Sunday, September 2, 2012

விகடனும்..ராஜுமுருகனும்...
ஆனந்தவிகடனில்..சுஜாதா (கற்றதும் பெற்றதும்), வண்ணதாசன் (அகமும் புறமும்),நாஞ்சில் நாடன் (தீதும் நன்றும்), எஸ்.ராமகிருஷ்ணன் (துணையெழுத்து) வரிசையில் ராஜூமுருகனின் வட்டியும் முதலும்..பெரும்பான்மையினர் படித்து வருவது தெரியும்.ஆயினும்..ஏதேனும் பரவச நிகழ்ச்சி நடந்தால்..அதை அனைவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என எண்ணுவதில்லையா?  அப்படி ஒரு எண்ணமே..இப்பதிவு..

ஒவ்வொரு வாரமும் அருமையாக எழுதி வரும்..ராஜூமுருகன்..இவ்வாரம் பயணத்தைப் பற்ரி எழுதியுள்ளார்.கரும்பின் சுவை.இருப்பினும் அடிக்கரும்பாய் சுவையைத் தரும் பகுதி கீழே..

"என் வாழ்க்கையில் சரிபாதிப் பொழுதுகள் பயணங்களுடந்தான் கழிந்திருக்கின்றன.வித விதமான பஸ்களும் ரயில்களும் ஒலிகளும், ஒளிகளும் வார்த்தைகளைக் கடந்த காட்சிப் படிமங்களாக மனதில் படிந்துகிடக்கின்றன.மூணாறு மலையில் போய் பஸ் திரும்புகிற நொடியில் ஒரு பெரிய அன்னாசி தோட்டமும் நடுவில் நிற்கிற ஒற்ரை மனுஷியும் பொசுக்கென்று எல்லாவற்றையும் வெளித்தள்ளி மனதில் நிரம்பிவிடுகிறார்கள்.தடதடத்துப் போகும் பெரும் தேயிலைக்காடு, திருச்சியைத் தொடும்போது வரும் ரசாயனத் தொழிற்சாலையின் துர்நாற்றம், வேலூர் மண்ணுக்குள் நுழையும் போது அடிக்கும் தோல் பதனிடும் நாற்றம், நீடாமங்கலத்தைத் தாண்டியதும் ஒரு பாழ் மண்டபச் சுவரில் கடக்கும் 'கோல்ட் ஸ்பாட்" விளம்பரம்,கரிசல் அறுந்து சடாரெனச் செம்மண் விரியும் ஒரு புள்ளி, பளையங்கோட்டையை கடக்கும் போதெல்லாம் பாதி உதிர்ந்த பைபிள் வாசகங்களோடு கடக்கும் மேரி மாதா, கோயம்பத்தூர் எல்லை வந்ததுமே பாஜாஜ் எம் 80யில்  பஞ்சு மூட்டை கட்டிக் கொண்டு கடக்கும் ஒருவர், ராத்திரி எப்போது கடக்கும் போதும் இட்லிப் பானை மூடியைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆத்தா பேசிக் கொண்டிருக்கிற மதுரை டவுன் ஹால் ரோடு, அதிகாலையில் 'சரவணப் பொய்கையில்' பாடல் ஒலிக்கும் மினி பஸ்சில் பச்சைப் பசேலெனக் கறிவேப்பிலை வாசம் தூக்க வாழை இலைக்கட்டுகளுக்கு நடுவே உட்கார்ந்து இருக்கும் நாஞ்சிக் கோட்டை ரோடு, 'சூடா சமோசே..சூடா சமோசே..' என ஒருவர் ராகம் பாட ஒவ்வொருமுறை மின்சார ரயில் கடக்கும்போதும் புதிதாக வரும் செங்கல்பட்டு ஏரி, மூட்டைப் பூச்சிகள் மண்டிய மரப்படுக்கையும் காரை உதிர்ந்த சுவர்களும்.."ஆந்திரா மால் சார்..நருவுசு சார்..போலீஸ் பிராப்ளம்லாம் இல்ல..வேணுமா?' என்கிற சித்தூர் லாட்ஜ், கொல்லை முற்றத்தில் குளமும் பேரழகு இருளில் பொசுக்கென்று விளக்கெரியும் கோயில் கொண்ட திருச்சூர் என வெயிலும் மழையும் ஒளியும் இருளும் ஒவ்வொரு பயணத்துக்கும் புதிது புதிதாக இருக்கின்றன"

அடடா...என்ன ஒரு ரசனை..

நான் தொடர்ந்து இவரை படித்து வியந்து வருகிறேன்..ஆனால் இந்த வாரம்..என் வியப்பு எல்லை மீறியதால்..உடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

படிக்காதவர்கள் கண்டிப்பாய் படிக்கவும்...

7 comments:

Ramani said...

நானும் ராஜு முருகனின் எழுத்தின் தீவீர ரசிகன்
பாஸாங்க்கற்று நாமும் உணரும்படி அவர்
எழுதிப்போகும் நேர்த்தி எப்போதும் என் மனம் கவரும்

Ramani said...

tha.ma 2

முரளிகண்ணன் said...

சார் எப்படி இருக்கீங்க? நலமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி முரளி..
நலமாகவே இருக்கிறேன்..
பதிவர் சந்திப்பு நடத்திய பலருக்கு அது தெரியாது என்றே எண்ணுகிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Ramani

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் ரசிக்க வைக்கிறது... நன்றி...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்