Tuesday, February 1, 2011

கலைஞர் தன்மானத்தை இழக்கிறாரா..?





தி.மு.க., கூட்டணியில் சேர மற்றக் கட்சிகள் காத்திருந்த காலம் போய் , இப்போது..தி.மு.க., அவர்கள் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

பா.ம.க., எங்கள் கூட்டணியில் உள்ளது என்றார் முந்திக் கொண்டு கலைஞர்..ஆனால்..கூட்டணி விஷயமாக நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்கிறார் பா.ம.க., நிறுவனர்.

அடுத்து..காங்கிரஸுடன் ஆன கூட்டணி, தொகுதி உடன்பாடு தொடர்பாக கலைஞர் சோனியாவைச் சந்தித்தார்.

ஆனால் இச் சந்திப்பின் போது கலைஞரை 6 மணி நேரம் காக்க வைத்தார் சோனியா.

பிற்பகல் ஒரு மணிக்கு அவரை சந்திக்க நேரம் ஒதுக்கப் பட்டது.கலைஞர் அழைப்பு வரும் என தமிழக இல்லத்தில் காத்திருந்தாராம்..ஆனால் அழைப்பு இல்லை.கிட்டத்தட்ட 6 மணி நேரம் கழித்து இரவு ஏழு மணி அவருக்கு சோனியா அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்ததாம்.

கலைஞரின் வயது,அனுபவம்,உடல் நலன் கூட கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அவரை 6 மணி நேரம் காக்க வைத்து விட்டனர்.

சோனியாவுடன் 45 மணித்துளிகள் கலைஞர் ஆலோசனை நடத்தினர்....தமிழகம் வரும்போதெல்லாம்..கலைஞரை சந்திக்காமல் திரும்பிய ராகுல்..சோனியாவுடன் ஆன சந்திப்பில் இருந்தார்.ராகுலை விட்டு ஆட்சியில் பங்கு கேட்டதாகவும் தெரிகிறது.

முந்தைய சட்டசபை தேர்தலில் 48 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்ட காங்கிரஸ் இப்போது 83 தொகுதிகள் கேட்கிறதாம்.

நம்மை விட்டால் இவருக்கு வேறு கட்சி யில்லை என காங்கிரஸ் நினைக்கத் தொடங்கிவிட்டது போல் இருக்கிறது.

அக்கட்சி வந்து தொகுதிகள் யாசகம் கேட்ட நிலை போய்...

என்னவோ பண்ணுங்க கலைஞரே...

எதுவும் சொல்றாப்போல இல்லை..






33 comments:

bsatheeshme said...

வில்லு வளைவதும் .......
அம்பு பாய்வதும் ......
போருக்கும்...தேர்தலுக்கும்.... புதியதல்ல...

சதிவலையில் இருந்து
மீண்டு வருவார் ....
மீண்டும் வருவார் ....
முதல்வராக...

bandhu said...

பதவிக்கு வந்தே ஆகவேண்டும் என்ற நிலைமை கருணாநிதிக்கு. எவ்வளவு சீக்கிரம் இளவரசு பட்டம் கட்ட முடியுமோ கட்ட வேண்டுமே. (கருணாநிதிக்கு வயதும் ஏறுகிறது அல்லவா) இப்போது கட்சியில் இருப்பவர்கள் ஒரு நெல்லிக்காய் மூட்டை தான். பதவி என்ற கயிறு இல்லையென்றால் எல்லா பக்கமும் சிதறிவிடுவார்கள். இந்த நிலை மற்றவர்களுக்கு இல்லை. இழப்பதற்கு அவர்களுக்கு ஒன்றும் இல்லாத போது எதற்கு கவலை படப் போகிறார்கள்?

bandhu said...

ஆனாலும் உங்களுக்கு குறும்பு. அரசியலில், தன்மானம் என்றெல்லாம் பேசுகிறீர்கள்? அது இருந்தால் தாக்குதல் நடத்திய மூன்று மாதத்திர்க்குள்ளாகவே 'நேருவின் மகளே வா நிலையான ஆட்சியை தா' என்று போயிருக்க முடியுமா? பண்டாரம் / பரதேசி என்று தானே சொல்லியவர்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு பெற்றிருக்க முடியுமா? பதவி காலம் முடிய 4 மாதங்களிருக்கும்போது 'வீரம்' வந்து விலகி கூட்டணி மாறியிருக்க முடியுமா?

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! தன்மானமாவது ஒண்ணாவது!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சதீஷ் குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bandhu

Chitra said...

இதில் கருத்து சொல்லும் அளவுக்கு இன்னும் எனக்கு பக்குவம் வரவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களை தெரிந்து கொண்டேன். நன்றிங்க

Philosophy Prabhakaran said...

சித்ரா மேடம் கமென்ட் ரீப்பீட்டு...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//கலைஞர் தன்மானத்தை இழக்கிறாரா..? //

அப்படி ஒன்று இருந்தால் தானே இழக்க...

