Monday, June 14, 2010

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியும்...அரசியலும்..




இன்று நம் மக்களிடையே விலைவாசி ஏற்றம் குறித்தோ, நாட்டில் பெருகி வரும் தீவிரவாதம் குறித்தோ, நாட்டு நடப்புகள் குறித்தோ கவலைகள் கிடையாது.

விஜய் டீ.வி.சூப்பர் சிங்கராக யார் வருவார்கள்..என்பதுதான்..

அப்பாவின் பணத்தில் சிம் கார்ட் போடும் பையனிலிருந்து..வயதான பெரிசுகள் வரை எஸ்.எம்.எஸ்.,ஐ மானாவாரியாக தட்டி விட்டுக் கொண்டிருக்கின்றனர்..ஏர் டெல்லுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.,க்கு 3 ரூபாய் வருமானம்..கிட்டத்தட்ட இப்போட்டியின் இறுதி முடிவுக்கு மொத்தம் பத்து லட்சத்திற்கு மேல் எஸ்.எம்.எஸ். வரும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில்..நமக்கு வரும் சந்தேகங்கள்..

இப்போட்டி கிட்டத்தட்ட ஒரு வருடமாக வருகிறது..சிறுவர்களை வேலைக்கு வைத்தல், கொடுமைப் படுத்துதல், இவை குற்றங்கள்..

ஆனால் இக்குழந்தைகள்..இருபத்தைந்து பேர் வடிகட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு..அவர்களிடம் அவர்கள் வயதுக்கு மேல் வேலை வாங்கி..கடைசியில் பல குழந்தைகளை அழ விட்டு ஐந்து பேரை ..இறுதிப் போட்டியில் தேர்ந்தெடுத்துள்ளனர்.(குழந்தைகள் கண்டிப்பாக அவதிப் பட்டிருப்பார்கள்..)

இவர்கள் பாடிய பல பாடல்கள் சாதாரண மக்களைக் கவர்ந்தாலும்..நீதிபதிகள் அவர்கள் செய்த தவறை சுட்டிக் காட்டுகையில் தான்..இவ்வளவு தவறுகளா? என அறிகிறோம்..

ஆனால்..சிறந்த பாடகரை தேர்ந்தெடுக்கும் பணியை மக்களிடமே சேனல் ஒப்படைத்தது சரியில்லை என்றே தோன்றுகிறது..இதனால்..மக்களின் கண்ணோட்டத்தில்..சிறந்த பாடகர் யார் என்பதைவிட..பச்சாதாபம், வயது, பாகுபாடு ஆகியவை குறுக்கே நிற்கக்கூடும்..

மக்கள் திறமை வாய்ந்தவர்களைத் தான் தேர்ந்தெடுப்பார்கள் என்றால்..இன்று பல எம்.எல்.ஏ., க்கள், எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க மாட்டார்கள்.எம்.எஸ்.உதயமூர்த்தி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பார்.

மறைமுகமாக சேனலுக்கும்,ஏர்டெல்லுக்கும் வருமானம்..அதற்கே முடிவெடுக்கும் பணி மக்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

இதை உணர்ந்துதான்..போட்டியாளர்களும்..போஸ்டர் அடித்தும்..துண்டு பிரசுரங்களை தினசரிகளில் இணைத்தும் ஆதரவு தேடுகின்றனர்..(பரிசு..25 லட்சம் பெறுமானமுள்ள வீடு என்பதாலா?)

உண்மையில் சேனல் என்ன செய்திருக்க வேண்டும்..யாருக்கும் தெரியாமல் சில இசை அறிஞர்களிடம் இப்பணியை ஒப்படைத்திருக்க வேண்டும்..

அதை விடுத்து.....

அரசியலைவிட மட்டமாக பணம் ஈட்ட சேனலும்..முக்கிய ஸ்பான்ஸரும் கை கோர்த்தது கண்டிக்கத் தக்கது.

இது நாள் வரை நீதிபதிகளாய் இருந்த, மற்றும் அவ்வப்போது கலந்துக் கொண்ட சித்ரா,மனோ,மால்குடி சுபா, நித்யஸ்ரீ,சௌம்யா,உன்னி மேனன்,சுசீலா,ஈஸ்வரி,ஜானகி,எம்.எஸ்.வி.,ஆகியோர்களை விட மக்கள் ரசனைக்கு முக்கியத்துவம் தந்து, விஜய் டி.வி., ந்டுநிலை தவறிவிட்டது என்றே சொல்லலாம்.

