Monday, November 8, 2010

காங்கிரஸை கழட்டி விடுங்கள்

வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,தலைமையில் ஆன கூட்டணி தொடருமா? என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல.அனைவரின் சந்தேகமும் இப்படித்தான் இருக்கிறது.
அதுவும்..ஒவ்வொரு நாளும் இளங்கோவன் பேச்சு,ராகுலின் நடவடிக்கைகள் இந்த சந்தேகத்தை எழுப்புகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் தனியே நின்று காங்கிரஸ் 22 இடங்களைப் பிடித்துவிட்டதாம்..அதே போல மற்ற மாநிலங்களிலும் நடைபெறலாம் என நினைக்கிறது ராகுல் வட்டாரம்.தமிழர்கள் இ.வா., என நினைக்கிறார் போலும்.
அவ்வப்போது இவர்களின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தும் போது யாரேனும் ஒரு மத்திய அமைச்சர் கலைஞரை சந்திக்கிறார்.உடன் கூட்டணியில் பிரச்னையில்லை என்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியினருக்கு..அவர்கள் இருக்கும் கூட்டணியே வெல்லும் என்ற எண்ணம் வலுத்துவிட்டது.ஆனால் தனியே நின்றால் டிபாசிட் கூட தேறாது என அனுபவசாலிகளுக்குத் தெரியும்.
சற்று நிலமையை உற்று நோக்கினால்..இன்று ஒவ்வொரு தொகுதியிலும் கிட்டத்தட்ட 5000 முதல் 10000 வரை இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸின் போக்குப் பிடிக்காமல் அவர்கள் எங்கு நின்றாலும் எதிர்த்து வாக்களிக்கும் மக்கள் உள்ளனர்.பலதொகுதிகளில் இம்முறை வெற்றியை இவர்கள் தான் தீர்மானிப்பர் என்று தோன்றுகிறது.
தி.மு.க., வின் வாக்கு வங்கி அப்படியே இருந்தாலும்..அது தனித்து நின்று வெற்றி பெற வேண்டுமாயின் மூன்றாவது கூட்டணி உருவானால் சாதகம்.
காங்கிரசுடன் கூட்டணி தொடர்ந்தால்..தனிப்பட்டு எக்கட்சியும் இன்றி..தேர்தல் அன்று யாருக்கு ஓட்டளிக்கலாம் என்று தீர்மானிக்கும் காமன் மேன் ஓட்டுகள் தி.மு.க.,விற்குக் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகலாம்.
இந்நிலையில்..காங்கிரஸின் பூச்சாண்டித்தனத்திற்கு பயப்படாமல் தி.மு.க., காங்கிரஸை கழட்டிவிட வேண்டும்.அப்படி செய்தால் தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு கூடலாம்.
தி.மு.க., வைத் தேடி வரும் தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கட்டும்.
ஒருவேளை ..காங்கிரஸ் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து கூட்டணி அமைக்குமாயின்..கூட்டணி அரசே அமைக்கும் சந்தர்ப்பம் வரலாம். ஜெ தலைமையில் எவ்வளவு நாட்கள் அந்த ஆட்சி நீடிக்கும் என அனைவரும் அறிவோம்.(ஆமாம்..அப்படி ஒரு நிலை வருமாயின்..ஜெ யுடன் கூட்டணிக் கூடாது என்ற ஒரே காரணத்தில் தனிக்கட்சி ஆரம்பித்த பசி நிலை என்னவாகும்?)
எல்லாவற்றையும் மீறி காங்கிரஸ் உடன் தி.மு.க., கூட்டணி நீடிக்குமே யாயின்..தி.மு.க., வை யாராலும் காப்பாற்ற முடியாது.

(டிஸ்கி..மாறன் பிரதர்ஸ் மூலம் கடைசி நிமிடத்தில் ரஜினியை வைத்து தி.மு.க., ஆதரவைத் தேடும் என்றும் தோன்றுகிறது)

44 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஒருவேளை ..காங்கிரஸ் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து கூட்டணி அமைக்குமாயின்..கூட்டணி அரசே அமைக்கும் சந்தர்ப்பம் வரலாம். ஜெ தலைமையில் எவ்வளவு நாட்கள் அந்த ஆட்சி நீடிக்கும் என அனைவரும் அறிவோம்.(ஆமாம்..அப்படி ஒரு நிலை வருமாயின்..ஜெ யுடன் கூட்டணிக் கூடாது என்ற ஒரே காரணத்தில் தனிக்கட்சி ஆரம்பித்த பசி நிலை என்னவாகும்?)//

டிவிஆர் ஐயா,

மூப்பனார் த.மா.கா (எதுக்கு) தொடங்கினார்....?
ஜெயலலிதாவோட கூட்டணி வச்சதுக்கு...

ப.சிதம்பரம் (எதுக்கு) க.ஜ.பே தொடங்கினார்?
ஜெயலலிதாவோட கூட்டணி வச்சதுக்கு...

பின்னர் மூப்பனாரே போயி ஜெயலலிதாவோட கூட்டணி வச்சார்... வாசன் தொடந்துக்குட்டார்...

அதுமாதிரி ப.சிதம்பரம் வச்சா வியப்படைய முடியுமா?
:)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//சற்று நிலமையை உற்று நோக்கினால்..இன்று ஒவ்வொரு தொகுதியிலும் கிட்டத்தட்ட 5000 முதல் 10000 வரை இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸின் போக்குப் பிடிக்காமல் அவர்கள் எங்கு நின்றாலும் எதிர்த்து வாக்களிக்கும் மக்கள் உள்ளனர்.பலதொகுதிகளில் இம்முறை வெற்றியை இவர்கள் தான் தீர்மானிப்பர் என்று தோன்றுகிறது.
//

சரியான கணிப்பு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜோதிபாரதி..நீண்டநாட்கள் கழித்து வந்திருக்கிறீர்கள்.
மூப்பனார் ஜெ யுடன் கூட்டணை வைத்ததும் பசி த்னித்து நின்று அதில் சேராது தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துக்கொண்டார்.
பசி யின் அந்நிலை தொடருமா?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//(டிஸ்கி..மாறன் பிரதர்ஸ் மூலம் கடைசி நிமிடத்தில் ரஜினியை வைத்து தி.மு.க., ஆதரவைத் தேடும் என்றும் தோன்றுகிறது) //

ரசினிக்கு அந்த நெலம வரப்புடாதுன்னு ஆண்டவன... அண்ணாமலைய... பாபாவ வேண்டிக்கிறேன்.

ILA(@)இளா said...

சஞ்சய்யின் பின்னூட்டம் என்னவாயிருக்கும்? காத்திருங்கள்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//காங்கிரஸ் கட்சியினருக்கு..அவர்கள் இருக்கும் கூட்டணியே வெல்லும் என்ற எண்ணம் வலுத்துவிட்டது.ஆனால் தனியே நின்றால் டிபாசிட் கூட தேறாது என அனுபவசாலிகளுக்குத் தெரியும்//

இந்த கட்டுரையிலயே ஹைலைட்டான விசயம் இதுதான் ஐயா...

எத்தனை முறை வேண்டுமானாலும் வழிமொழியத்தயாரா இருக்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// அத்திவெட்டி ஜோதிபாரதி said...
//காங்கிரஸ் கட்சியினருக்கு..அவர்கள் இருக்கும் கூட்டணியே வெல்லும் என்ற எண்ணம் வலுத்துவிட்டது.ஆனால் தனியே நின்றால் டிபாசிட் கூட தேறாது என அனுபவசாலிகளுக்குத் தெரியும்//

இந்த கட்டுரையிலயே ஹைலைட்டான விசயம் இதுதான் ஐயா...

எத்தனை முறை வேண்டுமானாலும் வழிமொழியத்தயாரா இருக்கிறேன் ///


நன்றி ஜோதிபாரதி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ILA(@)இளா said...
சஞ்சய்யின் பின்னூட்டம் என்னவாயிருக்கும்? காத்திருங்கள்//

:)))

bandhu said...

//சற்று நிலமையை உற்று நோக்கினால்..இன்று ஒவ்வொரு தொகுதியிலும் கிட்டத்தட்ட 5000 முதல் 10000 வரை இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸின் போக்குப் பிடிக்காமல் அவர்கள் எங்கு நின்றாலும் எதிர்த்து வாக்களிக்கும் மக்கள் உள்ளனர்.பலதொகுதிகளில் இம்முறை வெற்றியை இவர்கள் தான் தீர்மானிப்பர் என்று தோன்றுகிறது.
//
I strongly disagree! என்னை தவிர எவனுக்கு என்ன வந்தாலும் எனக்கு கவலையில்லை. ஏன்னா நான் தமிழன்!
Also, கருணாநிதிக்கு காங்கிரஸ் தேவை அதிகம். காங்கிரஸ்-க்கு கருணாநிதி தேவை குறைவு. மாநில ஆட்சியை விட எங்கே spectrum ஊழல் தொல்லை தருமோ என்ற கவலையால் காங்கிரஸ் தயவு கருணாநிதிக்கு அதிகம் தேவை.
இது தான் நிதர்சனம்

கோவி.கண்ணன் said...

