Saturday, February 2, 2013

சிவாஜி ஒரு சகாப்தம் - 8




1961ல் வந்த படங்கள்
பாவமன்னிப்பு
புனர்ஜென்மம்
பாசமலர்
எல்லாம் உனக்காக
ஸ்ரீவள்ளி
மருத நாட்டு வீரன்
பாலும் பழமும்
கப்பலோட்டிய தமிழன்

சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமின்றி...தமிழ்த் திரை உலகிற்கே மறக்க முடியா ஆண்டு. சிவாஜியின் அமர காவியங்கள் வெளியான ஆண்டு.

பாவமன்னிப்பு...சிவாஜி..பீம்சிங் கூட்டணி...ஜெமினி, சாவித்திரி,தேவிகா,ராதா..என நட்சத்திர கூட்டம்.தவிர அனைத்து பாடல்கலும் தேன்.விஸ்வனாதன்-ராமமூர்த்தி இசை.முதன்முறையாக இசைத்தட்டுகள் அதிக அளவில் விற்கப்பட்டது..இந்த படத்திற்குத்தான்.சாந்தி திரை அரங்கில் வெள்ளிவிழா கொண்டாட்டம்.தேசிய அளவில் இரண்டாம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெள்ளிபதக்கம் பரிசு பெற்ற படம்.

பாசமலர்...அண்ணன் தங்கை பாசம்...இன்று பாசத்துடன் இருக்கும் அண்ணன்-தங்கைகளைப் பார்த்து அவர்கள் பாசமலர்கள்..என்று சொல்லும் அளவு அனைவரையும் பாதித்த படம்.அருமையான பாடல்கள்..வெள்ளிவிழா படம்.தமிழின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படம்.சாவித்திரி...சிவாஜி..இருவரும் நடிக்கவில்லை...பாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள்.

பாலும் பழமும்...சரோஜாதேவியுடன் நடிகர்திலகம்..நல்ல பாடல்கள்..திறமையான நடிப்பு..ஆகியவற்றிற்காக 100 நாட்கள் ஓடிய வெற்றி படம்.

கப்பலோட்டியதமிழன்....படம் பார்த்த வா.உ.சி., குடும்பமே சிவாஜி அந்த பாத்திரத்தில்..வா.உ.சி., போலவே இருந்ததாக பாராட்டினர்.படம் ஆனால் உழைப்பிற்கேற்ற பலன் தரவில்லை.தோல்வி. ஆனாலும்..தேசிய அளவில் தேசிய ஒற்றுமைக்கான பட விருது பெற்றது.

மற்றபடி...ஸ்ரீதரின் புனர்ஜென்மம்,எல்லாம் உனக்காக,ஸ்ரீவள்ளி, மருதநாட்டுவீரன் ஆகியவை எண்ணிக்கையை மட்டுமே அதிகரித்தன.

இந்த ஆண்டு..கடந்த இரு வருடங்களில் 5 வெள்ளிவிழா படத்தைக் கொடுத்த சிவாஜி ஆண்டு
கட்டபொம்மன்,பாகப்பிரிவினை,இரும்புத்திரை,பாவமன்னிப்பு,பாசமலர்.
சிவாஜி படத்திற்கே 3 தேசிய விருதுகள் கிடைத்த ஆண்டு.

1962 படங்கள் அடுத்த பதிவில்


3 comments:

கவியாழி said...

சிவாஜிக்கு இணையாக நடித்தவரும் இல்லை இனி நடிக்கபோவதுமில்ல அவர் மகா கலைஞன்

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் குறிப்பிட்ட படங்கள் எத்தனை முறை பார்த்திருக்கிறேன் என்று கணக்கிட முடியாது...

ந.சுந்தரராசன் மூவர்கோட்டை said...

நடிப்பின் இமையம், நடிப்பு சக்கரவர்த்தி என்றால் அது நடிகர் திலகம் மட்டும்தான் படம் பார்க்கும்பொழுதே என் மனதில் உள்ள பாரம் இறங்கி அழுதிருக்கின்றேன் என்றால் அது நடிகர் திலகம் படங்கள் பார்க்கும் பொழுது மட்டும் தான்.... நல்ல பதிவு மிக்க நன்றி