உறவுகள்...
இதில்தான் எத்தனை வகை..
தாய்,தந்தை,தாத்தா,பாட்டி,மனைவி,மகன்,மகள் போன்ற குடும்ப உறவுகள்..
வெளியே..நண்பர்கள் என சமூக உறவுகள்.
நம் வாழ்க்கைத்தரத்தை தீர்மானிப்பதில், உறவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.உண்மையில்..ஒருவருக்கு உதவிகள் தேவைப்படும்போதுதான்..உறவுகளின் ஞாபகம் வருகிறது.ஆனால்..எதிப்பார்ப்புகள் நிறைவேறாத போது...உறவில் விரிசல் ஏற்படுகிறது.
நம் உறவுகள்..நம்மை..விட்டு விலக, நம் கோபமும் காரணமாகிவிடுகிறது.நம் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் போதுதான் கோபம் ஏற்படுகிறது.உறவுகள் நமக்குப் பிடிக்காத காரியம் செய்யும்போது கோபம் வருகிறது.நமக்கு கோபம் வருவது போல..உறவினருக்கும் கோபம் வரும் என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை.
சற்று யோசனை செய்தால்..இவை புரியும்..
நம் வீட்டில் வேலை செய்யும்..நபர்கள் கூட..தன் மீது ஒருவர் அதிகாரம் செலுத்துவதை விரும்புவதில்லை.அதனால்...அவர்களையும்..நமக்கு சமமாக...நம்மில் ஒருவராக..எண்ணி பழகினால்..எதிர்ப்பார்த்ததற்கு மேல் பலன்கள் கிட்டும்
உறவுகள்..தொடர..யாரையும் நிர்வகிக்க முயற்சி செய்யாதீர்கள்.
உறவுக்கு ஆதாரம் அன்புதான்..ஆகவே அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்.வெறுப்பை..வெறுத்து ஒதுக்குவோம்.
உறவுப்பூக்கள் மலரும்..இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்..
கடைசியாக ஒரு ஜோக்..
நண்பன்-ஏன்..காலையிலிருந்து வருத்தமாய் இருக்கீங்க?
இவர்- என் மனையுடன் சண்டை..ஒரு மாசம் பேசமாட்டேன்னு சொல்லிட்டா
நண்பன்-இது சந்தோஷ விசயம் தானே...ஏன் வருந்த வேண்டும்
இவர்-அந்த ஒரு மாசம்..இன்னியோட முடியுதே!
9 comments:
நல்ல பதிவு
அர்த்தமுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும்
ரொம்ப நல்லா இருக்கு
I am first & second
வாழ்த்துகள் சித்தப்பா !
இது உறவா நட்பா ?
:)
வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்
//கோவி.கண்ணன் said...
வாழ்த்துகள் சித்தப்பா !
இது உறவா நட்பா ?
:)//
யாவரும் கேளிர்..வாழ்த்துகள் கோவி
சச்சின், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்பதிவர்களுடன் நண்பர்கள் தினவிழா
வருகைக்கு நன்றி சுரேஷ்..ஆமாம்..அது எப்படி நான் Follower ஆகலை??
இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்..
//மங்களூர் சிவா said...
இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்..//
நன்றி சிவா
Post a Comment