Showing posts with label தமிழகம் -அரசியல். Show all posts
Showing posts with label தமிழகம் -அரசியல். Show all posts

Saturday, December 25, 2010

காங்கிரஸ் கூட்டணியுடன் போட்டியிட்டால்...

 திமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டால் காங்கிரஸ் தோற்றுவிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
அண்மையில் தமிழகம் வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியிடம் திமுக கூட்டணி பற்றி இளைஞர் காங்கிரஸார் புகார் கூறினர். அதேபோல், திமுக ஆட்சி சரியில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறிவருகிறார். இவை பற்றி இன்று மதுரை வந்த ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், "திமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிட்டால் காங்கிரஸ் தோற்கும். தை பிறந்தால் வலி பிறக்கும். பொறுத்திருந்து பாருங்கள்" என்று கூறினார். அதற்கு வலி நிவாரணி ஏதேனும் உண்டா என்று செய்தியாளர் கேட்டதற்கு, " நிவாரணி எல்லாம் இல்லை நேரடியாக அறுவைச் சிகிச்சைதான்" என்று சூசகமாகப் பதிலளித்தார் இளங்கோவன்.


இதைப் படிக்க சிரிப்புதான் வருகிறது.


உண்மையில் காங்கிரஸ்..தி.மு.க.,கூட்டணியில் இருந்தால்..தி.மு.க.,வின்வெற்றி வாய்ப்பே பாதிக்கும்.

Monday, November 8, 2010

காங்கிரஸை கழட்டி விடுங்கள்

வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,தலைமையில் ஆன கூட்டணி தொடருமா? என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல.அனைவரின் சந்தேகமும் இப்படித்தான் இருக்கிறது.
அதுவும்..ஒவ்வொரு நாளும் இளங்கோவன் பேச்சு,ராகுலின் நடவடிக்கைகள் இந்த சந்தேகத்தை எழுப்புகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் தனியே நின்று காங்கிரஸ் 22 இடங்களைப் பிடித்துவிட்டதாம்..அதே போல மற்ற மாநிலங்களிலும் நடைபெறலாம் என நினைக்கிறது ராகுல் வட்டாரம்.தமிழர்கள் இ.வா., என நினைக்கிறார் போலும்.
அவ்வப்போது இவர்களின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தும் போது யாரேனும் ஒரு மத்திய அமைச்சர் கலைஞரை சந்திக்கிறார்.உடன் கூட்டணியில் பிரச்னையில்லை என்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியினருக்கு..அவர்கள் இருக்கும் கூட்டணியே வெல்லும் என்ற எண்ணம் வலுத்துவிட்டது.ஆனால் தனியே நின்றால் டிபாசிட் கூட தேறாது என அனுபவசாலிகளுக்குத் தெரியும்.
சற்று நிலமையை உற்று நோக்கினால்..இன்று ஒவ்வொரு தொகுதியிலும் கிட்டத்தட்ட 5000 முதல் 10000 வரை இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸின் போக்குப் பிடிக்காமல் அவர்கள் எங்கு நின்றாலும் எதிர்த்து வாக்களிக்கும் மக்கள் உள்ளனர்.பலதொகுதிகளில் இம்முறை வெற்றியை இவர்கள் தான் தீர்மானிப்பர் என்று தோன்றுகிறது.
தி.மு.க., வின் வாக்கு வங்கி அப்படியே இருந்தாலும்..அது தனித்து நின்று வெற்றி பெற வேண்டுமாயின் மூன்றாவது கூட்டணி உருவானால் சாதகம்.
காங்கிரசுடன் கூட்டணி தொடர்ந்தால்..தனிப்பட்டு எக்கட்சியும் இன்றி..தேர்தல் அன்று யாருக்கு ஓட்டளிக்கலாம் என்று தீர்மானிக்கும் காமன் மேன் ஓட்டுகள் தி.மு.க.,விற்குக் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகலாம்.
இந்நிலையில்..காங்கிரஸின் பூச்சாண்டித்தனத்திற்கு பயப்படாமல் தி.மு.க., காங்கிரஸை கழட்டிவிட வேண்டும்.அப்படி செய்தால் தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு கூடலாம்.
தி.மு.க., வைத் தேடி வரும் தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கட்டும்.
ஒருவேளை ..காங்கிரஸ் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து கூட்டணி அமைக்குமாயின்..கூட்டணி அரசே அமைக்கும் சந்தர்ப்பம் வரலாம். ஜெ தலைமையில் எவ்வளவு நாட்கள் அந்த ஆட்சி நீடிக்கும் என அனைவரும் அறிவோம்.(ஆமாம்..அப்படி ஒரு நிலை வருமாயின்..ஜெ யுடன் கூட்டணிக் கூடாது என்ற ஒரே காரணத்தில் தனிக்கட்சி ஆரம்பித்த பசி நிலை என்னவாகும்?)
எல்லாவற்றையும் மீறி காங்கிரஸ் உடன் தி.மு.க., கூட்டணி நீடிக்குமே யாயின்..தி.மு.க., வை யாராலும் காப்பாற்ற முடியாது.

(டிஸ்கி..மாறன் பிரதர்ஸ் மூலம் கடைசி நிமிடத்தில் ரஜினியை வைத்து தி.மு.க., ஆதரவைத் தேடும் என்றும் தோன்றுகிறது)