தமிழ்த் திரைப்படங்களில் சிறந்த நகைச்சுவைப் படங்கள் என கணக்கெடுத்தால்..விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கும்.
அப்படிப்பட்ட சில படங்களைக் காண்போம்.
முதலாவதாக...மறக்கமுடியாத படம், அஞ்சலி பிக்சர்ஸ் 'அடுத்த வீட்டுப் பெண்'
1960ஆம் ஆண்டு இப்படம் வந்தது.டி.ஆர்.ராமச்சந்திரன்,தங்கவேலு,சாரங்கபாணி,ஃப்ரண்ட் ராமசாமி.ஏ.கருணாநிதி..ஆகிய சிரிப்பு நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர்.அஞ்சலிதேவி கதாநாயகியாய் நடித்ததுடன்..இப்படத்தின் தயாரிப்பாளராயும் இருந்தார்.படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகியும்..இன்றும் பார்த்தால் ரசிக்கவைக்கும் படம்.
கதாநாயகன்..அடுத்த வீட்டுப் பெண்ணை காதலிக்கும் படம்.அவளைக் கவர தான் ஒரு பாடகன் என்று சொல்லி..தான் வாயை அசைக்க..நண்பனை பாட வைக்கும் யுக்தி முதலில் இப்படத்திலேயே காட்டப்பட்டது.பின்னாளில் இதே போன்ற காட்சி பல படங்களில் காபி அடிக்கப்பட்டது.
ஆதி நாராயண ராவ் இசையில்..தஞ்சை ராமையாதாஸ் எழுதியிருந்த அனைத்துப் பாடல்களும் அருமை.
பி.சுசீலா பாடிய, 'கன்னித் தமிழ் மனம் வீசுதடி' 'மலர்க்கொடி நானே' ஆகியபாடல்களும்
பி.பி.எஸ்.பாடிய, 'மாலையில் மலர்ச் சோலையில்' வாடாத புஷ்பமே' ஆகிய பாடல்கள் தேனாய் இனிப்பவை.
'கண்ணாலே பேசி..பேசி' என்ற பாடலில் ராமையாதாஸ் சொல் விளையாட்டு விளையாடி இருப்பார்..
கில்லாதே..செல்லாதே,துள்ளாதே
வாடுதே,ஓடுதே,ஆடுதே
அழகிலே,நினைவிலே,மலரிலே,வலையிலே
என்றெல்லாம்..அருமை..அருமை..
இப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் வந்து மாபெரும் வெற்றி பெற்றது.
இயக்குநர் வேதாந்தம் ராகவையா..
இன்று நகைச்சுவை படம் எடுக்க நினைக்கும்..தயாரிப்பாளர்கள் கதை வேண்டி நின்றால்..இப்படத்தை ரீமேக் செய்யலாம்.அப்படி ரீமேக்கில் வந்தாலும் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என நிச்சயம் சொல்வேன்.
அடுத்த இடுகையில் வேறொரு நகைச்சுவை படம் பற்றி பார்ப்போம்.
16 comments:
”கண்ணாலே பேசி பேசி கொல்லாதே”
பாட்டை விட்டு விட்டீர்களே!
இதன் தாக்கத்தில்தான் இளையராஜா அற்புதமான “ராஜராஜ சோழன் நான்” (இரட்டைவால் குருவி)பாட்டுப் போட்டதாக அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
இதிலிருக்கும் சில பல சீன்களை உள்ளத்தை அள்ளித்தாவில் சுட்டிருப்பார்கள் அய்யா!
நல்ல ஒரு பகிர்வு...
பிரபாகர்...
அந்தப் பாடலையும்..வரிகளையும் மறக்க முடியுமா?தட்டச்சு செய்கையில் விடுபட்டுவிட்டன..
இடுகையில் சேர்த்துவிட்டேன்..நன்றி ரவி..
இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை ... உங்கள் பதிவு என்னை பார்க்க தூண்டுகிறது ....
