நேற்று கலைவாணர் நினைவு நாள்..(30-8-09) அவரைப் பற்றி சில விஷயங்களை பற்றிய பதிவு..
அந்த நாட்களில் கலைவாணர் நடித்தால் படம் ஓடும் என்ற நிலை.பக்தராமதாஸ் என்று ஒரு படம்..ஒரே காட்சியில் படம் படுத்து விட்டது.படத்தின் தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் வந்து முறையிட்டு அழுதாராம்.உடனே கலைவாணர்..தான் நடித்து ஒரு தனி காமெடி ட்ராக்கை அப்படத்துடன் இணைத்தாராம்.படம் மீண்டும் வெளியானது..சூபர் ஹிட்.
ஒரு சமயம்..கலைவாணரும்,எம்.ஜி.ஆரும்..நடந்து வந்துக் கொண்டிருந்தனர்.அப்போது எம்.ஜி.ஆரின் செருப்பு ஒன்று அறுந்து விட்டதாம்.எம்.ஜி.ஆர்., அதை தூக்கிப் போட்டுவிட்டு..கலைவாணரிடம் நாளை வேறு ஒன்று வாங்கிக் கொள்ளலாம் என்றார்.அடுத்த நாள் எம்.ஜி.ஆர்., கலைவாணரை செருப்பு வாங்க கூப்பிட்டார்.கலைவாணர்..முதல் நாள்.எம்.ஜி.ஆர்., தூக்கி எறிந்த செருப்பை தைத்து கொண்டு வந்து போட்டாராம்.பின்'தம்பி..அவசியம் இல்லாமல் எந்த ஒரு பொருளையும் வாங்கக் கூடாது..இருக்கும் பொருளை வீணாக தூக்கி எறியக் கூடாது.வீண் செலவும் கூடாது' என அறிவுரைக் கூறினாராம்.
கலைவாணர் வீட்டில் வருவோர் அனைவரும் சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது கலைவாணரின் கொள்கை.அதை எம்.ஜி.ஆரும்..கடைசிவரை கடைபிடித்தார்.
கலைவாணர் மருத்துவமனையில் இறுந்த போது..அவர் இறந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியது..உடனே பல ரசிகர்களும்,நண்பர்களும்..மாலை,மலர்வளையம் எல்லாம் எடுத்துக் கொண்டு அவரை கடைசியாகக் காண விரைந்தனராம்..அவர்களைக் கண்ட கலைவாணர்..தான் இன்னும் இறக்கவில்லை என்று அவர்களிடம் கூறி திருப்பி அனுப்பினாராம்.பின் தன் உடன் இருந்த நண்பரிடம்.நகைச்சுவையாக 'இவர்களுக்காகவாவது நான் ஒரு முறை இறந்தால் தேவலை' என்றாராம்.
நடிப்பவர்களை கூத்தாடிகள் என்ற நிலையை மாற்றி..அவர்களை கலைஞர்கள் என்று சொல்ல வைத்தது அவர் சாதனை.
யார் யாரையோ கவுரவிக்கும் மத்ய அரசு..இவரை கவுரவிக்கவே இல்லை.
2 comments:
இனிமே கவுரவிச்சு என்ன பயன் ? விடுங்க சார்.
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி மணி
Post a Comment