Sunday, September 26, 2010

நகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் -2 காதலிக்க நேரமில்லை

இத் தொடரின் ஆரம்பப் பதிவில் அடுத்த வீட்டுப் பெண் படம் பற்றி பார்த்தோம்.



இப்பதிவு மற்றொரு மிகச் சிறந்த நகைச்சுவை திரைப்படம் பற்றியது..



தமிழ்த்திரையுலகில்..இதுவரை வந்த நகைச்சுவை படங்களில் முதல் இடத்தைப் பிடிப்பது 'காதலிக்க நேரமில்லை' திரையுலக மும்மூர்த்திகளில் ஒருவராகத் திகழ்ந்த ஸ்ரீதர் கதை,வசனம்,இயக்கத்தில் அவர் சொந்த நிறுவனமான சித்ராலயா தயாரிப்பு இப்படம்.



இப்படத்தில் முத்துராமன்,பாலையா,நாகேஷ்,ஆகியோர் நடித்துள்ளனர்.ரவிச்சந்திரனின் முதல் படம்.



கதாநாயகிகளாக காஞ்சனா,ராஜஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர்.



கண்ணதாசன் பாடல்களை எழுத எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். அனைத்துப் பாடல்களும் அருமை.



'என்ன பார்வை உந்தன் பார்வை' 'நெஞ்சத்தை அள்ளித் தா' உங்க பொன்னான கைகள்' அனுபவம் புதுமை' நாளாம் நாளாம் ஆகிய பாடல்கள் இனிமை என்றாலும், சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பெய்தது போன்ற இனிமை..'விஸ்வநாதன் வேலை வேணும்' பாடலும், சீர்காழி கோவிந்த ராஜன் பாடிய 'காதலிக்க நேரமில்லை' பாடலும்.



எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.பி.பி.ஸ்ரீநிவாஸ்,ஜேசுதாஸ்,சுசீலா ஆகியோர் கலக்கியிருப்பார்கள்



இப்படம் வெள்ளிவிழா கண்டது.இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது.



இப்படத்தை மீண்டும் எடுக்கும் உரிமையை மனோபாலா வாங்கியுள்ளார்.ஆகவே மீண்டும் இக்கதையை வேறு நடிகர்கள் நடிக்க..நாம் பார்க்கும் சந்தர்ப்பம் வரும்.



நாகேஷ், பாலையா பற்றி குறிப்பிடாவிடின்..இந்த இடுகை முற்று பெறாததாகவே இருக்கும்.



இருவர் நடிப்பும் அருமை.குறிப்பாக நாகேஷ் தான் எடுக்கப் போகும் படத்தின் கதையை பாலையாயிடம் கூறும் இடம்..உம்மணாமூஞ்சிகளையும் வாய் விட்டு சிரிக்க வைக்கும்.



இப்படிப்பட்ட நகைச்சுவைப் படம் ஒன்று மீண்டும் தமிழில் வருமா?



காலம்தான் பதில் சொல்லும்.



இப்படப் பாடல் ஒன்று

19 comments:

பிரபாகர் said...

மிகவும் அருமையான தேர்வுங்கய்யா!... விவரம் புரியாத வயதில் பார்த்தும் சிரித்திருக்கிறேன், நாகேஷைப் பாக்கும்போதெல்லாம்...

இன்றும் சிரிக்கலாம்.

பிரபாகர்...

ராமலக்ஷ்மி said...

க்ளாஸிக் மூவி. நல்ல பகிர்வு.

Vidhya Chandrasekaran said...

நாகேஷ் கதை சொல்லும் சீன் செம்ம. விஸ்வநாதன் வேலை வேண்டும் பாடலும் பிடிக்கும். நல்ல பகிர்வு.

Vidhya Chandrasekaran said...

நாகேஷ் கதை சொல்லும் சீன் செம்ம. விஸ்வநாதன் வேலை வேண்டும் பாடலும் பிடிக்கும். நல்ல பகிர்வு.

மணிகண்டன் said...

இவ்வளவு வருடங்கள் ஆன பின்பும் மறுபடியும் பார்த்தால் விடாமல் சிரிக்க வைக்கும் நகைச்சுவை பாலையா அவர்களின் நகைச்சுவை. கலக்கல் படம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரபாகர் said...
மிகவும் அருமையான தேர்வுங்கய்யா!... விவரம் புரியாத வயதில் பார்த்தும் சிரித்திருக்கிறேன், நாகேஷைப் பாக்கும்போதெல்லாம்...

இன்றும் சிரிக்கலாம்.//

வருகைக்கு நன்றி பிரபா

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ராமலக்ஷ்மி said...
க்ளாஸிக் மூவி. நல்ல பகிர்வு.//

நன்றி ராமலக்ஷ்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வித்யா said...
நாகேஷ் கதை சொல்லும் சீன் செம்ம. விஸ்வநாதன் வேலை வேண்டும் பாடலும் பிடிக்கும். நல்ல பகிர்வு.//


வருகைக்கு நன்றி வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மணிகண்டன் said...
இவ்வளவு வருடங்கள் ஆன பின்பும் மறுபடியும் பார்த்தால் விடாமல் சிரிக்க வைக்கும் நகைச்சுவை பாலையா அவர்களின் நகைச்சுவை. கலக்கல் படம்.//


வருகைக்கு நன்றி மணிகண்டன்

அம்பிகா said...

