
இன்று நம் மக்களிடையே விலைவாசி ஏற்றம் குறித்தோ, நாட்டில் பெருகி வரும் தீவிரவாதம் குறித்தோ, நாட்டு நடப்புகள் குறித்தோ கவலைகள் கிடையாது.
விஜய் டீ.வி.சூப்பர் சிங்கராக யார் வருவார்கள்..என்பதுதான்..
அப்பாவின் பணத்தில் சிம் கார்ட் போடும் பையனிலிருந்து..வயதான பெரிசுகள் வரை எஸ்.எம்.எஸ்.,ஐ மானாவாரியாக தட்டி விட்டுக் கொண்டிருக்கின்றனர்..ஏர் டெல்லுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.,க்கு 3 ரூபாய் வருமானம்..கிட்டத்தட்ட இப்போட்டியின் இறுதி முடிவுக்கு மொத்தம் பத்து லட்சத்திற்கு மேல் எஸ்.எம்.எஸ். வரும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில்..நமக்கு வரும் சந்தேகங்கள்..
இப்போட்டி கிட்டத்தட்ட ஒரு வருடமாக வருகிறது..சிறுவர்களை வேலைக்கு வைத்தல், கொடுமைப் படுத்துதல், இவை குற்றங்கள்..
ஆனால் இக்குழந்தைகள்..இருபத்தைந்து பேர் வடிகட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு..அவர்களிடம் அவர்கள் வயதுக்கு மேல் வேலை வாங்கி..கடைசியில் பல குழந்தைகளை அழ விட்டு ஐந்து பேரை ..இறுதிப் போட்டியில் தேர்ந்தெடுத்துள்ளனர்.(குழந்தைகள் கண்டிப்பாக அவதிப் பட்டிருப்பார்கள்..)
இவர்கள் பாடிய பல பாடல்கள் சாதாரண மக்களைக் கவர்ந்தாலும்..நீதிபதிகள் அவர்கள் செய்த தவறை சுட்டிக் காட்டுகையில் தான்..இவ்வளவு தவறுகளா? என அறிகிறோம்..
ஆனால்..சிறந்த பாடகரை தேர்ந்தெடுக்கும் பணியை மக்களிடமே சேனல் ஒப்படைத்தது சரியில்லை என்றே தோன்றுகிறது..இதனால்..மக்களின் கண்ணோட்டத்தில்..சிறந்த பாடகர் யார் என்பதைவிட..பச்சாதாபம், வயது, பாகுபாடு ஆகியவை குறுக்கே நிற்கக்கூடும்..
மக்கள் திறமை வாய்ந்தவர்களைத் தான் தேர்ந்தெடுப்பார்கள் என்றால்..இன்று பல எம்.எல்.ஏ., க்கள், எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க மாட்டார்கள்.எம்.எஸ்.உதயமூர்த்தி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பார்.
மறைமுகமாக சேனலுக்கும்,ஏர்டெல்லுக்கும் வருமானம்..அதற்கே முடிவெடுக்கும் பணி மக்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
இதை உணர்ந்துதான்..போட்டியாளர்களும்..போஸ்டர் அடித்தும்..துண்டு பிரசுரங்களை தினசரிகளில் இணைத்தும் ஆதரவு தேடுகின்றனர்..(பரிசு..25 லட்சம் பெறுமானமுள்ள வீடு என்பதாலா?)
உண்மையில் சேனல் என்ன செய்திருக்க வேண்டும்..யாருக்கும் தெரியாமல் சில இசை அறிஞர்களிடம் இப்பணியை ஒப்படைத்திருக்க வேண்டும்..
அதை விடுத்து.....
அரசியலைவிட மட்டமாக பணம் ஈட்ட சேனலும்..முக்கிய ஸ்பான்ஸரும் கை கோர்த்தது கண்டிக்கத் தக்கது.
இது நாள் வரை நீதிபதிகளாய் இருந்த, மற்றும் அவ்வப்போது கலந்துக் கொண்ட சித்ரா,மனோ,மால்குடி சுபா, நித்யஸ்ரீ,சௌம்யா,உன்னி மேனன்,சுசீலா,ஈஸ்வரி,ஜானகி,எம்.எஸ்.வி.,ஆகியோர்களை விட மக்கள் ரசனைக்கு முக்கியத்துவம் தந்து, விஜய் டி.வி., ந்டுநிலை தவறிவிட்டது என்றே சொல்லலாம்.