32 comments:

Chitra said...

இதை உணர்ந்துதான்..போட்டியாளர்களும்..போஸ்டர் அடித்தும்..துண்டு பிரசுரங்களை தினசரிகளில் இணைத்தும் ஆதரவு தேடுகின்றனர்..(பரிசு..25 லட்சம் பெறுமானமுள்ள வீடு என்பதாலா?)


...... சரியா போச்சு! ம்ம்ம்ம்......

அத்திரி said...

//இன்று நம் மக்களிடையே விலைவாசி ஏற்றம் குறித்தோ, நாட்டில் பெருகி வரும் தீவிரவாதம் குறித்தோ, நாட்டு நடப்புகள் குறித்தோ கவலைகள் கிடையாது.
//

இதப்ப்ற்றி நீங்கள் பதிவு போட்டிருப்பதால் உங்களுக்கும் கவலை இல்லை என்றே சொல்கிறேன்..........

கிகிகி.............சும்மா........ஆங்

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு.

Paleo God said...

//மக்கள் திறமை வாய்ந்தவர்களைத் தான் தேர்ந்தெடுப்பார்கள் என்றால்..இன்று பல எம்.எல்.ஏ., க்கள், எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க மாட்டார்கள்.//

நெத்தியடி சார்! :)

மற்றபடி இந்த சூப்பர் சிங்கர் பாக்கறதில்ல டிவில/எஃஎம்ல போக இந்த பசங்க அதே பாட்ட எல்லா சானல்லயும் மைக்க வெச்சிக்கிட்டு பாடறத பார்த்தா எரிச்சலா இருக்கு. அட வேற மொழி சானலையாவது பார்க்கலாம்னா அங்கயும் இதே கதைதான். :(

Unknown said...

இங்கு எல்லாமே வியாபாரம் ஐயா..

துளசி கோபால் said...

செல்ஃபோன் கம்பெனிகள் பணம் விழுங்கிக் கொழுத்துக்கிட்டே போகுது. அதுதான் ஒரே லாபம் அவுங்களுக்கு.

எல்லாம் யாபாரம்:(

Robin said...

//மக்கள் திறமை வாய்ந்தவர்களைத் தான் தேர்ந்தெடுப்பார்கள் என்றால்..இன்று பல எம்.எல்.ஏ., க்கள், எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க மாட்டார்கள்.எம்.எஸ்.உதயமூர்த்தி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பார்.// True.

CS. Mohan Kumar said...

பாதி மார்க் தான் மக்கள் ஓட்டுக்கு மீதி பாதி நீதிபதிகள் ஓட்டு என இருக்கும் என நம்புகிறேன்; சில முறை அவ்வாறு இருந்தது; ஒரு வருடம் சம்பத்தப்பட்ட குழந்தைகளின் படிப்பை வீணாக்கினர்

vasu balaji said...

எதிர்காலத்தில் தொழில் முன்னேற்றம் அரசியல்லதான்னு ட்ரெயினிங் குடுக்கறாய்ங்களோ?

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பதிவு

மறந்து விடாமல் தங்கள் பொன்னான வாக்குகளை அல்கா அஜித் (ssj02_இற்கு வாகு அளிக்க இரு கரம் கூப்பி வேண்டி வணங்குகிறேன்.

You can cast online vote at free of cost in vijay.india.com

அன்புடன் அருணா said...

ரொம்ப சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

ராம்ஜி_யாஹூ said...

But think in this positive way>

Assume Alka has won and got chances in cinema playback singing. She will start earning Rs.30000 per song and in 5 years she would earn around 20 lacs.

Instead if she completes her BE or MBBS and in job she may not earn that much.

Take the life of SPB, Yesudoss, Mano, Janaki, Swarnalatha.

People have high respect, regard , affection on Janaki, swarnalatha than a Gold medallist BE or MBBS graduate.

Barathiraja, vinu chakravarthi, Balakumaran, Mani ratnam, Vaali have all earned money and fame in cinema/music related things rather than in a normal salary class life.

T.V.ராதாகிருஷ்ணன் said...

