Wednesday, September 22, 2010

எந்திரன்..சில நொறுக்ஸ்..1) சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்துக்கான அட்வான்ஸ் புக்கிங் அமெரிக்கா வில் தொடங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது. வட அமெரிக்கா முழுவதற்குமான எந்திரன் பட டிக்கெட்டுகள் விற்பனை துவங்கிய பத்தே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டன.

முதல் ஒருவாரத்துக்கான டிக்கெட் விற்பனை நிலவரம் இது. 'அமெரிக்காவில் இதுவரை எந்த ஒரு இந்தியப் படத்துக்கும் இத்தனை வேகமாக டிக்கெட்டுகள் விற்பனையானதில்லை. அந்த வகையில் மிகப் பெரிய சாதனை இது', என்கிறார்கள் சன் பிக்சர்ஸ் தரப்பில்.

பொதுவாக, அமெரிக்காவில் வெளியாகும் இந்தியப் படங்களுக்கு, வெளியாகும் தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் டிக்கெட் விற்பனை துவங்கும். ஆனால் எந்திரனுக்கு 12 தினங்களுக்கு முன்பே டிக்கெட் விற்பனை துவங்கிவிட்டது.

2)இந்த படத்தில் ஒரு எலெக்ட்ரானிக் கொசு நடித்திருக்கிறது. அதற்கு எழுத்தாளர் சுஜாதா 'ரங்குஸ்கி' என்று பெயர் வைத்திருக்கிறார். சின்ன வயதில் அவரை அவரது நண்பர்கள் அப்படி அழைப்பார்களாம்.

ஒரு ஸ்கிரிப்ட் எழுதுகிற அளவுக்கு பா.விஜய் பாடலை எழுதிக் கொடுத்தார். அதுதான் 'கிளிமஞ்சாரோ' பாடல். ட்ரெய்லர் உருவாக்க, தனி ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுங்கள் அதை வைத்து நான் உருவாக்குகிறேன் என்று எடிட்டர் ஆண்டனி சொன்னார். அதன்படி பிரமாதமாக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

சந்தானமும் கருணாசும் காமெடி செய்திருக்கிறார்கள். கருணாஸ் இயக்குனரின் நடிகர். தனியாக வசனம் பேசாமல் இயக்குனர் சொல்கிற வசனத்தை மட்டும் பேசக் கூடியவர்.

ரஜினி சயின்டிஸ்ட் வேடத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார். எந்திர மனிதனாகவும் நடித்திருக்கிறார். மூன்றாவதாக ஒரு சஸ்பென்ஸ் கேரக்டர் இருக்கிறது. கடைசி 45 நிமிடம் கலக்கும்

நியூயார்க்கின் ஜாக்ஸன் ஹைட்டில் டிக்கெட் விற்பனை கவுன்டர் திறக்கப்பட்ட அடுத்த 10 நிமிடங்களில் முழுவதுமாக விற்றுத் தீர்ந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை பெற்றனர். பலர் டிக்கெட் கிடைக்காத ஏமாற்றத்தில் திரும்பிச் சென்றனர்..

3)இன்னும் சில தினங்களில் எந்திரன் வெளியாகப் போகிறது. எனவே வாக்களித்தபடி ரசிகர்களைச் சந்திக்கவும், மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்காக அவர்களுக்கு சிறப்பு விருந்தளிக்கவும் ரஜினி முடிவு செய்துள்ளார்.

3)சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தமிழகத்திலும் துவங்கியது.

வரும் அக்டோபர் 1-ம் தேதி சென்னை யில் 32 திரையரங்குகளிலும், சென்னை புறநகர் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் எந்திரன் படம் வெளியாகிறது. அண்ணா சாலையில் மட்டும் 12 திரையரங்குகளில் எந்திரன் திரையிடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் எந்திரன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 2250 பிரிண்டுகளுடன் 3000 அரங்குகளில் திரை விருந்து படைக்கவிருக்கிறது எந்திரன்.

இந்தப்படத்தின் இறுதி கட்ட சவுண்ட் மிக்ஸிங் பணிகள் நேற்று முடிவுக்கு வந்தது. இயக்குநர் ஷங்கர் மேற்பார்வையில் ஏ ஆர் ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் இந்தப் பணிகளை மேற்கொண்டனர்.

அனைத்தும் முடிந்ததும், ஷங்கர் உள்ளிட்ட குழுவினர் ரஜினிக்கு எந்திரனின் முதல் பிரதியை போட்டுக் காட்டுகின்றனர். படத்தைப் பார்த்த கையோடு இமயமலைக்குச் செல்லும் ரஜினி, ஒரு மாத ஓய்வுக்குப் பிறகு சென்னை திரும்புகிறார்.