Samy said...

Wind never blows in one direction. Sathi.

சி.பி.செந்தில்குமார் said...

அரசியல்வாதிகளுக்கு ஏது தன்மானம்?

சி.பி.செந்தில்குமார் said...

தொடர்ந்து விகடன், கலைஞர்னு ஒரே தாக்கல் மயமா இருக்கே?

sathishsangkavi.blogspot.com said...

காங்கிரசை ரொம்ப நம்புகிறார் கலைஞர்...

'பரிவை' சே.குமார் said...

உங்கள் கருத்துக்களை தெரிந்து கொண்டேன். நன்றி.

மணிகண்டன் said...

//கலைஞரின் வயது,அனுபவம்,உடல் நலன் கூட கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அவரை 6 மணி நேரம் காக்க வைத்து விட்டனர்//

இதுல எங்க உடல்நலன் வருது ? கலைஞர் என்ன சோனியா வீட்டு ரிசப்ஷன் ரூம்ல எட்டு மணிநேரம் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தா மாதிரி எழுதறீங்க ?

ஜீவன்சிவம் said...

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனை ஒரு காலம் வரும்னு சொல்வங்கள்ள அது இது தான் போல. இது தி மு காவின் தேய்பிறை காலம். இனி ஒருங்கிணைந்த தி மு கா என்பது முடிந்து போன கதை தான்

ரவி said...

எனக்கென்னமோ காங்கிரஸ் பாட்டாளிகள் ரெண்டு பேருக்கும் ஆப்பை சொருகிட்டாருன்னு தோணுது.

1. பாட்டாளிகளுக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை.

2. ஆட்சியில் பங்கு குறித்து பேசவே இல்லை என்று காங்கிரசுக்கு மெகா ஆப்பு.

3. ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜாவை கைது செய்துக்கோங்க என்று க்ரீன் சிக்னல்.

4. வெள்ள நிவாரணத்துக்கு 1000 கோடிக்கு மேல் அமவுண்ட் !

நாமதான் அவரை புரிந்துகொள்ளவில்லையோ ?

ரவி said...

அப்புறமா பாருங்களேன்.

ராசா கைதுக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை, எங்களுக்கு பாதிப்பும் இல்லை என்று மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டே தங்கபாலு ஒரு அறிக்கை விடுவாரு...

முரசொலியில் ' நெருப்பாற்றில் நீந்திவா தாழ்த்தப்பட்ட தம்பி' அப்படீன்னு ஒரு கவிதை போட்டுட்டு, ராசாவை தற்காலிகமாக கட்சியில இருந்து நீக்குவாங்க.

என்னமோ போங்க..உங்க வயசுக்கு நீங்க எவ்வளவோ பாத்திருப்பீங்க, நாங்கல்லாம் பச்சா'ஸ்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

எனக்கென்னமோ..இந்த முறை காங்கிரஸ் சற்று அதிகம் விளையாடுதோன்னு தோணுது ரவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Philosophy Prabhakaran

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி யோகன் பாரிஸ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Samy

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சங்கவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்களுக்கு 87 வயதாகும் போது தெரியும் மணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜீவன்சிவம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி செந்தழல் ரவி

Jeyapalan said...

அதைத தான் இழந்து பல வருசங்களாச்சே. இனிமேலாவது முயன்று "தன்மானத்தை அடைவாரா" என்று மாற்றுங்கள் :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி

செயபால்

ஜோதிஜி said...

ரவி ஒன்றை மட்டும் விட்டுட்டிங்க.

முதலில் ப சிதம்பரம் கலைஞரை வீட்டில் வந்து சந்தித்தது எதற்காக? என்னை நினைக்கிறார்? எத்தனை சீட்டு தருவார்? என்பதை ஆழம் பார்ப்பதற்காக.

தகவல் டெல்லிக்குப் போனதும் அதற்குப் பிறகு சிபிஜ தனது கடமையைச் செய்யத் துவங்கியது.

உனக்கு என்னை விட்டால் வேறு ஆள் இல்லை என்பதோடு நான் கேட்கும் அளவிற்கு நீ(ங்க) சீட்டுக்கள் கொடுத்த ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கீங்க என்பதை உணர்த்தவும்.

மொத்தத்தில் பசி செய்து கொண்டிருக்கும் வேலை.

கண்ணுக்குத் தெரியாத தெரிந்த கலைஞரின் ராஜதந்திரத்தை உடைப்பது வளைப்பது முடிந்தால் செயல்பட விடாமல் முடக்கி வைப்பது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஜோதிஜி

arunmullai said...

கலைஞர் தன்மானத்தை இழக்க
வில்ல,கைவிட்டு விட்டார்.
இப்போதும் அவர் சாண் நக்கியர்தான்.