அன்பின் தொல்ஸ்,
வணக்கம்.
அபி, நடராஜன் எப்படியிருக்கிறார்கள்?
சரி, விஷயத்திற்கு போகலாமா?
சென்னையிலிருந்து, தலைவர்கள் போல தில்லி உயர் இடத்திற்கு நம்மால் கடிதம் எழுத முடியாவிடினும், சென்னை..மாயவரம் இடையே எழுத முடியும் என்று சொல்வதற்கே இக்கடிதம்.
தங்களின் சமீபத்திய பதிவொன்றில்..நான் , இக்கிணியூண்டு பதிவிடுவதாக ..எழுதியிருந்ததைக் காண முடிந்தது.அதை நகைச்சுவையாக நான் எடுத்துக் கொண்டாலும்..அதற்கான காரணங்கள் என்ன..என உங்களைப் போன்ற என் நலம் நாடுவோர்க்கு சொல்ல வேண்டியதன் அவசியத்தை அது எனக்கு உணர்த்தியது.
முதலில்...என்னைப் பொறுத்தவரை...பதிவிடுவது..என்பது..டயரிக்குறிப்பு போலத்தான்..
நமக்கு இன்று தோன்றுவது..நாளைக்கு மறந்து விடலாம்..அதை மறக்காமல் இருக்க..ட
யரியில் குறித்துக் கொள்வது போல பதிவில் எழுதி விடுகிறேன்.என்ன ஒன்று..என் டயரிக் குறிப்பை மற்றவர் படிக்க முடியாது.ஆனால்..என் பதிவை மற்றவர்கள் படிக்கலாம்.
அடுத்ததாக..
என்ன செய்வது..எனக்கு கற்பனை வளம் குறைவோ என்னவோ....புனைவுகளை நீட்டி முழக்கி எழுதத் தெரியவில்லை.அதற்கு என் தமிழாசிரியர் கூட காரணமாய் இருக்கலாம்....சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும் என எனக்கு முதலில் கற்பித்தவர் அவர்.
மேலும்..புராணகாலங்கள் முதல்..சமீபத்திய நாள் வரை..சுருங்கச் சொன்னவை..பெரும் அர்த்ததைக் கொண்டவையாக இருந்துள்ளன..அவற்றில் சில...
ராமாயணத்தில் அனுமன் சீதையைக் கண்டு வந்ததுமே, ராமனைப் பார்த்து..'கண்டேன் சீதையை' என்றான்.
அவசரக் கால நிலை இந்திரா அறிவித்த போது, ஜெயபிரகாஷ் நாராயணன், 'விநாசக் காலே விபரீத புத்தி' என சுருங்கச் சொன்னார்,
சினிமாக்களில் கூட, 'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்' 'சபாஷ் சரியான போட்டி' 'மணந்தால் மகாதேவி..இல்லையேல் மரணதேவி' போன்ற ஒரு வரி வசனங்கள்..மனதில் 'பிசுக்' என ஒட்டிக் கொண்டவை.
அரசியலில், 'காலத்தின் கட்டாயம்' இன்றும் மறக்க முடியாத கட்டாயமாக உள்ளது.
சினிமா விமரிசனங்களில் கூட, பாலசந்தர் ஒரு விமரிசனத்திற்கு அளித்த, "I plead guilty' பதிலும், ஒரு படத்திற்கு, வார இதழ் ஒன்று எழுதிய ஒரே சொல், 'சே' என்ற விமரிசனமும் மறக்க முடியாமல் மனதில் நின்றவை.
ஆதலால்..நானே எனக்குள்..சிறிய குறிப்புகள்..சிறிய பதிவுகள்..எளிதில் மனதைக் கவர்ந்துவிடும்..என்ற தப்பான அர்த்தத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட்டேன் என எண்ணுகிறேன்.
அடுத்ததாக, நீங்கள் எனக்கு மிகவும் வேண்டியவர் என்பதாலும்..நீங்கள் யாரிடமும் சொல்ல மாட்டீர்கள் என்பதாலும், இந்த ரகசியத்தை உங்களிடம் சொல்கிறேன்..
நம்ம வலைப்பூவை படிக்க வருபவர்கள்..வெறும்..'கையளவே'..உதாரணத்திற்கு 300 பேர் வருகிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள்.நானும், உங்களைப் போல பதிவை பெரிதாக எழுதி அதை 300 பேர் வாசிப்பது பெரிதா...அந்தப் பதிவையே..ஐந்து பிரிவுகளாக்கி,அதை தினம் ஒன்றாக பிரசுரித்து..5x300= 1500 பேர் படிப்பதாக சொல்லிக் கொள்வது பெரிதா..என யோசித்து..சுயநலமிகுதியால்...இரண்டாவதையே தேர்ந்தெடுத்து..அதை நடைமுறைப்படுத்திவருகிறேன், என்றும் கொள்ளலாம்..
இதில் தவறு இருக்கிறதாக நான் நினைக்கவில்லை.அப்படி ஏதேனும் இருப்பதாக..நினைத்தால்..சுட்டிக்காட்டினால்..தவறை திருத்திக் கொள்வதுடன்..நன்றியுள்ளவனாய் இருப்பேன்.
அன்புடன்
டி.வி.ராதாகிருஷ்ணன்.
டிஸ்கி- இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டதுதான்.வேறு அர்த்தம் எடுத்துக் கொண்டு, மண்டையைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்..
டிஸ்கி- 2..இன்று என்ன பதிவிடுவது என்ற குழப்பம் ஏற்பட்டது.அதைத் தீர்த்து வைத்த தொல்ஸுக்கு நன்றி.
3 comments:
சுருங்க சொல்லி விளங்க வைக்கும் உங்கள் பாணி சிறப்பு! தொடருங்கள்! நன்றி!
வருகைக்கு நன்றி S suresh
வருகைக்கு நன்றி Rathnavel Natarajan sir
Post a Comment