விஜய் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கோபமாக பேசியது...நமது பதிவர்கள் பதிவுமேல் பதிவு போட்டு..விஜய்யை திட்டியும்...பாராட்டியும் தங்கள் பதிவை சூடாக்கிவிட்டார்கள்.
விஜய்யோ..ரஜினியோ...அவர்கள் சூபர் ஸ்டாராக இருந்தாலும்...மனிதர்கள்..அவர்கள் வாழ்விலும்...கோப,தாபங்கள்...இன்ப..துன்பங்கள் உண்டு என்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்.இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் அன்று ரஜினியும்...கன்னட மக்களை திட்டப்போக.பின் நடந்தவற்றை நாம் அறிவோம்.
சேர்ந்தாற்போல்...தோல்வி படங்களாக தரும் விஜய்..எப்பேர்ப்பட்ட மன உளைச்சலில் இருப்பார்..என சற்று எண்ணிப்பாருங்கள். நீங்கள் செய்யாத ஒரு தவற்றிற்காக..உங்களை மேலதிகாரி கோபித்தால்..வெளியே வந்ததும்...கிடைப்பவர்களை நீங்கள் காய்ச்சி எடுக்க மாட்டீர்களா?..அப்படி விஜய் என்ன சொல்லி விட்டார்...பேசும்பொது..கத்தியதற்கு..'டேய்..கத்தாதே..சைலன்ஸ்..பேசறேன் இல்ல" இதுதான் அவர் சொன்னது.அதுவும் யாரைச் சொன்னார் என்று அறுதியிட்டு கூறமுடியாது.
இந்த சமயத்தில்..வேறொன்றும் கூற ஆசைப்படுகிறேன்..
ஊடகங்கள் சற்று பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்ள வேண்டும்..ரஜினி..எந்திரனுக்கு 25 கோடி வாங்குகிறார்..கமலின் ரேட் 10 கோடி..என்றெல்லாம் மோட்டுவலையைப் பார்த்தபடி எழுதுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
அவர்கள் வாங்கும் சம்பளம் ஓரளவு யூகம்தான்..தயாரிப்பாளர்கள் கொடுக்கத் தயார் எனில்..இவர்கள் வாங்காமல் என்ன செய்வார்கள்.இது படத் தயாரிப்பாளர்கள் தவறு.எல்லாம் ஒன்றாய் சேர்ந்து...எங்களால் இதற்குமேல் தரமுடியாது என்றால்..இவர்களும் கிடைத்தது சரி என நடிப்பர்.ஆகவே நடிகர்களை குறை சொல்லாதீர்கள்.காற்றுள்ள போதே தூற்றிக்கொள்கிறார்கள்..அவ்வளவுதான்.
கடைசியாக...விஜய் நிகழ்ச்சியில்...விஜய்..எல்லோரிடமும்..நண்பனாய் நடந்து கொள்பவர்..அவர் கோபத்தில் கூறியவற்றிற்காக மன்னிப்பும் கேட்டுவிட்டார்.விஷயம் அத்துடன் முடிந்தது..அவ்வளவுதான்.
இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
30 comments:
வழி மொழிகிறேன் ஐயா
எனக்கு பிடித்த நடிகர்களுள் டாக்டரும் ஒருவர்( மற்றும் பிரபுதேவா) இருவரும் சேர்ந்து மொக்கை போட்டதில் நானே டென்ஷன் ஆகாம உக்காந்திருக்கேன். ஆனா தளபதி எமோஷன் ஆயிட்டாரு. சரி விடுங்க. வில்லு இல்லாமயே வேட்டையாடி பாத்திருவோம்.
சத்தம் போட்டதற்கு வருத்தமும் தெரிவித்துவிட்டார். திருட்டு விசிடியில் டவுண்லோடு செய்துவிட்டு அதைப் பார்த்துவிட்டு குய்யோ முறையோ என்று புலம்பல். மனிதமணம் எவ்வளவு கேவலமானது என்பதைக் காட்டுகிறது. இதைப் பற்றி நான் காலையிலேயே எழுதிவிட்டேன்.
***
இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்
***
.
சார், போன பின்னோட்டத்துல போட்ட முற்றுப்புள்ளி கண்ணுல தெரிஞ்சதா ?
வருகைக்கு நன்றி நசரேயன்
வருகைக்கு நன்றி நவநீதன்
.
நியாயம்தானே!