திறமை உள்ளவர்கள் முன்னுக்கு வர வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது..ஆனால் இந்த சேனலும்,ஏர்டெல்லும் கொழிக்க இவர்களைப் பயன்படுத்திக் கொள்வதையே கண்டிக்கிறேன்..
மேலும்...மக்கள் தேர்வு ஒரு பட்சமாகவே இருக்கும் என்பதே எண்ணம்..ஏற்கனவே..அல்கா, ரோஷன் இருவர் தாய்மொழியும் மலையாளம் என்றும் பேச்சு இருக்கிறதே..கேள்விப் பட்டீர்களா?
இசைக்கு மொழி குறுக்கே வரலாமா? ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்..

ராம்ஜி_யாஹூ said...

I have already replied to other blogger's post regarding Alka & Roshan are malayaales.

WE have been saying Tamilar won the Oscar award. That Tamilar Ar Rahman's father is Sekar from Kerala.

Unknown said...

ARR's father is Tamil settled in kerala not a malayalee

Jackiesekar said...

இதனால்..மக்களின் கண்ணோட்டத்தில்..சிறந்த பாடகர் யார் என்பதைவிட..பச்சாதாபம், வயது, பாகுபாடு ஆகியவை குறுக்கே நிற்கக்கூடும்..


இந்த வரி 100க்கு 100 உண்மை

எல் கே said...

not only super songer, all these reality shows in india are follwing same method

க.பாலாசி said...

நல்லவேள நான் டி.வியே பார்க்கறதில்ல...

சிநேகிதன் அக்பர் said...

//விஜய் டி.வி., ந்டுநிலை தவறிவிட்டது என்றே சொல்லலாம்.//

சார் இன்னுமா இதை நம்பிக்கிட்டு இருக்கீங்க. எல்லா மொழிகளிலும் செய்வதை தமிழிலும் செய்கிறார்கள். இது ஒரு சர்வதேச வியாபாரம். இதில் கிடைக்கும் வருமானத்தில் 5000 பேருக்கு மேல் முதல் பரிசு கொடுக்கலாம். செல்போன்கம்பெனிக்கும் டிவி கம்பெனிக்கும் டீலிங்க் உண்டு என்று நினைக்கிறேன்.

எல்லோரும் மக்கள் ஆர்வத்தை நல்லா பயன்படுத்துகிறார்கள்.

Vidhya Chandrasekaran said...

அப்பப்போ பார்க்கறதோட சரி. ரியாலிட்டி ஷோ என்றாலே வெறுப்பாக இருக்கிறது.

அக்னி பார்வை said...

இப்போது கூட டிவிட்டினேன் , இந்த விஜய் டீவியை பார்க்கவே எரிச்சலாக இருக்கிறது..

NAGA INTHU said...

//இவர்கள் பாடிய பல பாடல்கள் சாதாரண மக்களைக் கவர்ந்தாலும்..நீதிபதிகள் அவர்கள் செய்த தவறை சுட்டிக் காட்டுகையில் தான்..இவ்வளவு தவறுகளா? என அறிகிறோம்..//

ஆனால்..சிறந்த பாடகரை தேர்ந்தெடுக்கும் பணியை மக்களிடமே சேனல் ஒப்படைத்தது சரியில்லை என்றே தோன்றுகிறது..இதனால்..மக்களின் கண்ணோட்டத்தில்..சிறந்த பாடகர் யார் என்பதைவிட..பச்சாதாபம், வயது, பாகுபாடு ஆகியவை குறுக்கே நிற்கக்கூடும்..நீங்கள் கூறியபடிதான் WILDCARDசுற்றில் நடந்தது.ஸுரிகாந்த் வயது பச்சாதாபம் மட்டுமே தேர்வாக காரணம். திறமை அங்கே அடிபட்டுவிட்டது.

Bruno said...

சார்

ஏர்டெல் இந்த நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்வதற்கு முக்கிய காரணம் - போட்ட காசை குறுஞ்செய்தியில் எடுத்துக்கொள்ளலாம் என்ற தைரியம்

--

இதில் திறமை எல்லாம் பின்னால் தான்

--

குறுஞ்செய்தி மூலம் வருமானம் . அம்புட்டுதான்

ராம்ஜி_யாஹூ said...

Chinmayi, Dhivya, kartick all have become good singers and earn decent money only through these TV programmes.

goma said...
This comment has been removed by the author.
goma said...

