Thursday, August 13, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (14-8-09)

1.தமிழக அரசின் இலவசத் திட்டங்களால் ரூபாய் 75000 கோடி கடன் ஏற்பட்டுள்ளது.மக்களின் வரிப்பணம் வீணாகிறது.தமிழகத்தில் உள்ளவர்களின் தலைக்கு 12000 ரூபாய் வீதம் கடன் சுமை ஏற்பட்டுள்ளது...இதை சொன்னவர் விஜய்காந்த்.

அத்துடன்..மரியாதை, எங்க ஆசான்..மூலம் அந்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அடைந்த கடன் சுமை எவ்வளவு என தெரிவிப்பாரா?

2.உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு 70 சதவிகிதம் ஆகும்.உடலின் அனைத்து பாகங்களில் அது வியாபித்திருந்தாலும்..மூளை மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளிலும்..ரத்தம்,உமிழ்நீர்,நிணநீர் போன்ற திரவங்களிலும் ஜீரணமுறையில் உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது.

3.நம் உடலில் ஒரு சுழற்சியில் ரத்தம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்கிறது.ரத்தக்குழாய்களில் செல்லும் போது அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டராம்.

ஓவர் ஸ்பீட் என யாராலும் சார்ஜ் பண்ணமுடியாது..

4.ஒரு மனிதன் தவறு செய்தபின் அதை எண்ணி வருந்துவதைவிட, அதை திருத்திக் கொள்வதைவிட..எளிய வழி ஒன்று உண்டு.தவறே செய்யாவிடின்...

விழுந்து எழுந்திருப்பதைவிட விழாமல் இருப்பது சிறந்தது.

5.வரும் அக்டோபர் மாதம் துவங்கும் 2010ஆம் நிதியாண்டிற்காக அமெரிக்க அரசு 65 ஆயிரம் H1B விசாக்களை அறிவித்ததாம்.இதுவரை 49000 விண்ணப்பங்கள்தான் வந்துள்ளதாம்.எப்போதும் வழக்கமாக அறிவிப்பு வந்ததும் விண்ணப்பங்கள் ஆயிரக் கணக்கில் வந்து குவியுமாம்.

6.பணவீக்க விகிதம் எப்படி கணக்கிடுகிறார்கள் என யாராவது சொன்னால் கேட்டுக் கொள்கிறேன்..இப்போது -1.74 சதவிகிதமாம். பருப்பு விலையும்,எண்ணெய் விலையும் இதில் சேருமா?

7.ஒரு ஜோக்..

சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் என் கதைக்கு டாப் 10ல் 10 ஆவது இடமாம்.
மொத்தம் எத்தனை கதைகள் வந்ததாம்..
பத்து கதைகள் வந்ததாம்.

6 comments:

புருனோ Bruno said...

//அத்துடன்..மரியாதை, எங்க ஆசான்..மூலம் அந்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அடைந்த கடன் சுமை எவ்வளவு என தெரிவிப்பாரா?
//

நக்கல் !!

//சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் என் கதைக்கு டாப் 10ல் 10 ஆவது இடமாம்.
மொத்தம் எத்தனை கதைகள் வந்ததாம்..
பத்து கதைகள் வந்ததாம்//

நையாண்டி

அத்திரி said...

.//.இப்போது -1.74 சதவிகிதமாம். பருப்பு விலையும்,எண்ணெய் விலையும் இதில் சேருமா?//

பணவீக்கமா?? அப்படினா.............. போன வருடம் இதே நேரத்தில் பணவீக்கம் 11சதவீதம் கடுமையாக இருக்கும்போது நம்ம அரசியல் வியாபாரிகள் பணவீக்கம் அதிகரித்ததால் விலைவாசியும் அதிகரித்துவிட்டது அப்படினு கண்டுபிடிச்சி சொன்னாங்க.........பணவீக்க விகிதம் குறைஞ்சவுடன் குறைஞ்சிடும்னாங்க.........நம்ம தமிழகத்து அமாவாசை அமைச்சர் ஒரு படி மேலே போய் மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகமாச்சு.அதனால விலைவாசிய பற்றி மக்கள் கவலைப்படுறதில்ல அப்படினார்.......இப்போ பணவீக்கம் மைனஸ்ல இருக்கு.......இவங்களத்தான் காணோம்..................

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி டாக்டர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

போன வருடம் 100 ரூபாய்க்கு வாங்கியவை..இந்த வருடம் 98.26 என்றால் பணவீக்கம் -மைனஸ் ல போறதை சரி எனலாம்...ஆனால்...
வருகைக்கு நன்றி அத்திரி

மங்களூர் சிவா said...

/
இப்போ பணவீக்கம் மைனஸ்ல இருக்கு.......இவங்களத்தான் காணோம்................
/

:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா