தி.மு.க., கூட்டணியில் சேர மற்றக் கட்சிகள் காத்திருந்த காலம் போய் , இப்போது..தி.மு.க., அவர்கள் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
பா.ம.க., எங்கள் கூட்டணியில் உள்ளது என்றார் முந்திக் கொண்டு கலைஞர்..ஆனால்..கூட்டணி விஷயமாக நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்கிறார் பா.ம.க., நிறுவனர்.
அடுத்து..காங்கிரஸுடன் ஆன கூட்டணி, தொகுதி உடன்பாடு தொடர்பாக கலைஞர் சோனியாவைச் சந்தித்தார்.
ஆனால் இச் சந்திப்பின் போது கலைஞரை 6 மணி நேரம் காக்க வைத்தார் சோனியா.
பிற்பகல் ஒரு மணிக்கு அவரை சந்திக்க நேரம் ஒதுக்கப் பட்டது.கலைஞர் அழைப்பு வரும் என தமிழக இல்லத்தில் காத்திருந்தாராம்..ஆனால் அழைப்பு இல்லை.கிட்டத்தட்ட 6 மணி நேரம் கழித்து இரவு ஏழு மணி அவருக்கு சோனியா அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்ததாம்.
கலைஞரின் வயது,அனுபவம்,உடல் நலன் கூட கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அவரை 6 மணி நேரம் காக்க வைத்து விட்டனர்.
சோனியாவுடன் 45 மணித்துளிகள் கலைஞர் ஆலோசனை நடத்தினர்....தமிழகம் வரும்போதெல்லாம்..கலைஞரை சந்திக்காமல் திரும்பிய ராகுல்..சோனியாவுடன் ஆன சந்திப்பில் இருந்தார்.ராகுலை விட்டு ஆட்சியில் பங்கு கேட்டதாகவும் தெரிகிறது.
முந்தைய சட்டசபை தேர்தலில் 48 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்ட காங்கிரஸ் இப்போது 83 தொகுதிகள் கேட்கிறதாம்.
நம்மை விட்டால் இவருக்கு வேறு கட்சி யில்லை என காங்கிரஸ் நினைக்கத் தொடங்கிவிட்டது போல் இருக்கிறது.
அக்கட்சி வந்து தொகுதிகள் யாசகம் கேட்ட நிலை போய்...
என்னவோ பண்ணுங்க கலைஞரே...
எதுவும் சொல்றாப்போல இல்லை..