Saturday, September 29, 2012

பாவம்...கார்ப்பரேட் கம்பெனி ஊழியர்கள்...



ஆபிஸ் ஃபுல்லா ஏசி, தூசி படாத வாழ்க்கை, கை நிறைய சம்பளம், அவனுக்கு என்னப்பா ராஜ வாழ்க்கை என்று கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்களைப் பார்த்து பொறாமைப்படுபவரா நீங்கள். அவசரப்படவேண்டாம். கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் 72 சதவிகித ஊழியர்களுக்கு இதயநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு முடிவு ஒன்று எச்சரிக்கின்றது.
உலக இதயதினத்தை ஒட்டி அபாயகரமான வேலைகள் பற்றியும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் ASSOCHAM கணக்கெடுப்பு ஒன்று நடத்தியது. அதில் பகல்நேர வேலை பார்ப்பவர்களை விட இரவு நேர வேலை பார்ப்பவர்களுக்கு 52 சதவிகிதம் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களுக்கு ஏற்படும் மாறுபாடான தூக்கம், ஜங்க் ஃபுட் சாப்பிடுவதுவது, சரியான உடற்பயிற்சியின்மை போன்றவையே என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், ஹைதராபாத், சண்டிகர், டெக்ராடூன் உள்ளி நகரங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். இதில் டெல்லியில் பணிபுரிபவர்கள் இதயநோய் அதிகம் தாக்குவது தெரியவந்தது. அதில பெங்களூரு இரண்டாவது இடத்திலும் மும்பை 3 வது இடத்திலும் அகமதாபாத், சண்டிகர், ஹைதராபாத், பூனே போன்ற நகரங்கள் அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளன.
இன்றைக்கு இந்தியாவின் நகர்புறங்களில் வசிக்கும் இளையதலைமுறையினர், இதயநோய், பக்கவாதம் போன்றவைகளினால் பாதிக்கப்படுகின்றனர் அதற்குக் காரணம் அவர்களின் பணிப்பளுதான். சரியான உணவின்மையும், உடற்பயிற்சியின்மையும் அவர்களுக்கு நோய் தாக்க காரணமாகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். இரவு நேர ஷிப்ட் வேலை மனிதர்களின் வாழ்க்கைத் திறனையே மாற்றிப்பட்போட்டு விடுகிறது. அவர்களுக்கு உயர்ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, நீரிழிவு போன்றவை ஏற்பட காரணமாகிறது என்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவரான டாக்டர் பி.கே. ராய்.
கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஐடி, பிபிஒ, கட்டுமானத்துறை, எரிசக்தி, மனிதவளம் உள்ளிட்ட 18 நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்றனர். ஆய்வின் முடிவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கைநிறைய சம்பளம் மட்டும் வாங்கவில்லை மனதில் அழுத்தத்தையும், போனசாக நோயையும் வாங்கிக்கொள்கின்றனர் என்று தெரியவந்தது. இதில் முதலிடத்தை இதயநோயும், பக்கவாதமும் பிடித்துள்ளது, இரண்டாவது இடத்தை உடல்பருமனும், மனஅழுத்தம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு முறையே நான்காவது, ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இனிமேல் யாராவது அவனுக்கென்னப்பா கார்ப்பரேட் கம்பெனியில வேலை என்று மட்டும் அசால்டாக சொல்லி விடாதீர்கள்.

(நன்றி- தட்ஸ்தமிழ்

10 comments:

வவ்வால் said...

ஏன் சாரே,

கை நிறைய சம்பளம் வாங்காமலே நோய் வாய்ப்படும் வாய்ப்புள்ள சுத்திகரிப்பு தொழில் எனப்படும் , குப்பை அள்ளுதல்,சாக்கடை தூர் வாறுதல், மாநகர மருத்துவ பிணவறை ஊழியர்கள் எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லையா?

அவங்க எல்லாம் அடிமட்ட சம்பளத்துக்கு அழுக்கான வேலை பார்த்துக்கிட்டு , அவ்வப்போது , 50 அல்லது 100 எனக்கேட்டால் அதை லஞ்சம் என சொல்லி திட்டும் உயர் வர்க்கம் தானா நீங்கள்?

நல்லா பொழுது போகுது மக்களுக்கு,உங்களை சொல்லவில்லை.

Yaathoramani.blogspot.com said...

நல்லதொரு எச்சரிக்கைப் பதிவு
பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Kathiravan Rathinavel said...

உண்மை நண்பரே,
என் நட்புகளிடம் இதை நான் உணர்கிறேன்,
1 வருடத்தில் 10 கிலோ குறைந்துள்ளார்கள்

Unknown said...

நல்ல பதிவு. உண்மையான கருத்துக்கள்..

Easy (EZ) Editorial Calendar said...

உண்மை கருத்துகளை கூறியதற்கு மிகவும் நன்றி...

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வவ்வால்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ramani

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி kathir rath

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மேகா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Easy