Showing posts with label நகைச்சுவை -நையாண்டி. Show all posts
Showing posts with label நகைச்சுவை -நையாண்டி. Show all posts

Friday, October 17, 2008

வாய் விட்டு சிரியுங்க..

1.நீதிபதி-(குற்றவாளியிடம்)கன்னிப்பெண்ணை கற்பழித்தக் குற்றத்திற்காக உன்னை தண்டிக்க விரும்புகிறேன்..நீ ஏதேனும் கூற விரும்புகிறாயா?
குற்றவாளி- இது என் கன்னி முயற்சி ஐயா..மன்னிச்சு விட்டுடுங்க

2.காதலன்-எவ்வளவு நாட்கள் நாம இப்படியே காதலராய் இருக்கிறது..உங்கப்பாவை வந்து நான் பார்க்கவா?
காதலி-வேண்டாம்..வேண்டாம்..அவர் சம்மதம்னு சொல்லிட்டா..என்ன செய்யறது

3.தயாரிப்பாளர்-நானே திரைக்கதை,வசனம்,இயக்கம்,ஒளிப்பதிவு,பாடல்,இசை எல்லாப்பொறுப்பையும் ஏத்துக்கிட்டு ஹீரோவாகவும் நடிச்சுடலாம்னு பார்க்கிறேன்..
நண்பர்-பக்கத்திலேயே ஒரு தியேட்டர் விலைக்கு வருதாம்..அதையும் வாங்கிட்டீங்கன்னா உங்க படத்தை அங்கே ரிலீஸ் செய்திடலாம்

4.அந்த சேனல் உரிமையாளரை ஏன் கைது பண்ணிட்டாங்க
உலகத்தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையா..பெரிய திரைக்கு வர்றதுக்கு முன்னாலேயே சின்னத்திரையில் படம் போட்டுட்டாராம்

5.தலைவர் வார்த்தைக்கு வார்த்தை தான் டாக்டர்னு சொல்றாரே..படித்து வாங்கின பட்டமா?
இல்ல..கொடுத்து வாங்கின பட்டம்

6.(இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள்) இவ்வளவு வயசாகியும் ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்க
எங்கப்பா இன்னும் தாத்தாஆகிற வயசாகல்லேன்னு என் ஜாதகத்தையே எடுக்கமாட்டேன்னுட்டார்.

Sunday, October 12, 2008

வாய் விட்டு சிரியுங்க..

1.மாப்பிள்ளை வீட்டோட இருக்கிறார்னு வருத்தப் படுவியே..இப்ப எப்படி இருக்கிறார்
வீட்டோட அப்பாவா மாறிட்டார்

2ஜோசியர்-உங்க ஜாதகப்படி ..சன்னதி தெருவில இருக்கிற 54ம் நம்பர் வீட்டுல இருக்கிற பொண்ணு மனைவியா இருக்க வாய்ப்பிருக்கு
கேட்பவர்-அது எப்படி உங்களால விலாசத்தைக்கூட கரக்டா சொல்ல முடியுது
ஜோசியர்-என் வீட்டு விலாசம் எனக்குத் தெரியாதா?

3.நேற்று ராத்திரி 12 மணிவரைக்கும் தூக்கம் வரல்லே கடைசில ஆவி வந்ததும்தான் தூக்கம் வந்தது
என்ன சொல்ற
கொட்டாவியைச் சொன்னேன்

4பெண்ணுக்கு லேடின்னு ஏன் இங்கிலீஷ்ல சொல்றோம் தெரியுமா?
ஏன்?
லேடி யை திருப்பிப்படி.அவங்க எல்லாவற்றிலும் டிலேயா இருக்கறதால

5.அவன் அண்டப்புளுகன்னு எப்படி சொல்ற
அவன் ஊர்ல கரண்ட் கட்டே இல்லைன்னு சொல்றான்.

6.டாக்டர் நான் டூட்டில இருக்கறப்போ தூங்கிடறேன்
அதனால தப்பு இல்ல..ஆமாம் என்ன வேலை செய்யறீங்க?
பஸ் டிரைவராயிருக்கேன்

Friday, October 3, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்..

அண்ணாசாமி வேலை செய்யும் கம்பேனியில் 6 மாதமாக வேலைநிறுத்தம்.அங்கு தொழிலாளர் யூனியனுக்கு அண்ணாசாமிதான் காரியதரிசி.அவரை நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.நடந்த பேச்சு வார்த்தை.