எது நடந்தாலும் அதை போட்டு அலசி காயவைக்கறதுல நம்ம மக்களுக்கு ஒரு அலாதி விருப்பம்தானே!
நீங்க சொல்ற கருத்தும் சரிதான்!
இதற்காக விஜய் மன்னிப்பு கேட்டதா நான் எங்கேயும் படிக்கலையே! லிங்க் இருந்தால் கொடுங்க!
// மணிகண்டன் said...
***
இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்
***
.//
என் கண் பார்வையில் இதுவரை கோளாறு இல்லை மணி . தெரிகிறதா?
///ஷீ-நிசி said...
இதற்காக விஜய் மன்னிப்பு கேட்டதா நான் எங்கேயும் படிக்கலையே! லிங்க் இருந்தால் கொடுங்க!///
http://kanavukale.blogspot.com/
///மணிகண்டன் said...
சார், போன பின்னோட்டத்துல போட்ட முற்றுப்புள்ளி கண்ணுல தெரிஞ்சதா ?///
.தெரிஞ்சதா
///SUREஷ் said...
சத்தம் போட்டதற்கு வருத்தமும் தெரிவித்துவிட்டார். திருட்டு விசிடியில் டவுண்லோடு செய்துவிட்டு அதைப் பார்த்துவிட்டு குய்யோ முறையோ என்று புலம்பல். மனிதமணம் எவ்வளவு கேவலமானது என்பதைக் காட்டுகிறது. இதைப் பற்றி நான் காலையிலேயே எழுதிவிட்டேன்.//
வருகைக்கு நன்றி SUREஷ்
//ஷீ-நிசி said...
நியாயம்தானே!
எது நடந்தாலும் அதை போட்டு அலசி காயவைக்கறதுல நம்ம மக்களுக்கு ஒரு அலாதி விருப்பம்தானே!
நீங்க சொல்ற கருத்தும் சரிதான்!//
நன்றி
//')) said...
இதற்காக விஜய் மன்னிப்பு கேட்டதா நான் எங்கேயும் படிக்கலையே! லிங்க் இருந்தால் கொடுங்க!
//
முதன்முதலில் வெளியான என்வழியிலும் தற்போது அதிலேயே கொடுத்துள்ள விளக்கத்திலும் தெளிவாகக் கொடுத்துள்ளனர்.
நன்றி SUREஷ்
விஜயின் கோபம் விஜயினுடயது இல்லை. ரசிக சிகாமணிகள் கொடுத்த கிரிடத்தினால் ஏற்பட்ட செருக்குதான்.
அவரால் அநாகரீகமாக நடந்து கொள்ள முடியும் என்கிற தைரியத்தை ரசிகன் தானே கொடுத்தான். விஜயை நொந்து பயன் லேது.
வருகைக்கு நன்றி கோவி
விஜய் என்ன காந்தியா மகாத்மாவா !???அவருக்குக் கோபமே வராதா.
தல,தளபதி ,என்று அவர்களுக்கு சாமரம் வீசும் கூட்டம் இன்னும் மாறவில்லையென்றால்...ரசிகர்கள் எதிர்காலத்தில் மேற்படி ரசிகர்கள் தங்களை கண்டு கோபத்தின் உச்சிக்கே போனாலும் ஆச்சரியம் இல்லை
மன்னிப்பு எதற்கு? தான் யார் என்பதை ரசிகர்களுக்குத் தெரிவித்து அதில் 50% பேரையாவது எழுப்பி,மாற்றியிருக்கிறாரே.அதற்காக நாம் பாராட்டுவோம்
வேறு எத்தனியோ உருப்படியான வேலை இருக்கும் இந்த கால கட்டத்தில் இது தேவையா?
//அவர்கள் வாழ்விலும்... கோப,தாபங்கள்...இன்ப..துன்பங்கள் உண்டு என்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்//
உண்மைதான். நாம் ஏன் இதை மறந்து விடுகிறோம்.
//அவர்கள் வாழ்விலும்... கோப,தாபங்கள்...இன்ப..துன்பங்கள் உண்டு என்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்//
உண்மைதான். நாம் ஏன் இதை மறந்து விடுகிறோம்.
வருகைக்கும்...கருத்துக்களுக்கும் நன்றி goma
வருகைக்கு நன்றி அகநாழிகை
arumai nanba
வருகைக்கு நன்றி Suresh
Post a Comment