//(டிஸ்கி..மாறன் பிரதர்ஸ் மூலம் கடைசி நிமிடத்தில் ரஜினியை வைத்து தி.மு.க., ஆதரவைத் தேடும் என்றும் தோன்றுகிறது)//

இரஜினி அந்த அளவுக்கெல்லாம் இவா இருக்கமாட்டார் மாறன்களின் உறவு எந்திரன் வரை தான் என்பதில் இரஜினி தெளிவாக இருப்பார் என்றே நினைக்கிறேன்

Thamizhan said...

தமிழ்நாட்டில் காங்கிரசிற்குச் சமாதி கட்டத்துடிக்கும் இளங்கோவனை விட்டு வேடிக்கை பார்க்க வேண்டும். நடிகையிடம் அவன் அம்மாவிற்கு வேண்டுமானால் மரியாதை கிடைக்கும்,அவனுக்கு என்ன கிடைக்கும் என்பது அனைவர்க்கும் தெரியும். அதோடு காங்கிரசைக் குழி தோண்டி புதைத்து விடலாம். காங்கிரசை எதிர்த்து நல்லவர்களை நிறுத்தி காங்கிரசின் கதையைத் தமிழகத்தில் முடிக்க வேண்டியதுதான்.காங்கிரசு யார் கூட சேர்ந்தாலும் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டியதுதான் இன்றைய முதலாவது கடமை.

Anonymous said...

//காங்கிரஸ் கட்சியினருக்கு..அவர்கள் இருக்கும் கூட்டணியே வெல்லும் என்ற எண்ணம் வலுத்துவிட்டது.ஆனால் தனியே நின்றால் டிபாசிட் கூட தேறாது என அனுபவசாலிகளுக்குத் தெரியும்//

//காங்கிரசு யார் கூட சேர்ந்தாலும் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டியதுதான் இன்றைய முதலாவது கடமை.//

Congress Party and congressman should be vanished/defeated from tamilnaadu, because Congress revenging Tamil Naadu- Cauvery , Mullai Periyaar, Paalar, Katcha Theevu, Fisherman attack and Srilankan tamils repurbishment/rehabilitation...etc.
I am the first one started the ground work last 50 days before., when you all are??????... Let start form us! We show Tamilians Who we are!

சிவா said...

அரசியல் பரமபதத்தில் யார் ஜெயித்தாலும் யார் தோற்றாலும் பாம்பு கொத்துவதென்னவோ பொதுமக்களாகிய நம்மைத்தான்!

தமிழ்ச் செல்வன்ஜீ said...

மிக்க நன்றி இப்படி ஒரு கட்டுரை யார் எழுதுவார் என்று காத்திருந்தேன்.தமிழக மக்களின் தலையெழுத்து மாற்றி மாற்றி இரு கழகங்களின் கையில் ஆட்சியை கொடுத்து விட்டு சீரழிந்து நிற்பது,இரு கழகங்களின் தலையெழுத்து காங்கிரஸிடம் மண்டியிட்டு ஆட்சி பிட்சி பெறுவது. ஆனால் இம்முறை காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் எந்த கட்சியும் தோற்கும் என்பதே உறுதியான உண்மை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி sai கோகுல கிருஷ்ணன்..
நான் நாடாளுமன்ற தேர்தலிலிருந்து காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என இடுகைகள் இட்டு வருபவன்.
உதாரணத்திற்கு பார்க்க
http://tvrk.blogspot.com/2009/05/blog-post_08.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Bandhu
கோவி.கண்ணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Thamizhan
சிவா
தமிழ்ச் செல்வன்ஜீ

butterfly Surya said...

பீகார் முடிவுகளுக்கு பிறகே காங்கிரஸ் முடிவு எடுக்க போகிறதாம்.

தேமுதிகவுடன் கூட்டு சேரலாம். அல்லது இந்த கூட்டணியே தொடரலாம்.

ஜெ + தேமுதிக கூட்டணி சேர்ந்தால் திமுக வெற்றி பாதிக்கும்.

