Friday, September 24, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (24-9-10)

இந்திய நிறுவனமான ஏர்டெல், ஐ.பி.எம்.மிற்கு 15ஆயிரத்து 750 கோடி ரூபாய்க்கு ஆர்டர் கொடுத்துள்ளது.இதனால் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது

2)பூமி தனது 460 கோடி ஆண்டுகள் வரலாற்றில் ஐந்து முறை பேரழிவுகளைச் சந்தித்துள்ளதாம்.இப்போது ஆறாவது பேரழிவிற்கான அறிகுறிகள் தெரியத் துவங்கி விட்டதாகத் தெரிகிறதாம்.ஒரு விநாடிக்கு ஒரு கால் பந்து மைதான அளவு காடுகள்/இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றனவாம்.3000 வகை உண்வுத் தாவரங்கள் பயிரிட்டுவந்த நிலையில்..இப்போது 150 வகை மட்டுமே பயிராகின்ரனவாம்.

3)நான் கூட்டணி பற்றி குழப்புவதாகக் கூறுகிறார்கள்.நான் தெளிவாகத்தான் இருக்கிறேன்.அவர்கள்தான் (?) கூட்டணி பற்றி குழம்பிப் போய் இருக்கிறார்கள் என்கிறார் விஜய்காந்த்

4)சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காஸ்மெட்டிக் பொருள்களுக்கு சிங்கப்பூர் தடைவிதித்துள்ளதாம்.தலைமுடிக்கு உபயோகிக்கும் காஸ்மெடிக் பொருள்களில் மினோக்சிடிவ் எனப்படும் கெமிகல் பொருள்கள் கலந்துள்ளாம்.இதனால் இதய பாதிப்பு, அலெர்ஜி ஆகியவை உருவாகும் என்கிறார்கள்.அதனால் என்ன..அந்த்ப் பொருள்களை சீனா நமக்கு அனுப்பிவிடும்.நாமும் பெற்று கொள்வோம்.

5)தில்லியில் காமன்வெல்த் போட்டி நடத்தும் உரிமையைப் பெற 72 நாடுகளுக்கு சுமார் 46 கோடி இந்தியா லஞ்சமாகக் கொடுத்துள்ளதை ஆஸ்திரேலிய பத்திரிகையான 'தி டைலி டெலிகிராஃப்' அம்பலப்படுத்தியுள்ளதாம்.அரசியல்வாதிகள் தான் லஞ்சப் பேர்வழிகள் என்றால்..நாட்டையே லஞ்ச நாடாக்கிவிடுவார்கள் போல் இருக்கிறதே

6)காமென்வெல்த் போட்டி ஊழல்கள் பற்றி நாம் அறிந்திருந்தாலும்..எல்லாவற்றையும் ஒன்று படுத்தி அழகாகச் சொல்லியுள்ள பரிதிநிலவனின் இந்த இடுகை
http://vanakkamnanbaa.blogspot.com/2010/09/blog-post_23.html
 இந்த வாரம் நான் படித்த இடுகைகளில் சிறந்ததாக இருப்பதால்..தமிழ்மணத்தின் இந்தவார மகுட இடுகை இது என தேர்ந்தெடுக்கிறேன்.வாழ்த்துகள் பரிதி நிலவன்.

7)கொசுறு ஒரு ஜோக்..

ஆசிரியர்- முட்டைப் போடும் ஒன்றை சொல்..

மாணவன் 1- ஆசிரியர்

ஆசிரியர்-தவறு..வேற யாருக்குத் தெரியும்

மாணவன் 2- சத்துணவுக் கூடம்

16 comments:

bandhu said...

//எல்லாவற்றையும் ஒன்று படுத்தி அழகாகச் சொல்லியுள்ள பரிதிநிலவனின் இந்த இடுகை
http://vanakkamnanbaa.blogspot.com/2010/09/blog-post_23.html
//
இது தினமணியில் வந்த தலையங்கம். கிரெடிட் மட்டும் கொடுக்கவில்லை!

Mahi_Granny said...

சுண்டல் எப்போதும் பிடிக்கும் .மகுடம் யாருக்கு என்று தெரிந்து கொள்வதில் திருப்தி.

Chitra said...

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காஸ்மெட்டிக் பொருள்களுக்கு சிங்கப்பூர் தடைவிதித்துள்ளதாம்.தலைமுடிக்கு உபயோகிக்கும் காஸ்மெடிக் பொருள்களில் மினோக்சிடிவ் எனப்படும் கெமிகல் பொருள்கள் கலந்துள்ளாம்.இதனால் இதய பாதிப்பு, அலெர்ஜி ஆகியவை உருவாகும் என்கிறார்கள்.அதனால் என்ன..அந்த்ப் பொருள்களை சீனா நமக்கு அனுப்பிவிடும்.நாமும் பெற்று கொள்வோம்.

....அவ்வ்வ்வ்......

vasu balaji said...

ஒலிம்பிக் நடக்க முயற்சி பண்ணுவாங்களா சார்:)

மாதேவி said...

தகவல்களும்,ஜோக்கும் நன்று.

ராமலக்ஷ்மி said...

கொசுறாக வந்து நகைச்சுவையில் இரண்டு பதில்களும் நன்று:)!

Unknown said...

தகவல்கள் இன்றைக்கு குறைவே .. நேரமில்லையா..?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//// bandhu said...
//எல்லாவற்றையும் ஒன்று படுத்தி அழகாகச் சொல்லியுள்ள பரிதிநிலவனின் இந்த இடுகை
http://vanakkamnanbaa.blogspot.com/2010/09/blog-post_23.html
//
இது தினமணியில் வந்த தலையங்கம். கிரெடிட் மட்டும் கொடுக்கவில்லை!////

அப்படியா..!!!! தகவலுக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Mahi_Granny said...
சுண்டல் எப்போதும் பிடிக்கும் .மகுடம் யாருக்கு என்று தெரிந்து கொள்வதில் திருப்தி.//


நன்றி mahi_Granny

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சித்ரா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
ஒலிம்பிக் நடக்க முயற்சி பண்ணுவாங்களா சார்:)//

செஞ்சாலும் செய்வாங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

// வானம்பாடிகள் said...
ஒலிம்பிக் நடக்க முயற்சி பண்ணுவாங்களா சார்:)//


செஞ்சாலும் செய்வாங்க :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மாதேவி said...
தகவல்களும்,ஜோக்கும் நன்று.//


நன்றி மாதேவி

ஹேமா said...

சுண்டல் உறைக்கல.ஆனா நல்லாயிருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராமலக்ஷ்மி said...
கொசுறாக வந்து நகைச்சுவையில் இரண்டு பதில்களும் நன்று:)!//


நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
தகவல்கள் இன்றைக்கு குறைவே .. நேரமில்லையா..?//

உண்மை...நேரமின்மைதான் காரணம்'வருகைக்கு நன்றி செந்தில்