எஸ்.எம் எஸ் .மூலம் தேர்வு செய்வதென்றாலே அது வடிகட்டின வியாபாரத் தந்திரம்.
அதுவும் ஒரு நபருக்கே எத்தனை முறை வோட்டு அளித்தாலும் ஓகே என்கிறது..
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் ..பாடல் உலகம் உள்ளவரை ஒலித்துக் கொண்டே இருக்கும் போலிருக்கிறதே

June 15, 2010 2:59:00 AM PDT

"உழவன்" "Uzhavan" said...

மிகச் சரி. பலரின் கேள்விகளும் இதுதான்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

சரியா சொன்னீங்க டிவிஆர் சார். ஆனால் தோல்வியுறும் குழந்தைகள் மனதில் சிறுவயதிலே பொறாமையை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. நடன நிகழ்ச்சியிலும் அப்படித்தான். அந்த குழந்தைகளை பார்க்க பாவமாக உள்ளது. இதுகெல்லாம் காரணம் பெற்றோர்கள்தான்.

Seshadri said...

Dear all,

TV Remote is with us only. this is not a essential too. if you don't like don't watch or don't participate.

in the race life you have to run other wise galary is waiting for you.

ஹேமா said...

எங்கும் எதிலும் அரசியல்.
இங்கு திறமை கணிக்கப்படவில்லை.
நானும் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
ஹேமா .
seshadri

SENTHILKUMARAN said...

தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல் என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி ஒரு மோசமான ஊழல் செயல்பாடு, இதில் பங்கேற்கவே அல்காவிற்கு தகுதி கிடையாது. அவள் தமிழகத்தில் வசிப்பவள் இல்லை, மலையாள சித்ராவின் ஊழல், ஆரம்பத்திலிருந்தே அவளையும் ரோஷனையும் தூக்கி வைத்தே நடத்தினர். காரணம் இருவரும் மலையாளிகள். தமிழகத்தின் செல்ல குரலுக்கு மலையாள பெண் எதற்கு? சினிமா இசை துறை முழுவதும் மலையாள பேய்கள் ஆட்சி செய்கின்றன. மிக அருமையாக பாடிய பிரியங்காவை அவள் அல்காவிற்கு பெரிய போட்டி என்பது தெரிந்து சாமர்த்தியமாக விலக்கி விட்டு பின் பிச்சை போடுவதுபோல ஒரு லட்சத்தை கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியின் காமெடி பீஸ் ஸ்ரீகாந்தை தேவையில்லாமல் இறுதி சுற்றுக்கு கொண்டுவந்தனர். நாட்டிய நங்கை நித்யஸ்ரியையும் இறுதி சுற்றுக்கு கொண்டுவந்தது சரியில்லை. ஒரு மலையாள பாடகி ஒரு தெலுங்கு பாடகன் இவர்கள் தமிழகத்தின் செல்ல குரலை தேடினால் இப்படிதான் செய்வார்கள். அதிலும் மலையாளிகள் மிக மிக கேவலமான நன்றி கெட்டவர்கள். ஒரு தமிழ் பெண் கேரளா சென்று எவ்வளவு திறமை இருந்தாலும் பரிசு வாங்க முடியுமா நினைத்து பாருங்கள். எங்கேயோ கிடந்த சித்ரா, ஸ்வர்ணலதா, மஹதி இவர்களுக்கு விலாசம் கொடுத்தது தமிழ்நாடு ஆனால் இவர்களோ இதற்கு ஒரு போதும் நன்றியுடன் இருக்க மாட்டார்கள். தமிழ் பெண் தடித்த எருமை என்று ஏளனம் செய்வார்கள். இவர்கள் நாட்டு பெண்கள் கொழுத்த வெள்ளை பன்றிகளை போலவும் இவர்கள் நாட்டு ஆண்கள் வெள்ளை எருமைகள் போலவும் உலவுவதை உணராமல் பேசும் முட்டாள்கள். மலையாளிகள் எப்படி பட்டவர்கள் என்பதை இந்திய சீனா யுத்தம் வந்தபோதே கிருஷ்ணமேனன் செய்த தேச துரோகம் பற்றி அறிந்தவர்கள் அறிவார்கள். கேவலமான இந்த மலையாளிகளை துரத்தினால் தான் தமிழகம் உருப்படும்.