4)சூப்பர் ஸ்டார் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கியுள்ள விஞ்ஞானப் படம் எந்திரன் - தி ரோபோ. தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் முதல் விஞ்ஞானப் படம். உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை இந்தப் படத்தில் ஒருங்கிணைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர். மாட்ரிக்ஸ், தி போர்பிட்டன் கிங்டம் போன்ற படங்களின் ஸ்டன்ட் இயக்குநர் யான் வூ பிங்தான் எந்திரன் சண்டைப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர். அவருடன் பீட்டர் ஹெயினும் இணைந்துள்ளார்.

ஏலியன்ஸ், டெர்மினேட்டர் 2, ஜூராஸ்ஸிக் பார்க் என ஹாலிவுட் பிளாக்பஸ்டர் படங்கள் மூலம் பிரமிக்க வைத்த ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோ எந்திரனுக்கு அனிமேட்ரானிக்ஸ் பணிகளைச் செய்துள்ளது.

5)படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பணிகளை ஹாலிவுட்டின் லைட் அண்ட் மேஜிக் நிறுவனம் செய்துள்ளது.அவதார், ஸ்டார் வார்ஸ், டைடானிக் போன்ற மெகா ஹிட் படங்களுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்தவர்கள் இந்த நிறுவனத்தினர்தான். படத்தின் மொத்த பட்ஜெட்டில் 40 சதவீதம் ஸ்பெஷல் எஃபெக்டுக்காகவே செலவிடப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வெளியாகும் முதல் உலக சினிமா ரஜினியின் எந்திரன்.

14 comments:

Paleo God said...

ஆண்டவா சன் டிவியிலிருந்து எங்களைக் காப்பாற்று; எந்திரனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!

:))

Chitra said...

:-)

vasu balaji said...

/வட அமெரிக்கா முழுவதற்குமான எந்திரன் பட டிக்கெட்டுகள் விற்பனை துவங்கிய பத்தே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டன./

டிக்கட் கிடைக்காத வட அமெரிக்கத் தமிழ்ப் பதிவர்கள் ‘வட போச்சே’ சொல்லியிருப்பார்களா?

Unknown said...

எந்திரன் தி மாஸ் ..

suneel krishnan said...

ilm படத்தில் இல்லை . இந்தியன் ஆர்டிஸ்ட் எனும் நிறுவனம் தான் cg ..ஹாங் காங் நாட்டின் பிரபலமான இன்னொரு நிறுவனமும் இனைந்து உள்ளது .எது எப்படியோ இந்திய அளவில் இது ஒரு பெரும் முயற்சி தான்

ஆட்டையாம்பட்டி அம்பி said...

உண்மை இங்கே டிக்கெட்டே கிடைக்க வில்லை.

என்றும் எப்போதும் அன்புடன்,
ஆட்டையாம்பட்டி அம்பட்டன் அல்லது அமெரிக்கா அம்பட்டன்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ஆண்டவா சன் டிவியிலிருந்து எங்களைக் காப்பாற்று; எந்திரனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!

:))//

:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Chitra said...
:-)//

வருகைக்கு நன்றி சித்ரா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
டிக்கட் கிடைக்காத வட அமெரிக்கத் தமிழ்ப் பதிவர்கள் ‘வட போச்சே’ சொல்லியிருப்பார்களா?//

:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
எந்திரன் தி மாஸ்//

Yes Boss

T.V.ராதாகிருஷ்ணன் said...

//dr suneel krishnan said...
ilm படத்தில் இல்லை . இந்தியன் ஆர்டிஸ்ட் எனும் நிறுவனம் தான் cg ..ஹாங் காங் நாட்டின் பிரபலமான இன்னொரு நிறுவனமும் இனைந்து உள்ளது .எது எப்படியோ இந்திய அளவில் இது ஒரு பெரும் முயற்சி தான்//

வருகைக்கு நன்றி dr suneel

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆட்டையாம்பட்டி அம்பி said...
உண்மை இங்கே டிக்கெட்டே கிடைக்க வில்லை.

என்றும் எப்போதும் அன்புடன்,
ஆட்டையாம்பட்டி அம்பட்டன் அல்லது அமெரிக்கா அம்பட்டன்!//

:))

கோவி.கண்ணன் said...

ஜோதியில் ஐக்கியமானதற்கு வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
ஜோதியில் ஐக்கியமானதற்கு வாழ்த்துகள்//

:)))