Friday, February 22, 2013

சிரிப்போம்..சிரிக்க வைப்போம்..(ஒரு பக்கக் குறிப்புகள்)




வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி முக்கியம்..

பல முக்கியச் செய்திகள்..நகைச்சுவையோடு கலந்து கொடுத்தால் தான்..நாம் எதிர்பார்த்தபடி..எதிர்ப்பார்த்த நபர்களை சென்று அடையும்.

ஆகவேதான்..திரைப்படங்களிலும்..கலைவாணர் அவர்களின் நகைச்சுவை..சில சீரிய..கருத்துக்களுடன் இருக்கும்.நகைச்சுவையாக சொல்லும்போது..முதலில் சிரித்தாலும்..பின்னர் அதில் பொதிந்திருக்கும் செய்தியை உணர்வோம்.

சிலர்...என்னதான் சிரிப்பான செய்தியைக் கேள்விப்பட்டாலும்...சிரிக்காமல்..எதையோ பறிகொடுத்தது போல் ..முகத்தை..சீரியஸ் ஆக வைத்திருப்பார்கள்.

நம்மை சிரிக்க வைத்த காமெடியன்கள் பலர் வாழ்க்கை..சோகமயமானது.உதாரணத்திற்கு..நடிகர் சந்திரபாபுவை சொல்லலாம்..அவர்கள் தங்கள் சோகத்தை மறந்து..தண்ணீருக்குள் மீன் அழுதால்..அதன் கண்ணீரை யார் அறிவார்..என்பதற்கேற்ப..அவர் தனிப்பட்ட சோகத்தை மறைத்து நம்மை மகிழ வைத்தார்.

பணத்தை பெரியதாக நினைப்பவர்கள்...சிரிப்பை மறந்தவர்கள்..

எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..

சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்

சிரிப்போம்..வாய் விட்டு சிரிப்போம்...

வன்மத்தை விட்டு...எதிரியையும் சிரிக்க வைப்போம்..

சாதிக்க முடியாத விஷயங்களையும்..முக மலர்ச்சியுடன், எதிர் கொண்டால்..சாதிக்கமுடியும்..

(பதிவு பிடித்திருந்தால்..ஆதரவு வாக்களிக்கவும்)

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிரிக்க வைப்போம் - அது தான் முக்கியம்...

ப.கந்தசாமி said...

ஆமாங்க, உண்மைதான்.

ப.கந்தசாமி said...

ஓட்டுப் போடச் சொல்லியிருக்கீங்க. ஓட்டர் ஐடி தொலைஞ்சு போச்சுங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பழனி. கந்தசாமி

Sabarkhan said...

நன்றிகள் சார்...எல்லாமே அருமை சிலவற்றை எனது முக நூல் பக்கங்களில்...பகிந்தும் உள்ளேன்....

Sabarkhan said...

நன்றிகள் சார் எல்லா பதிவுகளும் அருமை...சிலவற்றை எனது முக நூல் பக்கங்களிலும் பகிர்ந்து உள்ளேன்....

Sabarkhan said...

நன்றிகள் சார்...எல்லாமே அருமை சிலவற்றை எனது முக நூல் பக்கங்களில்...பகிந்தும் உள்ளேன்....

புரட்சி தமிழன் said...

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.
"இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்."
இதுல அடுத்தவனுக்கு துண்பம் வந்த சிரிக்கனும்மா? இல்லை நமக்கு வந்த அடுத்தவன் சிரிக்கனுமானு சொல்லவே இல்லையே. ஒரு வேலை வள்ளுவர் ரொம்ப நல்லவருயா அதுனால அவர் சொன்னா அதுக்கு அர்த்தம் இதுவாதான் இருக்குமுனு எடுத்துகிட்டாங்களா?.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நீங்கள் கிண்டலுக்குக் கேட்டு நகைக்கிறீர்களா? எனத் தெரியாது..ஆனாலும்..

மற்றவருக்கு துன்பம் வரும்போது..நம்மை சிரிக்கச் சொல்லும்படி வள்ளுவர் கூறவில்லை.அவர் என்ன 'சேடிஸ்டா"
சாதாரணமாக நமக்கு ஏதேனும் கஷ்டம் வந்தால், தேற்றுபவர்கள், 'கவலைப்படாதே, எல்லா துன்பத்தையும் அனுபவித்துவிட்டாய், இனி உனக்கு கஷ்டமே வராது' என்பதில்லையா? அதுபோலத்தான்.

'காலா..உன்னை காலால் மிதிக்கிறேன் வாடா" என்றார் ஒரு புலவர்.காலால் மிதித்தால் காலன் அவரை விட்டுவிடுவானா?

அதுபோலத்தான்..ஒருவருக்கு வரும் துன்பத்தை அனுபவித்துத்தான் தீர வேண்டும்..ஏனெனில்..அதற்கு மேல் துன்பம் கிடையாது..இனி அடுத்து..மகிழ்ச்சிதான் என்னும் நிலை.

இதுதான் உலக நடைமுறை.

அதையே வல்லுவன் சொல்லியுள்ளார்.

எந்த நிகழ்ச்சியிலும்..மனம் தளராது..வருவதை ஏற்போம்..