவர்..அவர் கோபத்தில் கூறியவற்றிற்காக மன்னிப்பும் கேட்டுவிட்டார்.விஷயம் அத்துடன் முடிந்தது..அவ்வளவுதான்.
இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.