அண்ணாசாமி வேலை செய்யும் கம்பேனியில் 6 மாதமாக வேலைநிறுத்தம்.அங்கு தொழிலாளர் யூனியனுக்கு அண்ணாசாமிதான் காரியதரிசி.அவரை நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.நடந்த பேச்சு வார்த்தை.
அதிகாரி - ஒரு வருஷத்திற்கு எத்தனை நாட்கள்
அண்ணாசாமி-365 நாட்கள்
அதிகாரி-நாம லீப் வருஷத்தையே எடுத்துப்போம்.366 நாட்கள்.அதுல ஒரு நாளுக்கு 8 மணி நேரம் வேலைப் பார்க்கறீங்கன்னு வைச்சுப்போம்.அதாவது ஒரு நாளைக்கு 1/3பாகம் வேலை செய்யறீங்க.அதாவது வருஷத்திற்கு 122நாள் .அதில் வருஷத்திற்கு 52ஞாயிற்றுக்கிழமையும்,சனிக்கிழமை 1/2 நாளா இருக்கறதால 26 நாளும்..ஆக மொத்தம் 78 நாட்கள் நீங்க வேலை
செய்யறதில்லை.122 வேலை நாட்கள்லே விடுமுறை 78 நாைள் கழிச்சா மீதி 44 நாட்கள்.இதுதான் உண்மையிலேயே நீங்க வேலை செய்யற நாட்கள்.அந்த 44 நாட்கள்ல வருஷத்திற்கு
30நாள் earn leave,12நாட்கள் casual leave போச்சுன்னாமீதி 2 நாள்.இந்த 2 நாள் தான் நீங்க வேலை செய்யறீங்க.அதுக்கு சம்பள உயர்வு தேவையா?
அண்ணாசாமி யோசனை செய்தார்.அதிகாரி கூறுவது உண்மைதான் போலிருக்கு என்ற முடிவுக்கு வந்தார்.2 நாட்கள் வேலை செய்ய சம்பள உயர்வு கேட்பது அநியாயம் என்று வேலை நிறுத்ததை வாபஸ் வாங்கினார்.
10 comments:
:))
நல்லா கெளப்புறாய்ங்கய்யா பீதிய....
என்னது? காந்திய சுட்டுட்டாய்ங்களா?
அண்ணாசாமி வாழ்க, அவருக்கு கணணி துறையிலே H.R வேலை கெடச்சா எங்க பாடு கொண்டாட்டம் தான் :):)
//மங்களூர் சிவா said...
:))
நல்லா கெளப்புறாய்ங்கய்யா பீதிய....//
நாங்க ஏங்க கிளப்பறம்...நீங்க கிளப்பாம இருந்தா சரி ;-))))
//அமர பாரதி said...
என்னது? காந்திய சுட்டுட்டாய்ங்களா?//
யார் சொன்னது..அவர் இப்பத்தான் (அமர)பாரதியை சந்திச்சுட்டு..சபர்மதி ஆஸ்ரமத்திலிருந்து மாலை நேர பஜனுக்கு கிளம்பி இருப்பதாக தகவல்.
//நசரேயன் said...
அண்ணாசாமி வாழ்க, அவருக்கு கணணி துறையிலே H.R வேலை கெடச்சா எங்க பாடு கொண்டாட்டம் தான் :):)//
அண்ணாசாமி H R வேலைக்கு உங்கள் கம்பெனிக்கு அப்ளை பண்ணியிருப்பதாகக் கூறுகிறார்.
;-)))
இப்ப இருக்க நெலமயில எங்களுக்கு லீவே வேணாமுங்கோ
:--)))...
வேலை உருப்படியா இருந்தா போதும்....
//குடுகுடுப்பை said...
இப்ப இருக்க நெலமயில எங்களுக்கு லீவே வேணாமுங்கோ//
அந்த பயம் இருந்தா சரி ;-)))
// விஜய் ஆனந்த் said...
:--)))...
வேலை உருப்படியா இருந்தா போதும்....//
அந்த பயம் இருந்தா சரி ;-)))
Post a Comment