டிசம்பர் வரை பொறுத்திருப்போம்.

SanjaiGandhi™ said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

உங்க பதிவு அளவுக்கு ஒரு பெரிய பின்னூட்டம் போட்டேன்.. பப்ளிஷ் ஆகலை.. :((

SanjaiGandhi™ said...

ஆனாலும் ஒன்னு சொல்லிட்டுப் போய்டறேன். சில இணைய அரசியல் வித்துவானுங்கள குஷிப் படுத்த நீங்க என்ன வேணாலும் எழுதலாம் ஐயா. நிஜம் என்ன என்று உங்க தலைவருக்கு தெரியும். அந்த 5000 முதல் 10000 ஓட்டுக் கணக்குப் படிச்சிட்டு அடக்க முடியாம சிரிச்சிட்டேன். :)

தைரியம் இருந்தா உங்க தலைவரை கூட்டணியில் இருந்து வெளியேற சொல்லுங்க. அம்புட்டு தான். :))

கே.ஆர்.பி.செந்தில் said...

காங்கிரசை கை கழுவுவோம் ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சஞ்செய்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருப்பதில் தவறில்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் மணி,தங்கம்,இளங்கோ எப்படித் தோற்றார்கள்?
முதலில் தோற்றதாக அறிவிக்கப்பட்டவர் ப.சி.,
இவர்கள் தோற்றதற்கான காரணம் உள்ளங்கை நெல்லிக்கனி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
butterfly Surya
கே.ஆர்.பி.செந்தில்

murugan said...

நம்ம அரசியல கணிக்க முடிய வில்லை ....சரியான எதிர் கட்சி நம்மிடம் இல்லை என்பதே உண்மை ...அம்மாவெல்லாம் ஒரு அரசியல்வாதி என்று சொல்வதே வெட்க கேடு ....ஒரு ஓட்டில் வாஜ்பாயை தோற்கடித்த புண்ணியவதி ...என் .வாரிசு அரசியலுக்கு வந்தால் நடு ரோட்டில் சாட்டையால் அடிங்கள் என டாக்டர் ஐயா சொன்னார் ...அவர் சொன்னபடி நடந்தாரா.. நாளைய முதல்வர் என சொல்லி கொண்டு கனவில் மிதக்கும் ஐயா விஜயகாந்த் கட்சியில் அவர் மனைவியும் மைத்துனரும் பண்ணும் அட்டகாசம் நமக்கும் தெரியும் ...எவன் யோக்கியன் ... கம்யுனிஸ்டுகள் எந்த பக்கம் சாய்ந்தால் நாலு சீட்டு கிடைக்கும் என்று கணக்கு பண்ணி கொண்டு இருக்கிறார்கள் ...சரி பாரதீய ஜனதா கட்சி இன்று தமிழகத்தில் நன்றாக வளர்ந்திருக்கலாம். திமுகாவுடன் சேர்ந்து ஒரே அணியில் நின்று சில இடங்களை பிடித்து வாஜ்பாய் அட்சி செய்த போது இவர்கள் ஆடிய ஆட்டம் தான் என்ன ...என்னமோ இவர்களால் தான் வெற்றி பெற்ற மாதிரி அன்று திமுகாவை மதிகாதழல் தான் அன்று திமுகா காங்கிரஸ் பக்கம் போய் எல்லாமே தலைகீழாக போய் விட்டது....இன்றும் அதே தவறை தான் காங்கிரேசும் செய்கிறது ....எல்லோரும் இன்று காங்கரஸ் தனித்து நின்று பார்க்கட்டும் ... .இரண்டு கழகங்களுக்கும் சரியான மாற்று கட்சி நம்மிடம் இல்லை என்பதே உண்மை...அம்மா ஆட்சியை நினைத்தால் கலைஞர் ஆட்சி எவ்வளவோ தேவலை என்பதே என் கணிப்பு ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//murugan said...

அம்மா ஆட்சியை நினைத்தால் கலைஞர் ஆட்சி எவ்வளவோ தேவலை என்பதே என் கணிப்பு ...//

இதைச்சொன்னாத்தான் சிலர் நம்மை மனுஷ ஜாதியா நீங்க என்கிறார்கள்

SanjaiGandhi™ said...

