காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும்..என்றும் அதில் பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் அதுவரை 2டிஎம்சி நீர் தினசரி தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சொல்லியதால் கூட்டப்பட்டது ஆணைய கூட்டம்.
ஆணைய கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கேரளா சார்பில், முதல்வர்உம்மன் சாண்டிக்குப் பதில், நீர்ப்பாசன அமைச்சர் கலந்து கொண்டார். இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, "சம்பா சாகுபடியை காப்பாற்ற, வறட்சி காலத்தில் தண்ணீரை பகிர்ந்து கொள்வது குறித்து, நடுவர் மன்றம் கூறிய முறையை பின்பற்ற கர்நாடகா முன்வர வேண்டும், கர்நாடக அரசின் செயல்களை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்திற்கு 24 நாட்களுக்கு தினசரி இரண்டு டி.எம்.சி., வீதம் 48 டி.எம்.சி., நீரை கர்நாடகா தரவேண்டும்' என்று வலியுறுத்தினார்.
ஆனால், கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், தொடர்ந்து வறட்சி நிலவி வருவதாகவும், பெங்களூரு நகரத்தில் குடிநீருக்கே தண்ணீர் வினியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறி, தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக முதல்வர் மறுத்தார்.தவிர்த்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பும் செய்தார்.
இதில் பிரதமர் குறைந்த பட்ச தண்ணீரை அளிக்கும்படி கூறியும்..கர்நாடகா மறுத்துவிட்டது.இதையடுத்து, இந்த கூட்டம் தோல்வியில் முடிந்தது.தொடர்ந்து, இந்த விஷயத்தில் தமிழகம் இனி சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்று பிரதமர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழகம், சுப்ரீம் கோர்ட்டை அணுகும் என்று கூறப்படுகிறது.
நம் பிரதமரைப் பார்த்தால் யாருக்குத்தான் பயம் வரும்.
6 comments:
ஜனனாயக நாட்டில் ஒரு முதல்வர் கூட்டத்திலிருந்து வெளினடப்பு செய்தால்
அவர் சட்டையைப்பிடித்து நிருத்தவாமுடியும். அவர் வெளியில் சென்றால் அதற்க்காக பிரதமரை பழிப்பது
என்ன நியாயம்.
பிரதமர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த முதல்வர்.ஜனனாயக நாட்டில் இது எல்லாம் சகஜம் ......
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
நம் பிரதமருக்கே தெரியாது...என்ன செய்ய வேண்டும் என்று...யாராவது சொல்லி கொடுத்தா தான் அவருக்கே தெரியும்...இத கூட புரிஞ்சிகாம நீங்க வெளி நடப்பு செய்து இருந்து என்ன பயன்...
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
சோனியா அடிமை சாமியிடமிருந்து என்ன கிடைக்கும்
//ஜனனாயக நாட்டில் ஒரு முதல்வர் கூட்டத்திலிருந்து வெளினடப்பு செய்தால்
அவர் சட்டையைப்பிடித்து நிருத்தவாமுடியும். அவர் வெளியில் சென்றால் அதற்க்காக பிரதமரை பழிப்பது
என்ன நியாயம். //
மணிர்!பிரதமரின் ஆளுமை என்பதையெல்லாம் நீங்க இன்னும் புரிந்து கொள்ளவில்லையென்பதையே உங்கள் பின்னூட்டம் வெளிப்படுத்துகிறது.
Karnataka is ruled at present by BJP, who have a good vibes with Ms.Jayalalitha. Why not have some arrangement , without all this political drama?All the farmers of the Cauvery Delta need water.
Post a Comment