இந்த தேர்தலில்...கண்டிப்பாக தொங்கு நாடாளு மன்றமே அமையும் என்றே தெரிகிறது.மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குள் மறு தேர்தல் வர வாய்ப்பிருப்பதாக பல பத்திரிகைகளின் சர்வே தெரிவிக்கிறது.
சென்ற தேர்தலில்..தி.மு.,க., காங்கிரஸ்,இரு கம்யூனிஸ்ட்,பா.ம.க., ம.தி.மு.க.,ஆகியவை ஒரு அணியில் இருந்ததால் வெற்றிக்கனியை முழுதுமாக பறிக்க முடிந்தது.இந்த அணி பெற்ற மொத்த வாக்குகள்....1,64,83,390 .
ஆனால்..அ.தி.மு.க.,வும் பி.ஜே.பி., அணியும் பெற்ற வாக்குகள்1,00,02,913.. வாக்குகள் வித்தியாசம் கிட்டத்தட்ட 64 லட்சம்.
ஆனால் இந்த முறை..கம்யூனிஸ்ட்களும்,பா.ம.க.,வும்,ம.தி.மு.க.,வும் அ.தி.மு.க., அணியில் உள்ளன.
இந்த வாக்கெடுப்புப் படி முடிவு செய்வது என்பது தவறு என்றாலும்...இதன்படி தி.மு.க., அணிக்கு 52 லட்சம் வாக்குகள் குறைகின்றன.தி.மு.க.,விற்கு இது இழப்பு..
ஆனாலும்...இம்முறை எக்கூட்டணியும் 40 க்கு 40 என்பது முடியாது.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அது வெற்றி பெறுவது கடினமே...வெற்றி பெறும் வேட்பாளரும் குறைந்த வாக்குகள்வித்தியாசமே இருக்கும்..
இம்முறை அ.தி.மு.க., கண்டிப்பாக கணிசமான வெற்றியுடன் நாடாளு மன்றத்தில் நுழையும் என எதிர்ப்பார்க்கலாம்.
ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Showing posts with label அரசியல் தேர்தல் 2009. Show all posts

Thursday, April 9, 2009
Wednesday, March 25, 2009
கூட்டணியில் ஏன் சேரவில்லை - விஜய்காந்த்
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளையில் தன் பிரசாரத்தை விஜய்காந்த் தொடங்கினார்.
அப்போது அவர் ..மீண்டும் கூறினார்...
மக்களுடனும்...கடவுளுடனும் தான் தான் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளதாக. மூன்று சீட்டிற்கும் நான்கு சீட்டிற்கும் ஆசைப்பட்டு தான் கட்சி நடத்தவில்லை என்றும் ..அப்படி ஆசைப்பட்டிருந்தால்..பேரத்திற்கு பணிந்திருப்பேன் என்றும் கூறினார்.
செத்து மடியும் இலங்கை தமிழர்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும்..எடுக்கப்படவில்லை என்றும்..பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணம் பயன் எதையும் தரவில்லை என்றும் கூறினார்.
அவரது கட்சிக்கான..முதல் வேட்பாளர் பட்டியலை 9 தொகுதிகளுக்கு இன்று வெளியிட்டார்.

Friday, March 20, 2009
சீதாவாக மாறிய போயஸ் சகோதரி..
ராவணனை வதம் செய்துவிட்டு... சீதையுடன்..ராமேஸ்வரம் வந்தார் ராமர்.
ராவணன் உள்ளிட்டோரை கொன்றதால்...ஏற்பட்ட தோஷத்தைப் போக்க..கடல் மணலில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து..பரிகார சங்கல்பம் செய்தாராம் சீதை.பின் ராமரையும் அந்த லிங்கத்தை வழிபடச் சொன்னாராம்.அதன் பின்னரே ராமர்..அயோத்தி மன்னாராக பதவி ஏற்றார்.
தன் எதிரிகளை ருத்ர குணம் கொண்டு ஒடுக்கிய ராமரை பதவியில் அமரச் செய்த தலமே ராமேஸ்வரமாகும்.
நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தலில்...எதிர்க் கட்சிகள் மண்ணைக் கவ்வவும்..அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும் வெல்லவும்..மகாருத்ர யாகம்..பிரம்ம
முகூர்த்தத்தில் (அதிகாலை 4.30 க்கு)ராமேஸ்வரத்தில் நடத்தப்பட்டதாம்..ஜெ யின் நேரடி உத்தரவின் பெயரில். இந்த யாகத்தில் உடன்பிறவா சகோதரி கலந்துக் கொண்டாராம்.
இந்த யாகத்தில் அம்மாவால்..தெர்ந்தெடுக்கப்படப்போகும் வேட்பாளர்களின் ஜாதகங்களும் வைக்கப்பட்டதாம்...அதற்கும் விசேஷ பூஜைகள் நடந்ததாம்.
மேலும்...தனுஷ்கோடி..அரிச்சல் முனையில் சங்கல்பம்..பூஜைகள் நடந்த போது..சசிகலாவே தன் கைப்பட கடற்கரை மணலில் சிவலிங்க உருவத்தை செய்து..(சீதா) அந்த லிங்கத்திற்கு சிவாச்சார்யாக்களைக் கொண்டு பூஜைகள் செய்தாராம்.
தேர்தல் முடிந்து..ரிசல்ட் வரும்போது...யாகத்தின் சக்தியைப் பார்ப்போம்.

Subscribe to:
Posts (Atom)