ஐயா மன்னிச்சிடுங்க. என்னை மாதிரி சின்ன பசங்க சமயத்துல குத்து மதிப்பா பேசறது பெரிய ஆச்சர்யம் இல்லை. ஆனா உங்கள மாதிரி அனுபவம் வாய்ந்த பெரியவங்க அதே மாதிரி பேசறது வருத்தமா இருக்கு. நீங்க பதிவுகளில் மட்டுமே செய்தி படிக்கிறிங்களோன்னு சந்தேகப் பட வைக்கிறிங்க.

சிதம்பரம் தோல்வியுற்றதாக அறிவிக்கப் படவே இல்லை. அது தவறான தகவல்.

இளங்கோவன் தோல்விக்கு 2 காரணங்கள் தான். 1. திமுக அரசின் தொடரும் சாதனையான அதிகாரப் பூர்வ மின்வெட்டு. இளங்கோவன் மட்டுமில்லை, திமுகவின் கரூர் பழனிச்சாமி ( அதுவும் கிருஷ்ணகிரி வாசியாகிவிட்ட தம்பிதுரையிடம் ) , பொள்ளாச்சி சண்முகசுந்தரம் ஆகியோர் படுதோல்வி அடையவும் உங்க மின் வெட்டு தான் காரணம். அதனால் தான் தெளிவாக கொங்கு மண்டலம் காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்டது.
2. ஜாதிவெறி மற்றும் கொங்கு முன்னேற்றக் கழகத்தின் தற்காலிக எழுச்சி. இளங்கோவன் எப்போதும் திமுகவுக்கு சிம்ம சொப்பனம் என்பதால் பாதி வெள்ளாளக் கவுண்டர்கள் கொமுகவுக்கு மீதி வெள்ளாளக் கவுண்டர்கள் மதிமுகவின் கணேசமூர்த்திக்கும் வாக்களித்து அவரை ஜெயிக்க வச்சாங்க.

இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தமிழ்நாட்டு அரசியலில் 1% கூட பாதிப்பை எற்படுத்துவதில்லை. இணைய அரசியல் வித்துவான்கள் யாரும் ஓட்டுக் கூடப் போடுவதில்லை என்பதை தெரியப் படுத்த விரும்புகிறேன்.

மணி, தங்கபாலு தோல்விக்கும் இலங்கை விவகாரம் 1% கூட காரணமில்லை.

போன வருஷமே எழுதின பதிவு. மீதிய இங்க படிச்சிக்கலாம்.
http://www.congress.sanjaigandhi.com/2009/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/

T.V.ராதாகிருஷ்ணன் said...

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பற்றி ஹிந்து பத்திரிகையின் அப் டு டேட் செய்திகள்லே சிதம்பரம் கிட்டத்தட்ட 4000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி என அறிவித்தது பொய்யானால்..நான் குத்துமதிப்பு இடுகையாளன் தான்

Rajaraman said...

ஏங்க சார் மு.க. குடும்பத்து மேல் உங்களுக்கு என்ன அவ்வளவு கோபம். காங்கிரசை கழட்டி விட்டு அப்புறம் இந்த வயசில் குடும்பத்தோடு ஜெயிலில் கலி திங்க முடியுமா அவரால். பாவம் சார் அவர்.

SanjaiGandhi™ said...

//நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பற்றி ஹிந்து பத்திரிகையின் அப் டு டேட் செய்திகள்லே சிதம்பரம் கிட்டத்தட்ட 4000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி என அறிவித்தது பொய்யானால்..நான் குத்துமதிப்பு இடுகையாளன் தான் //

ஹிந்து தான் தேர்தல் கமிஷனின் அதிகாரப் பூர்வ பத்திரிக்கையா சார்? தேர்தல் அதிகாரி அறிவித்தாரா சொல்லுங்கள். ஏற்றுக் கொள்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

In 2009 Parliamentary elections, it was reported that Chidambaram has pressurised the Returning Officer of Sivaganga and doctored the poll results in his favour. AIADMK candidate Kannappan who lost in the poll demanded recounting of votes, which was declined
[(Wickiepedia)

T.V.ராதாகிருஷ்ணன் said...

http://www.thaindian.com/newsportal/politics/chidambaram-losses-then-wins-seat-in-india-election-2009_100193480.html

SanjaiGandhi™ said...