அதிகாரி - ஒரு வருஷத்திற்கு எத்தனை நாட்கள்

அண்ணாசாமி-365 நாட்கள்

அதிகாரி-நாம லீப் வருஷத்தையே எடுத்துப்போம்.366 நாட்கள்.அதுல ஒரு நாளுக்கு 8 மணி நேரம் வேலைப் பார்க்கறீங்கன்னு வைச்சுப்போம்.அதாவது ஒரு நாளைக்கு 1/3பாகம் வேலை செய்யறீங்க.அதாவது வருஷத்திற்கு 122நாள் .அதில் வருஷத்திற்கு 52ஞாயிற்றுக்கிழமையும்,சனிக்கிழமை 1/2 நாளா இருக்கறதால 26 நாளும்..ஆக மொத்தம் 78 நாட்கள் நீங்க வேலை
செய்யறதில்லை.122 வேலை நாட்கள்லே விடுமுறை 78 நாைள் கழிச்சா மீதி 44 நாட்கள்.இதுதான் உண்மையிலேயே நீங்க வேலை செய்யற நாட்கள்.அந்த 44 நாட்கள்ல வருஷத்திற்கு
30நாள் earn leave,12நாட்கள் casual leave போச்சுன்னாமீதி 2 நாள்.இந்த 2 நாள் தான் நீங்க வேலை செய்யறீங்க.அதுக்கு சம்பள உயர்வு தேவையா?

அண்ணாசாமி யோசனை செய்தார்.அதிகாரி கூறுவது உண்மைதான் போலிருக்கு என்ற முடிவுக்கு வந்தார்.2 நாட்கள் வேலை செய்ய சம்பள உயர்வு கேட்பது அநியாயம் என்று வேலை நிறுத்ததை வாபஸ் வாங்கினார்.

Thursday, October 2, 2008

வாய் விட்டு சிரியுங்க..

1.தலைவர்..பொருளாதாரம் பலமாக இருக்கிறது...பலஹீனமாக இருக்கிறது என இரண்டு தலைப்பிலும் பேச்சை தயாரிக்கச் சொல்லி இருக்கார்..ஆளும் கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..எதிர்க் கட்சி கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..அதற்கேற்ப பேசிடலாம்னு.

2.என் மனைவியை கண் கலங்காம வைச்ச்க்கணும்னு பார்த்தேன்..முடியலை
ஏன்?என்ன ஆச்சு
அவ மெகா சீரியல் நடிகையா இருக்கறதாலே..வீட்ல எது பேசினாலும்..கண்ணீரோடத்தான் பேசறா

3.கடைக்காரர்-இலவச இணைப்பை 'கேட்'டு வாங்குங்கன்னு சொல்றது..இந்த சின்னப் புத்தகத்தாங்க..வீட்டு 'கேட்"டு இல்லைன்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்றீங்களே

4.உங்கம்மாவோட நான் சண்டை போடறதால எனக்கு சாபம் கொடுத்துட்டாங்க
என்னன்னு
காலத்துக்கும் சுமங்கலியா இருன்னு

5.டி.வி.ல நிகழ்ச்சி கொடுக்க ஏன் உங்க நாயை இழுத்துக் கிட்டு வர்றீங்க
இது டாக் ஷோன்னு சொன்னாங்களே

6.நீதிபதி-(குற்றவாளியிடம்)உனக்குத் தேவையானால் அரசாங்கமே வக்கீல் ஏற்பாடு செய்யும்
குற்றவாளி-வேண்டாங்க...எனக்கே நல்லா பொய் பேசத் தெரியும்.

Saturday, September 27, 2008

வாய் விட்டு சிரியுங்க

1.அந்த டாக்டர் ஐயப்ப பக்தர்னு எப்படி சொல்ற..
தலைவலின்னு போனாக்கூட படிப்படியா 18 நாள் மருந்து சாப்பிடணும்னு சொல்வார்.

2.அந்த டாக்டர் முன்னாலே சினிமா டைரக்டரா இருந்தார்னு எப்படி சொல்ற
நோயாளிகிட்டே 4 ரோல் எக்ஃஸ்ரே ஃபிலிம் எடுத்துடுங்கன்னு சொல்றாரே!!

3.புயல் மழையாலே மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டதுன்னு சொல்றாங்களே..ஏன்?
மாமூல் வாங்கறவங்க வாழ்க்கை பாதிக்கப்பட்டதை அப்படி சொல்றாங்க போல யிருக்கு.

4.தயாரிப்பாளர்-கண்ணே..கலைமானே ங்கிற பாட்டை நீங்க எழுதினீங்களா?
கவிஞர்- ஆமாம்
தயாரிப்பாளர்- வாங்க கண்ணதாசன் ஐயா...இவ்வளவு நாட்கள் நீங்கள் அமரர் ஆகிட்டீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

5.உன் பையன் புதுசா..ஏதோ பிஸினஸ் ஆரம்பிக்கப்போறதா சொன்னியே..என்ன பிசினஸ்
மெகா சீரியல் பார்க்கறச்சே எப்படி அழணும்னு சொல்லிக்கொடுக்கப் போறானாம்.

6.கல்யாணம் ஆனதிலே இருந்து..வனஜாவுக்கு கர்வம் ரொம்ப அதிகமாயிடுச்சு
ஏன்
அவ புருஷன் அருமையா சமைக்கிறானாம்.