உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவோர்
உறவு வேண்டாமாம்...
அனாதை ஆனதன் காரணம்
அதுதானாம்.
2)முக நூலில்
சகோதரியே என விளித்து
அக நூலில்
வேறு உறவாக்குகிறான் அவளை.
2)நான் சாதியம் பார்ப்பதில்லை
என்றிட்டான்
சாதிச் சான்றிதழை
பார்க்காதது போல பார்த்த
நேர்முகத் தேர்வாளன்
2)மதக்கலவரத்தைத்
தூண்டியவனே
உரைக்கின்றான்...
பாரதம் மதச்சார்பற்ற நாடென
5 comments:
இப்படியானவர்களுடனும் வாழ்கிறோம் என்ன செய்ய !
இவையெல்லாம் கண்டு கொள்வதில் தான் நம் திறமையே... சிலர் ஐக்கியமாவதால் தான் பிரச்சனையே...
சாட்டையடி வரிகள் ஒவ்வொன்றும் அருமை! நன்றி
தனபாலன் கருத்தை நான் வழிமொழிகிறேன்.
அருமையாக எடுத்துச் சொன்னீர்கள்.
Post a Comment