//it was reported that Chidambaram has pressurised the Returning Officer of Sivaganga and doctored the poll results in his favour.//

யார் ரிப்போர்ட் பண்ணது? அந்த அலுவலர் பேர் என்ன? சென்சிடிவ் விஷயங்களில் விக்கிபீடியாவை ஆதாரம் காட்ட முடியாது என்பது பாலபாடம். அதில் அந்த அலுவலர் பெயர் டி.வி.ஆர் ஐயா எனவும் எழுத முடியும் சார். இதுக்கு ஹிந்து ரிப்போர்ட்டே மேல் சார். தேர்தல் கமிஷன் அறிவிப்பைக் காட்டுங்க. தோல்வி என்று அவர்கள் அறிவிக்காமல் பிறருக்கு தெரிய 1% கூட வாய்ப்பில்லை. எனவே நீங்களும் ஹிந்துவும் விக்கிபீடியாவும் சொல்வது உண்மை என்றால் தேர்தல் அலுவலர் அறிவ்விச்சிருந்தா தான் உங்க எல்லாருக்கும் தெரியும். அந்த அறிவுப்பு எங்க இருக்கு? அறிவித்த அலுவலர் யார்?

T.V.ராதாகிருஷ்ணன் said...

sorry sanjey..இந்த விவகாரத்தை இதற்குமேல் இழுத்துச் செல்ல விருப்பமில்லை.
ப.சி., வெற்றி பெற்றார்...சரிதானே..அதுவும் சொந்த தொகுதியில் மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில்

SanjaiGandhi™ said...

ஐயா, திரும்பத் திரும்ப நீங்க இணைய தளங்களின் சுட்டியைத் தான் தரிங்க. தேர்தல் கமிஷன் அறிவிக்காம இவர்களுக்கு எப்படித் தெரியும்?

ராசா 1.70 லட்சம் கோடிகள் கொள்ளை அடித்ததாக பல செய்திதள சுட்டிகள் என்னால் தர முடியும். அதை ஏத்துக்குவீங்களா?

சிதம்பரம் தோல்வி என அறிவிக்கப் பட்டு பின் வெற்றி என அறிவிக்கப் பட்டது நிஜம் என்றால் ஏன் அதிமுக கோர்ட்டுக்கு செல்லவில்லை? சிதம்பரம் என்றால் ஜெயலலிதாவுக்கு எட்டிக்காய் என்பது உங்களுக்கு தெரியுமே. ஏன் அவருக்கெதிரா வழக்குத் தொடுக்கலை?

SanjaiGandhi™ said...

//sorry sanjey..இந்த விவகாரத்தை இதற்குமேல் இழுத்துச் செல்ல விருப்பமில்லை.
ப.சி., வெற்றி பெற்றார்...சரிதானே..அதுவும் சொந்த தொகுதியில் மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் //

இல்லை சார். இது சரியில்லை. நீங்க குற்றம்சாட்டி இருக்கிங்க. ஆதாரம் தர வேண்டியது உங்கள் கடமை. இல்லை என்றால் பிறர் சொன்னதைக் கேட்டு தவறான குற்றம் சொல்லிவிட்டதாக நீங்க ஒப்புக் கொள்ள வேண்டும். இதில் இழுத்து செல்ல என்ன இருக்கு?. உங்களால் ஆதாரம் தர முடியாதென்றால் குற்றம் சொல்லி இருக்கக் கூடாது. உங்களைப் போன்றவர்களுக்கு இது அழகல்ல. காழ்ப்புணர்ச்சி இருந்தால் யாரும் யாரைப் பற்றியும் எதுவுல் சொல்லலாம் என இருக்கக் கூடாது.

ஆதாரம் தரமுடியவில்ல என்ற அளவில் உங்கள் குற்றசாட்டு பொய் என்பதை நான் தெளிவாக்கிவிட்டேன். அவ்வளவு தான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Daily Mirror, Editorial, May 18, 2009-06-18
Shoe attacks can lead to slippery victories While the Indian election was declared free and fair , the victory of Senior Congress leader and Home Minister P. Chidambaram had led into a major controversy. On Saturday morning the election officials declared that Chidambaram- victim of a Bush-style shoe attack in the run up to polls – was defeated by AIADMK candidate Raja Kannappan by over 3000 voters in Sivaganga electorate in Tamil Nadu. It was confirmed on a second recount as well. However a third recount done on the request of Chidambaram saw him leading with a slender 3,354 vote margin with 3,34,348 votes against 3,30,994 by Kannappan.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ப.சிதம்பரத்திற்கும் எனக்கும் வாய்க்கால் தகறாரோ,வரப்பு தகறாரோ இல்லை.பின் ஏன் தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி.
சாதாரணமாக..நியூஸ் ஏஜென்சிஸ்,பத்திரிகை செய்திகள் (நடுநிலை) ஆகியவைதான் நம்மில் பெரும்பாலோர் படிக்கிறோம்.
அதன்படி வந்த ரிபோர்ட்டுகளே நான் சொன்னது.
ஏன்ஐ நியூஸ் ஏஜென்சியும் நான் எழுதியதைத்தான் சொன்னது.
மற்றபடி எந்த தேர்தல் அதிகாரி சொன்னர் என்ன அதற்கு ஆதாரம் என்ற குதர்க்கமான கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.
இந்த பிரச்னை இத்துடன் முற்றுபுள்ளி வைக்கப்பட்டது

