காங்கிரஸிற்கு 110 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் வேண்டும் என்று கூட்டணிக் கட்சியிடம் கேட்குமாறு காங்கிரஸ் தலைமையை வலியுறுத்துவோம் என்கிறார் இளங்கோவன்
2) ப.சிதம்பரத்தின் பிறந்த நாள் நேற்று..ஆனால் , பத்திரிகையாளரான சாயல்ராமை இரு தினங்களுக்கு முன்னதாக 14ஆம் தேதியே போலீசார் அழைத்துச் சென்று சட்ட விரோதமாக காவலில் வைத்து..நேற்று விடுவித்தனராம்.இந்த சாயல்ராம்..வேறுயாருமில்லை..கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ..ப.சிதம்பரம் மீது செருப்பை வீசியவர்
3)அமெரிக்க அதிபர் ஒபாமா தனது இந்திய சுற்றுப்பயணத்தின் போது, பொற்கோவிலுக்குச் செல்வார் என அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்பு தெரிவித்துள்ளது
4)சீனா, தரையில் இருந்து தரையிலும்,தரையில் இருந்து விண்ணிலும் தாக்கும் அதி நவீன ஏவுகணைகளைக் கொண்ட போர்க்கப்பலை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.இது சீனா ..பாகிஸ்தானுக்கு வழங்கும் 3ஆவது போர்க்கப்பல் ஆகும்.
5)கிரிக்கெட்டில் ஊழலை எக்காரணம் கொண்டும் ஏற்கமுடியாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.(ஊழல் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே..சொந்தம் என்கிறாரோ)
6)சிறந்த பிண்ணனி இசைக்காக 'பழசிராஜா' மலையாளப் படத்திற்காக இளையராஜாவிற்கு தேசியவிருது வழங்கப்பட்டுள்ளது..தமிழனை வேறு மொழிபடங்கள் தான் அங்கீகரிக்கன்றனவோ!!ராஜாவின் பிண்ணனி இசை அஞ்சலி படத்தில் சூபர்.அப்படத்திலிருந்து ஒரு பாடல்..
7)சென்றவாரம் நான் படித்த இடுகைகளில் தமிழா தமிழா வின் மகுட இடுகையாக சந்தனமுல்லையின் இந்தப்பதிவை தேர்ந்தெடுக்கிறேன்.வாழ்த்துகள் முல்லை
12 comments:
நல்ல தொகுப்பு!
ரைட்டு!
//ஊழல் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே..சொந்தம் என்கிறாரோ//
அப்டித்தான் சொல்லியிருப்பார் போல...
பகிர்வுக்கு நன்றி..
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ...
அஞ்சலி படத்தோட பின்னணி இசை உண்மையிலேயே சூப்பரா இருக்கும் சார். சரியா சொல்லியிருக்கீங்க, அதே மாதிரி, அபூர்வ சகோதரர்கள் படத்துல, சோக காட்சிகள்ல, குறிப்பா கிளமாக்ஸ் காட்சில, குள்ள கமல், எல்லாத்தயும் ஒப்படைச்சிட்டு ஜெயிலுக்குப் போகும் காட்சியில் இளையராஜா அசத்தியிருப்பார்!
சரத்பவார் மேட்டர் காமெடி...:))
//Chitra said...
நல்ல தொகுப்பு!//
வருகைக்கு நன்றி சித்ரா
//velji said...
ரைட்டு!//
நன்றி.. velji
//க.பாலாசி said...
//ஊழல் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே..சொந்தம் என்கிறாரோ//
அப்டித்தான் சொல்லியிருப்பார் போல...
பகிர்வுக்கு நன்றி..//
வருகைக்கு நன்றி பாலாசி
//கே.ஆர்.பி.செந்தில் said...
எனக்கு மிகவும் பிடித்த பாடல் //
வருகைக்கு நன்றி செந்தில்
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அஞ்சலி படத்தோட பின்னணி இசை உண்மையிலேயே சூப்பரா இருக்கும் சார். சரியா சொல்லியிருக்கீங்க, அதே மாதிரி, அபூர்வ சகோதரர்கள் படத்துல, சோக காட்சிகள்ல, குறிப்பா கிளமாக்ஸ் காட்சில, குள்ள கமல், எல்லாத்தயும் ஒப்படைச்சிட்டு ஜெயிலுக்குப் போகும் காட்சியில் இளையராஜா அசத்தியிருப்பார்//
வருகைக்கு நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி
//நாஞ்சில் பிரதாப் said...
சரத்பவார் மேட்டர் காமெடி...:))//
வருகைக்கு நன்றி நாஞ்சில் பிரதாப்
Post a Comment