பார்க்க சலிக்காத படங்களில் இதுவும் ஒன்று. சிறந்த நகைசுவைக்காகவும், அருமையான பாடல்களுக்காகவும் பார்க்கலாம். நல்ல பகிர்வு.

ஹேமா said...

நாகேஷ் படம்ன்னா தேடிப் பார்க்கத்தான் வேணும்.நன்றி ஐயா.

Unknown said...

இந்தப் படத்தைப் பற்றி, மேலும் ஒரு தகவல் - பெரும்பாலான காட்சிகள், பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணையை சுற்றிய பகுதிகளில் படமாக்கப் பட்டுள்ளது!
இப்போதும், இங்கு செல்லும்போது, மனதைக் கவர்ந்த இப்படத்தின் நினைவலைகளில் இனிமையாக நீந்தலாம்!

சகாதேவன் said...

காமெடி ட்ராக் என்று தனியாக ஒரு ரைட்டர் எழுத, கதையோடு ஒட்டாத காட்சிகளாக இப்போது வருகிறது. படம் முழுதும் நகைச்சுவையாக ஸிரீதர் எப்படி எழுதினாரோ. நல்ல படம். நடிகை காஞ்சனா இன்று கோவில் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு வாழ்கிறார் என்று சமீபத்தில் படித்தேன்.
சகாதேவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அம்பிகா said...
பார்க்க சலிக்காத படங்களில் இதுவும் ஒன்று. சிறந்த நகைசுவைக்காகவும், அருமையான பாடல்களுக்காகவும் பார்க்கலாம். நல்ல பகிர்வு.//

நன்றி அம்பிகா

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ஹேமா said...
நாகேஷ் படம்ன்னா தேடிப் பார்க்கத்தான் வேணும்.நன்றி ஐயா.//


வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ரம்மி said...
இந்தப் படத்தைப் பற்றி, மேலும் ஒரு தகவல் - பெரும்பாலான காட்சிகள், பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணையை சுற்றிய பகுதிகளில் படமாக்கப் பட்டுள்ளது!
இப்போதும், இங்கு செல்லும்போது, மனதைக் கவர்ந்த இப்படத்தின் நினைவலைகளில் இனிமையாக நீந்தலாம்!//

ஆம்..உண்மை..அதுவும் குறிப்பாக விஸ்வநாதன் வேலை வேணும் பாடலும்..பொன்னான கைகளும் அங்கு எடுக்கப்பட்டவை.பாலையா இருக்கும் மாளிகையும் ஆழியாறு தான்.
வருகைக்கு நன்றி ரம்மி

IKrishs said...

சுருக்கமான அழகான நினைவு கூறல்..பகிர்வுக்கு நன்றி..
Y.Gee மகேந்திரா பேட்டி ஒன்றில் சொன்னது இது .மிக பிரபலமான அந்த கதை சொல்லும் காட்சியில் பாலய்யாவின் on the spot expression ஒன்றை பார்த்து நாகேஷ் அவர்கள் ஒரிஜினல் டேக்கின் போதே சிரித்து விட்டாராம் .இப்போதும் அந்த காட்சியில் உற்று பார்த்தால் நாகேஷ் தவிர்க்க முடியாது சிரிப்பதை பார்க்க முடியும் ..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கிருஷ்குமார் said...
சுருக்கமான அழகான நினைவு கூறல்..பகிர்வுக்கு நன்றி..
Y.Gee மகேந்திரா பேட்டி ஒன்றில் சொன்னது இது .மிக பிரபலமான அந்த கதை சொல்லும் காட்சியில் பாலய்யாவின் on the spot expression ஒன்றை பார்த்து நாகேஷ் அவர்கள் ஒரிஜினல் டேக்கின் போதே சிரித்து விட்டாராம் .இப்போதும் அந்த காட்சியில் உற்று பார்த்தால் நாகேஷ் தவிர்க்க முடியாது சிரிப்பதை பார்க்க முடியும் .//.


வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி
பாலையா, ரங்கா ராவ்,சுப்பையா,எம்.ஆர்.ராதா ..ஆகா..இவர்களெல்லாம் ஆல்ரவுண்டர்ஸ் ஆச்சே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சகாதேவன் said...
காமெடி ட்ராக் என்று தனியாக ஒரு ரைட்டர் எழுத, கதையோடு ஒட்டாத காட்சிகளாக இப்போது வருகிறது. படம் முழுதும் நகைச்சுவையாக ஸிரீதர் எப்படி எழுதினாரோ. நல்ல படம். நடிகை காஞ்சனா இன்று கோவில் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு வாழ்கிறார் என்று சமீபத்தில் படித்தேன்.
சகாதேவன்//

ஆம்...ஆனால் எனக்கு ஒன்று புரியவில்லை..மெத்த படித்தவர்,நடிக்க வருவதற்கு முன் ஏர்ஹோஸ்டஸ் ஆக இருந்தவர்..அவர் ஏன் இப்படி..
என்னதான் சுற்றம் ஏமாற்றியிருந்தாலும்..மீண்டு வந்திருக்கலாமே