SanjaiGandhi™ said...

டென்ஷன் ஆவாதிங்க சார். உங்களால ஆதாரம் தர முடியலைனா குற்றம் சொல்லக் கூடாதில்லையா?. ஏஜென்சி சொல்லுதுன்னு போற போக்குல யார் மேல வேணாலும் குற்றம் சொல்லலாமா என்ன? அதே ஏஜென்ஸிகள் தான் ராசா 1.70 லட்சம் கோடி சுருட்டியதையும் சொல்கின்றன. அப்டின்னா திமுகவை சேர்ந்த அமைச்சர் அதை சுருட்டினார் என்று நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

நான் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர். எங்கள் கட்சியின் மூத்த தலைவர் மீது நீங்கள் குற்றம் சுமத்துவது தவறாக இருக்கும் பட்சத்தில் அதை தவறு என நிரூபிப்பது என் கடமை. அதைத் தான் நான் செய்தேன்.

உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்கள் கட்சியை சேர்ந்த ராசாவின் ஊழலுக்கு மறுப்பும் விளக்கமும் அளிக்கலாம். நான் உங்களைப் போல் ஏஜென்ஸி செய்திகளை எல்லாம் ஆதாரம் காட்டவில்லை. CAG ரிப்போர்ட்டையே ஆதாரமாகக் காட்டத் தயாராக இருக்கிறேன்.

உண்மையை சொல்லவேண்டுமென்றால் ராசாவைக் கழட்டி விடுங்கள் என நான் தான் பதிவு எழுதி இருக்க வேண்டும்.

மன்னிச்சிடுங்க சார். எனக்கு கட்சி பற்று ரொம்ப அதிகம். எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் ( திமுகவினரின் போலி ஈழப் பாசம் போல்) என் கட்சியையும் தலைவர்களையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

மேலும், ஒரு சென்சிடிவான கட்டுரையை பொதுவில் வைத்தால் விவாதம் வரத்தான் செய்யும். அதை தொடர்வதும் விடுவதும் உங்கள் உரிமை. வாய்ப்புக்கு நன்றி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

I agree with TVR Ayya in P.Chidhambaram defeat in Sivagangai. Everyone, even Sanjai Gandhi himself knows, by that time meadia/New paper said that the the Minister P.Chidambaram defeated by 3000 votes Margin (Election officer announced)... by Raja Kannappan...

There is no question to ask which Election officer announce the defeat. It is a hiding technique. The election commission website will not tell you the defeat now, as P.Chidambaram holding the MP position. If ECI Website shows the Real Loser... P.C has no right to hold the position as per the ECI point of view....

Cool Down...

SanjaiGandhi™ said...

ஜோதி சார், செய்திகளை வச்சி நம்பனும்னா யார் வேணாலும் யாரை வேண்டுமானாலும் போற போக்குல குறை சொல்லிட்டே போகலாம். ஆனா அதுக்கு குறைந்த பட்ச ஆதாரமாவது வேண்டும். தேர்தல் அலுவலர் அந்த மாதிரி எந்த அறிவிப்பும் வெளியிடலை. அதென்ன ஹிட்டன் டெக்னிக்? அதை மை வச்சிக் கண்டுபிடிச்சது யார்? அது போல் செய்திகள் வந்தது எனக்கும் தெரியும். ஆனால் அது அப்பட்டமான பொய். அதிமுக கோர்ட்டுக்கு செல்லவில்லை என்பது ஒரு விஷயம் போதும் இது பொய் என்பதற்கு.

