Wednesday, June 16, 2010

விஜய் டீவியும்..சன் டீவியும்..மற்ற பிறவும்...

விஜய் டீ.வி.ஆரம்பித்தாலும் ஆரம்பித்தது சிங்கர் போட்டியை...மற்ற சேனல் எல்லாம் அதையே தொடர ஆரம்பித்துள்ளது.ஓய்வு பெற்ற பல பாடகர்களுக்கு நீதிபதிகளாக இரண்டாம் இன்னிங்ஸ்.

ரிமோட்டை எந்த சேனலுக்கு திருப்பினாலும்..அங்கங்கே..மெகா சீரியல் நேரம் தவிர மற்ற நேரங்களில் யாரேனும் மைக்கை கையில் ஏந்தி பாடிக் கொண்டிருக்கிறார்கள்.இப்படி நடக்கும் பல நிகழ்ச்சிகள் குறைந்த பட்ச ஸ்டாண்டர்ட் கூட இருப்பதில்லை.

உதாரணம் ..ஆகா..ஓகோ..ன்னு விளம்பரத்துடன் ஆரம்பிக்கப் பட்ட 'ஹரியுடன் ...' மிகழ்ச்சி.

தவிர்த்து..மானாட ..மயிலாட, அழகிய தமிழ் மகன்..போன்ற ஆடல் நிகழ்ச்சிகள் வேறு.

சன் டீ.வி.யில் பிரைம் நேரத்தில் வார நாட்களில் இது போன்ற நிகழ்ச்சிக்கு இடமில்லை...ஆனால்..விஜய் போகும் போக்கு சன் டீ.வி.யின் டி.ஆர்.பி., ரேட்டிங்குக்கு தலைவலி கொடுக்கிறது.மெகா சீரியல் நேரங்களை மாற்றி..மாற்றி அமைத்தும் தீரவில்லை பிரச்னை.தென்றல் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள்..இப்போது அதை சிங்கரின் விளம்பர இடைவெளியில் தான் பார்க்கின்றனர்.செல்லமே க்கும் அதே கதி.மாதவி இருக்கும் இடம் தெரியவில்லை..

எதையும் பிரம்மாண்டமாக தயாரிக்க நினைக்கும் சன்..இப்போது விஜய் சிங்கருக்குப் போட்டியாக இசை நிகழ்ச்சி ஒன்றை ஒலி/ஒளி பரப்பப் போகிறது.ஜூன் 26 முதல் வரப்போகும் அந்த நிகழ்ச்சிக்கு சங்கீத மகா யுத்தம் என்று பெயர்..ஆம்..உண்மையில்..விஜய் டீ.வி.யுடன் யுத்தம்..தான்.

இதில் தஞ்சை தளபதிகள்,கோவை கில்லாடிகள்,நெல்லை சூறாவளி,சென்னை சிங்கங்கள்,மதுரை வீரர்கள்,திருச்சி திமிங்கலங்கள் (பெயர்கள் T 20 ரேஞ்சிற்கு இருக்கிறது)என ஆறு அணிகள் மோதும்.ஒவ்வொரு அணிக்கும் ஒரு முண்ணனி பாடகர் கேப்டன்.ஒவ்வொரு அணிக்கும் 3 இளம் பாடகர்கள்.ஜுகல் பந்தி,சோலோ, மேட்லி என போட்டி மூன்று சுற்றுகள் கொண்டதாய் இருக்கும் .நிகழ்ச்சிக்கு ஸ்பான்சார் அமுல் நிறுவனம்.

இந்த நிகழ்சிகள் சனி,ஞாயிறு இரவு 9-30க்கு ஒளிபரப்பாகும்..சனி,ஞாயிறு நேரங்களிலாவது ரசிகர்களை தக்கவைத்துக் கொள்ள முடியுமா? என்ற ஆவல்.

அளவிற்கு மிஞ்சினால்..அமிர்தமும் விஷம் என இவர்கள் புரிந்துக் கொள்வார்களா?

