இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் .(swine flu) பரவும் பயத்தை மக்களிடையே பரப்பிவருவதில் மீடியாக்கள் பெரும் பணி செய்து வருகின்றன.மக்கள் பீதி..என செய்திகள் சொல்லி பீதியடைய வைக்கிறார்கள்.
இந்நிலையில்..மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆஜாத்..அருமையான ஒரு யோசனையை தெரிவித்துள்ளார்.அக் காய்ச்சல் வராமல் தடுக்க பள்ளிகளில் இறைவணக்கம் பாடுவதை நிறுத்த வேண்டும் என்பதே..மொத்தமாக அப்போது 1000 மாணவர்கள் ஒன்று கூடுகின்றனர்..அதனால் நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு என்கிறார்.
பதவி ஏற்ற நாள் முதல்..இவரது அறிக்கைகள் இவரை ஒரு ஜோக்கராகவே ஆக்கி வருகின்றன.
மக்கள்தொகை பெருக்கத்தை குறைக்க மக்கள் இரவில் அதிக நேரம் டீ.வி., பார்க்க வேண்டும் என்றார்..காரணம் இரவில் டீ.வி., பார்ப்பதால்..மக்கள் சோர்வு அடைந்து..தூங்கிவிடுவார்களாம்.மக்கள் பெருக்கத்தை தடுக்கலாமாம்.
என்ன அருமையான யோசனை...
நம் தலையெழுத்து...இப்படி ஒரு அமைச்சர்...
9 comments:
அரசியல்வியாதிகள் மீட்டிங்குகளை எல்லாம் நடத்தாமல் இருந்தாலும் நல்லதுதான். முக்கியமாக குலாம் நபி ஆசாத். கோமாளித்தனத்தை அடிக்கடி பார்ப்பதால் ரத்தக் கொதிப்பே ஏற்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
/
மக்கள்தொகை பெருக்கத்தை குறைக்க மக்கள் இரவில் அதிக நேரம் டீ.வி., பார்க்க வேண்டும் என்றார்..காரணம் இரவில் டீ.வி., பார்ப்பதால்..மக்கள் சோர்வு அடைந்து..தூங்கிவிடுவார்களாம்
/
F Tv பாத்தாங்கணா???
:))))
இம்சை மந்திரி 24ம் கேலிக்கேசி என்று இன்மேல் மந்திரிகளை வரிசைப் படுத்துவோம்.
வாழ்க பாரதம்
தலைப்பு சரிதான்!
///dondu(#11168674346665545885) said...
அரசியல்வியாதிகள் மீட்டிங்குகளை எல்லாம் நடத்தாமல் இருந்தாலும் நல்லதுதான். முக்கியமாக குலாம் நபி ஆசாத். கோமாளித்தனத்தை அடிக்கடி பார்ப்பதால் ரத்தக் கொதிப்பே ஏற்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
வருகைக்கும்..தங்கள் கருத்துக்கும் நன்றி டோண்டு சார்
// மங்களூர் சிவா said...
/
மக்கள்தொகை பெருக்கத்தை குறைக்க மக்கள் இரவில் அதிக நேரம் டீ.வி., பார்க்க வேண்டும் என்றார்..காரணம் இரவில் டீ.வி., பார்ப்பதால்..மக்கள் சோர்வு அடைந்து..தூங்கிவிடுவார்களாம்
/
F Tv பாத்தாங்கணா???
:))))//
எஃப்..டீ.வி., இந்திய ஒளிபரப்பை பார்த்தால் தப்பில்லை
//goma said...
இம்சை மந்திரி 24ம் கேலிக்கேசி என்று இன்மேல் மந்திரிகளை வரிசைப் படுத்துவோம்.
வாழ்க பாரதம்//
வருகைக்கும்..உங்கள் கருத்தை நகைச்சுவையாக சொன்னதற்கும் நன்றி கோமா
//வால்பையன் said...
தலைப்பு சரிதான்!//
நன்றி வால்
நன்றி
seidhivalaiyam.
Post a Comment