உங்கள் பாஷையில் சொல்லவேண்டுமென்றால், பிரபாகரனைப் பற்றி கருணா எவ்வளவோ சொல்லி இருக்கிறார். 15 ஆண்டுகளுக்கும் மேல் உடன் இருந்த ஒருவர் சொன்ன எந்தக் குற்றசாட்டையாவது நீங்க ஒத்துக்கிட்டிங்களா?. அந்த இயக்கத்தில் இருந்த ஒருவர் சொல்வதே நம்பத் தகுந்தது இல்லை என நீங்கள் நினைக்கலாம், ஆனால் சம்பந்தமே இல்லாம எதோ ஒரு பத்திரிக்கை கிளப்பிய வதந்தியை மட்டும் நம்புவீங்களா?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//SanjaiGandhi™ said...
ஜோதி சார், செய்திகளை வச்சி நம்பனும்னா யார் வேணாலும் யாரை வேண்டுமானாலும் போற போக்குல குறை சொல்லிட்டே போகலாம். ஆனா அதுக்கு குறைந்த பட்ச ஆதாரமாவது வேண்டும். தேர்தல் அலுவலர் அந்த மாதிரி எந்த அறிவிப்பும் வெளியிடலை. அதென்ன ஹிட்டன் டெக்னிக்? அதை மை வச்சிக் கண்டுபிடிச்சது யார்? அது போல் செய்திகள் வந்தது எனக்கும் தெரியும். ஆனால் அது அப்பட்டமான பொய். அதிமுக கோர்ட்டுக்கு செல்லவில்லை என்பது ஒரு விஷயம் போதும் இது பொய் என்பதற்கு. //
சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகண்ணப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிவகங்கையில் நடந்த தேர்தலில் ப.சிதம்பரம் (காங்கிரஸ்), ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (அ.தி.மு.க.) உள்பட 20 பேர் போட்டியிட்டனர். இந்த கடுமையான போட்டியில் 3,354 ஓட்டுகள் ராஜகண்ணப்பனைவிட அதிகம் பெற்று ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் முதலில் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து ராஜகண்ணப்பன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
(பழைய செய்தி இது)

.......

இது எல்லாருக்கும் தெரிஞ்ச செய்தி...

//அதிமுக கோர்ட்டுக்கு செல்லவில்லை என்பது ஒரு விஷயம் போதும் இது பொய் என்பதற்கு//

நீங்க சொல்லித்தான் தெரியுது அதிமுக கோர்ட்டுக்கு போவலைன்னு...

இந்த வாதத்தால ஒன்னும் ஆவப்போறதுல்ல விடுங்க...

கிழே நீங்க சொன்ன விசயம் இங்க அவசியமில்லாதது... ஒப்பீடு அளவில் கூட இல்லை...

SanjaiGandhi™ said...

//சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகண்ணப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிவகங்கையில் நடந்த தேர்தலில் ப.சிதம்பரம் (காங்கிரஸ்), ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (அ.தி.மு.க.) உள்பட 20 பேர் போட்டியிட்டனர். இந்த கடுமையான போட்டியில் 3,354 ஓட்டுகள் ராஜகண்ணப்பனைவிட அதிகம் பெற்று ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் முதலில் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து ராஜகண்ணப்பன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
(பழைய செய்தி இது)//

இது எனக்கு புது செய்தி தான். நான் படிக்கலை. இந்த வழக்கு பற்றிய மற்ற விவரங்களும் சொன்னிங்கன்னா தெரிஞ்சிப்பேன். தகவலுக்காக தான் கேட்கிறேன். வழக்கு என்ன ஆனது? இது ஒன்றும் சாதாரன விஷயம் இல்லையே. நிச்சயம் பரபரப்பான செய்தியாக இருந்திருக்கும். தட்ஸ்தமிழ் படிக்கும் பழக்கம் இல்லாததால் எனக்கு இது தெரியவில்லை.


//கிழே நீங்க சொன்ன விசயம் இங்க அவசியமில்லாதது... ஒப்பீடு அளவில் கூட இல்லை... //

அதெப்படி அவசியம் இல்லாம போகும்? செய்திதாளில் வந்த செய்தி வச்சி சிதம்பரம் தோல்வியுற்றதாக அறிவிச்சி பின்னர் வென்றதாக அறிவிச்சாங்கன்னு சொல்லும் போது அதே மாதிரி மற்ற செய்திகளும் ஒத்துக்கனும்ல?

T.V.ராதாகிருஷ்ணன் said...

http://expressbuzz.com/States/tamilnadu/pc’s-election-to-ls-challenged-in-hc/78818.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனி இந்த இடுகைக்கான பின்னூட்டங்கள் நிறுத்தப்படுகின்றன