டிஸ்கி- விளம்பர நேரத்தில் ..ஒரு நிகழ்ச்சியின் விளம்பரம் பார்த்தேன்...நிகழ்ச்சி ஜோடி நம்பர் ஒண்ணாம்..இளம் சிறுவர்..சிறுமிகள்..காதல் டூயட் பாடும் நிகழ்ச்சி.. தேவையில்லா அங்க அசைவுகளுடன்..அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆகிறதா (!!!!) பார்ப்பார்கள் போலிருக்கிறது...எங்கே போகிறோம் நாம்..குறைந்தது இது போன்ற நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் போது..அவை பற்றி விளக்கங்களுடன்..தணிக்கை குழு ஒன்றை ஏற்படுத்தி அவர்கள் அனுமதியை பெற வேண்டும் என்று வரவேண்டும்.

12 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

கோவி.கண்ணன் said...
//டிஸ்கி- விளம்பர நேரத்தில் ..ஒரு நிகழ்ச்சியின் விளம்பரம் பார்த்தேன்...நிகழ்ச்சி ஜோடி நம்பர் ஒண்ணாம்..இளம் சிறுவர்..சிறுமிகள்..காதல் டூயட் பாடும் நிகழ்ச்சி.. தேவையில்லா அங்க அசைவுகளுடன்..அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆகிறதா (!!!!) பார்ப்பார்கள் போலிருக்கிறது..//

உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வே......பெற்றோர்கள் எப்படித்தான் இவறையெல்லாம் கூடவே உட்கார்ந்து ரசித்துப் பார்க்கிறார்களோ

Chitra said...

எங்கே போகிறோம் நாம்..

......"முன்னேற்ற" பாதையில் என்று சொல்லிக்கிறாங்க..... அவ்வ்வ்வ்.....

virutcham said...

அழுமூஞ்சி, பழி வாங்கும் இடமிருந்து இப்படி தான் ஒரு விடுதலை கிடைச்சா சரி தான். ஆமா இந்த பசங்க எப்போ பள்ளிக்குப் போவாங்க ?


தமிழில் பெயர் வைக்கும் கட்டாயம் எல்லாம் பெயர் பலகைகளுக்கு மட்டும் தானா? சன், நி'ஜ'ம் , சங்கீதம், யுத்தம் - இதெல்லாம் தமிழா?

செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில் தமிழ் நிகழ்ச்சி( மொழி, இசை, உடை, பாரம்பரியம் .... ) என்று ஒன்றை ஒளிபரப்ப அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்களே தயாரில்லை. பிறகு ?

virutcham said...

//அழுமூஞ்சி, பழி வாங்கும் இடமிருந்து இப்படி தான் ஒரு விடுதலை கிடைச்சா சரி தான். ஆமா இந்த பசங்க எப்போ பள்ளிக்குப் போவாங்க ?//

அழுமூஞ்சி, பழி வாங்கும் சீரியல்கள் இடமிருந்து இப்படி தான் ஒரு விடுதலை கிடைச்சா சரி தான். ஆமா இந்த பசங்க எப்போ பள்ளிக்குப் போவாங்க ?

சீரியல்கள் என்று இருக்க வேண்டும்
typo

யாசவி said...

நானும் பார்த்தேன் ஒரு இனம் புரியாத அசூசையாக இருக்கிறது.

இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு வேண்டும்.

Robin said...

//உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வே......பெற்றோர்கள் எப்படித்தான் இவறையெல்லாம் கூடவே உட்கார்ந்து ரசித்துப் பார்க்கிறார்களோ// நீங்க வேற, அவர்களெல்லாம் கைதட்டி ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லாம் பணம், புகழ் செய்யும் வேலை.

கிருஷ்குமார் said...

ZEE tv yil vandha nigalchiyin peyare "Sangeetha maha yutham" ,SuntV nigalchikku veru peyar yena ninaikiren..

கிருஷ்குமார் said...

Sorry Thavarana thagavalukku ,Sun TV nigalchikkum adhe peyar than pola.. (Peyar koodava copy?)

ஹேமா said...

யார் கத்தி யார் கேட்கப்போகிறார்கள்.
பெற்றோர்களும் இதுக்கெல்லாம் உடந்தை !

அக்பர் said...

தனிக்கை குழு கொண்டு வரமேண்டும் என்பது நல்ல யோசனை. தலைவருக்கு பதவி கேட்போரை சமாளித்த மாதிரியும் இருக்கும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
கோவி
Chitra
virutcham
யாசவி
Robin

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
கிருஷ்குமார்
ஹேமா
அக்பர்