Showing posts with label விஜய் டீவி ..சன் டீவி ..செய்திகள். Show all posts
Showing posts with label விஜய் டீவி ..சன் டீவி ..செய்திகள். Show all posts

Wednesday, June 16, 2010

விஜய் டீவியும்..சன் டீவியும்..மற்ற பிறவும்...

விஜய் டீ.வி.ஆரம்பித்தாலும் ஆரம்பித்தது சிங்கர் போட்டியை...மற்ற சேனல் எல்லாம் அதையே தொடர ஆரம்பித்துள்ளது.ஓய்வு பெற்ற பல பாடகர்களுக்கு நீதிபதிகளாக இரண்டாம் இன்னிங்ஸ்.

ரிமோட்டை எந்த சேனலுக்கு திருப்பினாலும்..அங்கங்கே..மெகா சீரியல் நேரம் தவிர மற்ற நேரங்களில் யாரேனும் மைக்கை கையில் ஏந்தி பாடிக் கொண்டிருக்கிறார்கள்.இப்படி நடக்கும் பல நிகழ்ச்சிகள் குறைந்த பட்ச ஸ்டாண்டர்ட் கூட இருப்பதில்லை.

உதாரணம் ..ஆகா..ஓகோ..ன்னு விளம்பரத்துடன் ஆரம்பிக்கப் பட்ட 'ஹரியுடன் ...' மிகழ்ச்சி.

தவிர்த்து..மானாட ..மயிலாட, அழகிய தமிழ் மகன்..போன்ற ஆடல் நிகழ்ச்சிகள் வேறு.

சன் டீ.வி.யில் பிரைம் நேரத்தில் வார நாட்களில் இது போன்ற நிகழ்ச்சிக்கு இடமில்லை...ஆனால்..விஜய் போகும் போக்கு சன் டீ.வி.யின் டி.ஆர்.பி., ரேட்டிங்குக்கு தலைவலி கொடுக்கிறது.மெகா சீரியல் நேரங்களை மாற்றி..மாற்றி அமைத்தும் தீரவில்லை பிரச்னை.தென்றல் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள்..இப்போது அதை சிங்கரின் விளம்பர இடைவெளியில் தான் பார்க்கின்றனர்.செல்லமே க்கும் அதே கதி.மாதவி இருக்கும் இடம் தெரியவில்லை..

எதையும் பிரம்மாண்டமாக தயாரிக்க நினைக்கும் சன்..இப்போது விஜய் சிங்கருக்குப் போட்டியாக இசை நிகழ்ச்சி ஒன்றை ஒலி/ஒளி பரப்பப் போகிறது.ஜூன் 26 முதல் வரப்போகும் அந்த நிகழ்ச்சிக்கு சங்கீத மகா யுத்தம் என்று பெயர்..ஆம்..உண்மையில்..விஜய் டீ.வி.யுடன் யுத்தம்..தான்.

இதில் தஞ்சை தளபதிகள்,கோவை கில்லாடிகள்,நெல்லை சூறாவளி,சென்னை சிங்கங்கள்,மதுரை வீரர்கள்,திருச்சி திமிங்கலங்கள் (பெயர்கள் T 20 ரேஞ்சிற்கு இருக்கிறது)என ஆறு அணிகள் மோதும்.ஒவ்வொரு அணிக்கும் ஒரு முண்ணனி பாடகர் கேப்டன்.ஒவ்வொரு அணிக்கும் 3 இளம் பாடகர்கள்.ஜுகல் பந்தி,சோலோ, மேட்லி என போட்டி மூன்று சுற்றுகள் கொண்டதாய் இருக்கும் .நிகழ்ச்சிக்கு ஸ்பான்சார் அமுல் நிறுவனம்.

இந்த நிகழ்சிகள் சனி,ஞாயிறு இரவு 9-30க்கு ஒளிபரப்பாகும்..சனி,ஞாயிறு நேரங்களிலாவது ரசிகர்களை தக்கவைத்துக் கொள்ள முடியுமா? என்ற ஆவல்.

அளவிற்கு மிஞ்சினால்..அமிர்தமும் விஷம் என இவர்கள் புரிந்துக் கொள்வார்களா?

டிஸ்கி- விளம்பர நேரத்தில் ..ஒரு நிகழ்ச்சியின் விளம்பரம் பார்த்தேன்...நிகழ்ச்சி ஜோடி நம்பர் ஒண்ணாம்..இளம் சிறுவர்..சிறுமிகள்..காதல் டூயட் பாடும் நிகழ்ச்சி.. தேவையில்லா அங்க அசைவுகளுடன்..அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆகிறதா (!!!!) பார்ப்பார்கள் போலிருக்கிறது...எங்கே போகிறோம் நாம்..குறைந்தது இது போன்ற நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் போது..அவை பற்றி விளக்கங்களுடன்..தணிக்கை குழு ஒன்றை ஏற்படுத்தி அவர்கள் அனுமதியை பெற வேண்டும் என்று வரவேண்டும்.