Tuesday, September 7, 2010

வங்கி நிர்வாகத்தினரின் மனிதாபிமானம்






8-9-10

நேற்று தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பல மாநிலங்களில் பாதிக்கப் பட்டது.

விலைவாசி உயர்வு,தொழிலாளர் விரோதக் கொள்கை,தனியார் மயமாக்கல்,காலி பணியிடங்களை நிரப்புதல் போன்ற காரணங்களை வேலை நிறுத்தம் வலியுறுத்தியது.

வங்கி ஊழியர்கள் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்ததில் கலந்துக் கொண்டனர்.

இப்போது இடிகையின் தலைப்பிற்கு வருவோம்...


வங்கிகளில் ஓய்வூதிய திட்டம் 1993ஆம் ஆண்டு வந்தது.பென்ஷன் விரும்பும் ஊழியர்..அதற்கான விருப்பத்தை தெரிவித்தால்..வங்கியின் வருங்கால வைப்பு நிதிக்கான சேமிப்பு பென்ஷன் நிதியில் சேர்க்கப் படும்.ஓய்வு பெறுகையில்..நமது PF Contribution மட்டுமே தரப்படும்.வங்கி சேமிப்பு பென்சனாக மாதா மாதம் தரப்படும்.அதற்கு விருப்பப் படாதவர்கள்..பென்ஷன் ஸ்கீமிலிருந்து விடுவிக்கப் பட்டு தனது பங்கு,வங்கியின் பி.எஃப்,., பங்கு இரண்டும் ஓய்வு பெறுகையில் பெறலாம்.

நீண்ட கால சேமிப்பு அதிகம் கிடைக்கும் என்பதால் பலர் பென்ஷன் ஸ்கீமில் சேராமல்..PF ஐ ஆப்ட் செய்தனர்.

இந்நிலையில் 2001 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப் பட்டு..பலர் விருப்ப ஓய்வு பெற்றனர்.அப்போது அவர்களுக்கு கிடைத்த பி.எஃப்.,ஐ பெற்றனர்.அவர்கள் முழு சர்வீஸ் செய்யாத நிலையில் பென்ஷனையும் இழந்து இரு தரப்பு பணம் சேர்ந்தும் குறைந்த அளவே பி.எஃப்., , தொகை கிடைத்தது.

அப்படிப்பட்டவர்களுக்கு..வங்கி வழங்கிய பி.எஃப்., தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்தினால்..பென்ஷன் நவம்பர் 27 /2009 முதல் வழங்கப்படும் என வங்கி நிர்வாகிகளுக்கும்..தொழிற் சங்கங்களுக்கும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

வங்கியை விட்டு, ஓய்வு பெற்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழிந்தும்..ஓய்வு பெற்ற ஊழியர்கள் நலனை உத்தேசித்து..இப்படிப்பட்ட திட்டம் வெளிவந்ததை ஊழியர்கள் அனைவரும் போற்றுகின்றனர்.

இதைப் போன்று பல ஆண்டுகள் முன்னர் ஓய்வு பெற்ற ஊழியர் நலனுக்கான திட்டத்தை இதற்கு முன் கேள்விப் பட்டு இருக்கிறோமா?

ஓய்வு பெற்ற ஊழியர் நலனை மறவாமல்..இத் திட்டம் கொண்டுவர காரணமாயிருந்த அனைவருக்கும் பாராட்டுகள்.

6 comments:

Chitra said...

ஓய்வு பெற்ற ஊழியர் நலனை மறவாமல்..இத் திட்டம் கொண்டுவர காரணமாயிருந்த அனைவருக்கும் பாராட்டுகள்.


......பாராட்டப்பட வேண்டிய விஷயம்ங்க!

Vidhya Chandrasekaran said...

நல்ல விஷயம்.

Karthick Chidambaram said...

பாராட்டப்பட வேண்டிய விஷயம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Karthick Chidambaram said...
பாராட்டப்பட வேண்டிய விஷயம்//


நன்றி Karthick Chidambaram