இந்த தேர்தலில்...கண்டிப்பாக தொங்கு நாடாளு மன்றமே அமையும் என்றே தெரிகிறது.மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குள் மறு தேர்தல் வர வாய்ப்பிருப்பதாக பல பத்திரிகைகளின் சர்வே தெரிவிக்கிறது.
சென்ற தேர்தலில்..தி.மு.,க., காங்கிரஸ்,இரு கம்யூனிஸ்ட்,பா.ம.க., ம.தி.மு.க.,ஆகியவை ஒரு அணியில் இருந்ததால் வெற்றிக்கனியை முழுதுமாக பறிக்க முடிந்தது.இந்த அணி பெற்ற மொத்த வாக்குகள்....1,64,83,390 .
ஆனால்..அ.தி.மு.க.,வும் பி.ஜே.பி., அணியும் பெற்ற வாக்குகள்1,00,02,913.. வாக்குகள் வித்தியாசம் கிட்டத்தட்ட 64 லட்சம்.
ஆனால் இந்த முறை..கம்யூனிஸ்ட்களும்,பா.ம.க.,வும்,ம.தி.மு.க.,வும் அ.தி.மு.க., அணியில் உள்ளன.
இந்த வாக்கெடுப்புப் படி முடிவு செய்வது என்பது தவறு என்றாலும்...இதன்படி தி.மு.க., அணிக்கு 52 லட்சம் வாக்குகள் குறைகின்றன.தி.மு.க.,விற்கு இது இழப்பு..
ஆனாலும்...இம்முறை எக்கூட்டணியும் 40 க்கு 40 என்பது முடியாது.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அது வெற்றி பெறுவது கடினமே...வெற்றி பெறும் வேட்பாளரும் குறைந்த வாக்குகள்வித்தியாசமே இருக்கும்..
இம்முறை அ.தி.மு.க., கண்டிப்பாக கணிசமான வெற்றியுடன் நாடாளு மன்றத்தில் நுழையும் என எதிர்ப்பார்க்கலாம்.
7 comments:
அய்யய்யோ..அப்ப கேப்டன் பிரதமராக முடியாதா?
என்னண்ணே சொல்றீங்க!
எப்படியோ அகில இந்தியாவும் அம்மாவால ரணகளப் படனும்...!
படட்டும். படட்டும்
கேப்டனுக்கு முதல்வர் பதவியின் மீதுதான் ஆசை டக்ளஸ்
//ஜோதிபாரதி said...
எப்படியோ அகில இந்தியாவும் அம்மாவால ரணகளப் படனும்...!
படட்டும். படட்டும்//
அம்மாக்களால் என்று சொல்லுங்கள் ஜோதி
குஜமுகவின் வெற்றி 40 தொகுதிகளிலும் பிரகாசமாக உள்ளது, ஆனால் வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. இல்லையென்றால் 40ம் குஜமுகவிற்கே.
குடுகுடுப்பை
பொதுச்செயலாளர்
ஜக்கம்மா
தலைவர்
குஜமுக
//// குடுகுடுப்பை said...
குஜமுகவின் வெற்றி 40 தொகுதிகளிலும் பிரகாசமாக உள்ளது, ஆனால் வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. இல்லையென்றால் 40ம் குஜமுகவிற்கே.
குடுகுடுப்பை
பொதுச்செயலாளர்
ஜக்கம்மா
தலைவர்////
:-))))
ஐயா நல்லாவே கணக்கு போடுறீங்க
Post a Comment