\\இன்று நகைச்சுவை படம் எடுக்க நினைக்கும்..தயாரிப்பாளர்கள் கதை வேண்டி நின்றால்..இப்படத்தை ரீமேக் செய்யலாம்.அப்படி ரீமேக்கில் வந்தாலும் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என நிச்சயம் சொல்வேன்.\\
உண்மைதான்.
கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே...அருமையான பாடல்.
கன்னித்தமிழ் மணம் வீசுதடி.. பாடலும் அருமையா இருக்கும். நல்ல பகிர்வு.
Meendum oru nalla thalipil thodar..Pagirvukku nanri...
Hindi pada remake ithu yendru ninikiren.(Sunil dutt,Kishore kumar) nadithahtu..Oru paadal mattum color ilum meethi padam muluthum B&W irukkum.(Sari thane?)
:)). அருமை சார். பிஸ்கட் டின்ல துடைபத்தால ம்யூசிக் போடுற அழகே அழகு:))
//பிரபாகர் said...
இதிலிருக்கும் சில பல சீன்களை உள்ளத்தை அள்ளித்தாவில் சுட்டிருப்பார்கள் அய்யா!
நல்ல ஒரு பகிர்வு...
பிரபாகர்...//
தகவலுக்கு நன்றி பிரபாகர்
//கே.ஆர்.பி.செந்தில் said...
இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை ... உங்கள் பதிவு என்னை பார்க்க தூண்டுகிறது ....//
தவறாமல் பாருங்கள் செந்தில்
வருகைக்கு நன்றி அம்பிகா
//கிருஷ்குமார் said...
Meendum oru nalla thalipil thodar..Pagirvukku nanri...
Hindi pada remake ithu yendru ninikiren.(Sunil dutt,Kishore kumar) nadithahtu..Oru paadal mattum color ilum meethi padam muluthum B&W irukkum.(Sari thane?)//
வருகைக்கு நன்றி கிருஷ்குமார்
தமிழ், தெலுங்கு தான் மூலம்..பின்னரே ஹிந்தி வந்தது.
நிங்கள் சொன்னதுபோல முதல் பாடல்'கன்னித்தமிழ் மனம்" மட்டும் கலரில் இருக்கும்
//வானம்பாடிகள் said...
:)). அருமை சார். பிஸ்கட் டின்ல துடைபத்தால ம்யூசிக் போடுற அழகே அழகு:))//
ஆம்..பாலா..
அந்த பாட்டும், அதை படமாக்கிய விதமும்,நடிகர்கள் நடிப்பும்...ஓ...அருமை
நானும் பார்த்திருக்கேன் சார்.
அந்த காலத்து படங்களின் கதை முடிச்சுகளை பார்க்கும் போது. இப்போதுள்ள நிலையை நினைத்து சிரிப்புதான் வருகிறது.
அந்த காலத்தில் வாலிபர்கள் எவ்வளவு ஜாலியாகவும், இன்னொசென்ட் ஆகவும் இருந்தார்கள் என்பதற்கு இந்த படம் சாட்சி.அந்த வகையில் இந்த படம் ஒரு காலக்கண்ணாடி.டணால் தங்கவேலு என்ற மாபெரும் நடிகனின் முழுத்திறமையும் இந்த படத்தில் காணலாம்.songs are beyond comparrison .
//சிநேகிதன் அக்பர் said...
நானும் பார்த்திருக்கேன் சார்.
அந்த காலத்து படங்களின் கதை முடிச்சுகளை பார்க்கும் போது. இப்போதுள்ள நிலையை நினைத்து சிரிப்புதான் வருகிறது.//
வருகைக்கு நன்றி அக்பர்
//vijayan said...
அந்த காலத்தில் வாலிபர்கள் எவ்வளவு ஜாலியாகவும், இன்னொசென்ட் ஆகவும் இருந்தார்கள் என்பதற்கு இந்த படம் சாட்சி.அந்த வகையில் இந்த படம் ஒரு காலக்கண்ணாடி.டணால் தங்கவேலு என்ற மாபெரும் நடிகனின் முழுத்திறமையும் இந்த படத்தில் காணலாம்.songs are beyond comparrison .//
நன்றி vijayan
Post a Comment