ராவணனை வதம் செய்துவிட்டு... சீதையுடன்..ராமேஸ்வரம் வந்தார் ராமர்.
ராவணன் உள்ளிட்டோரை கொன்றதால்...ஏற்பட்ட தோஷத்தைப் போக்க..கடல் மணலில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து..பரிகார சங்கல்பம் செய்தாராம் சீதை.பின் ராமரையும் அந்த லிங்கத்தை வழிபடச் சொன்னாராம்.அதன் பின்னரே ராமர்..அயோத்தி மன்னாராக பதவி ஏற்றார்.
தன் எதிரிகளை ருத்ர குணம் கொண்டு ஒடுக்கிய ராமரை பதவியில் அமரச் செய்த தலமே ராமேஸ்வரமாகும்.
நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தலில்...எதிர்க் கட்சிகள் மண்ணைக் கவ்வவும்..அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும் வெல்லவும்..மகாருத்ர யாகம்..பிரம்ம
முகூர்த்தத்தில் (அதிகாலை 4.30 க்கு)ராமேஸ்வரத்தில் நடத்தப்பட்டதாம்..ஜெ யின் நேரடி உத்தரவின் பெயரில். இந்த யாகத்தில் உடன்பிறவா சகோதரி கலந்துக் கொண்டாராம்.
இந்த யாகத்தில் அம்மாவால்..தெர்ந்தெடுக்கப்படப்போகும் வேட்பாளர்களின் ஜாதகங்களும் வைக்கப்பட்டதாம்...அதற்கும் விசேஷ பூஜைகள் நடந்ததாம்.
மேலும்...தனுஷ்கோடி..அரிச்சல் முனையில் சங்கல்பம்..பூஜைகள் நடந்த போது..சசிகலாவே தன் கைப்பட கடற்கரை மணலில் சிவலிங்க உருவத்தை செய்து..(சீதா) அந்த லிங்கத்திற்கு சிவாச்சார்யாக்களைக் கொண்டு பூஜைகள் செய்தாராம்.
தேர்தல் முடிந்து..ரிசல்ட் வரும்போது...யாகத்தின் சக்தியைப் பார்ப்போம்.
8 comments:
ஹா! ஹா! ஹா!
ராமாயண நமக!
ஹீ ஹீ ஹீ
சீதாவும் தமாசுதான்
வருகைக்கு நன்றி
ஜோதிபாரதி
வருகைக்கு நன்றி மோனி
பரவால்லையே!
கேபர டான்செருக்கும்,கதை வி(சன)கர்த்தவுக்கும்,தொப்புலீல் பம்பரம் விட்டவருக்கும் யோசனை சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டீர்கள்
///ttpian said...
பரவால்லையே!
கேபர டான்செருக்கும்,கதை வி(சன)கர்த்தவுக்கும்,தொப்புலீல் பம்பரம் விட்டவருக்கும் யோசனை சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டீர்கள்///
நீங்கள் சொல்லவருவது விளங்கவில்லை
எப்படி வடக்க ராமரோ,இங்க ராமேஸ்வரம் நாட்டின் த்லைவிதியை நிர்ணயக்கபோவது
வருகைக்கு நன்றி murugaa
Post a Comment