Friday, September 3, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (3-9-10)

ஒரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வேறொரு நீதிமன்றம் மேல் முறையீட்டில் மாற்றி வழங்குகிறது.அப்போது..முதல் நீதி மன்ற தீர்ப்பை அடுத்த மன்றம் ஒப்புக்கொள்ளவில்லை என்று தானே ஆகிறது.இதையே தனிமனிதன் சொன்னால்..நீதிமன்ற அவமதிப்பாகிறது.

2)1937ல் தமிழில் முதல் பேசும் படம் 'காளிதாஸ்' வந்தது.இப்படத்தின் நாயகி டி.பி.ராஜலட்சுமி..இவர் திருச்சிக்காரர்.தமிழச்சி..கதாநாயகன் பெயர் நரசிம்மராவ்..இவருக்கு தெலுங்கு மொழி மட்டுமே தெரியும்..இப்படத்தின் நாயகி தமிழ் பேசுவார்..நாயகன் தெலுங்கு பேசுவார்.

3)நம் உடலில் கடினமான பாகம் மண்டை ஓடும், பல் எனாமலும் தான்

4)ஒருநாள் மூச்சுவிட 11000 லிட்டர் காற்று நம் உடலின் உள்ளே போய் வெளியே வருகிறது

5)வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பேசுவது என்று கூறக் கேள்விபட்டிருக்கிறோம்..ஆனால் வெண்ணெயில் ஊசி ஏற்றுவது போலப் பேசுவது என்றால் என்ன தெரியுமா?..அவ்வப்போது சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல பேசுவதையே அப்படிச் சொல்வர்.

6)தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும்..தனிப்பட்ட கருத்து,எண்ணம்,ஆற்றல் ஆகியவை இருக்கும்..அந்த தனிமனித சுதந்திரத்தில் தலையிட நாம் யார்? இதை உணர்ந்தால் நண்பர்களிடையே விரோதம் ஏற்படாது

7)கப்பலோட்டிய தமிழன் என்றால் சிவாஜி என்று அந்த நாட்களில் ஜோக்குகள் வரும்...கூடிய விரைவில்..சிந்து சமவெளி பற்றிய ஜோக்குகளை எதிர்பார்க்கலாம்...வாழ்க தமிழர் பண்பாடு

8)கொசுறு ஒரு ஜோக்

நாம் பிரபல பதிவராக ஆக என்ன செய்ய வேண்டும்
யாரையேனும் திட்டி ஒரு பதிவு போடு..அதற்கு உன்னை பாராட்டி,திட்டி பின்னூட்டம் வரும்..நீ பிரபலம் ஆகிவிடலாம்

16 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//ஒரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வேறொரு நீதிமன்றம் மேல் முறையீட்டில் மாற்றி வழங்குகிறது.அப்போது..முதல் நீதி மன்ற தீர்ப்பை அடுத்த மன்றம் ஒப்புக்கொள்ளவில்லை என்று தானே ஆகிறது//
நீதி மன்றங்கள் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் அறியாமையில் கூறுகின்றீர்கள் என நினைக்கின்றேன் .
தவறான புரிதல் மற்றும் தவறான பார்வை.மாற்றிக்கொள்ளுங்கள் மற்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

மங்குனி அமைச்சர் said...

இதையே தனிமனிதன் சொன்னால்..நீதிமன்ற அவமதிப்பாகிறது.///

எனக்கு ரொம்ப நாலா இந்த சந்தேகம் உண்டு சார் .

a said...

//
நாம் பிரபல பதிவராக ஆக என்ன செய்ய வேண்டும்
யாரையேனும் திட்டி ஒரு பதிவு போடு
//
T.V.R சார் : உங்ககிட்டேருந்து ஆரம்பிக்கவா???

a said...

//
நாம் பிரபல பதிவராக ஆக என்ன செய்ய வேண்டும்
யாரையேனும் திட்டி ஒரு பதிவு போடு
//
T.V.R சார் : உங்ககிட்டேருந்து ஆரம்பிக்கவா???

vasu balaji said...

:))

suneel krishnan said...

காளிதாஸ் திரைப்படம் விஷயம் கேள்விபடுவது இதுவே முதல் முறை .சிந்து சமவெளி பார்கவில்லை , பார்க்க மாட்டேன் என்றே எண்ணுகிறேன் :)

மணிகண்டன் said...

//தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும்..தனிப்பட்ட கருத்து,எண்ணம்,ஆற்றல் ஆகியவை இருக்கும்..அந்த தனிமனித சுதந்திரத்தில் தலையிட நாம் யார்? இதை உணர்ந்தால் நண்பர்களிடையே விரோதம் ஏற்படாது
//

Correct.

மணிகண்டன் said...

//நாம் பிரபல பதிவராக ஆக என்ன செய்ய வேண்டும்
யாரையேனும் திட்டி ஒரு பதிவு போடு..அதற்கு உன்னை பாராட்டி,திட்டி பின்னூட்டம் வரும்..நீ பிரபலம் ஆகிவிடலாம் //

கூடவே சேர்ந்தது mental torture ம் வரும் :)-

பா.ராஜாராம் said...

:-))

Unknown said...

மாவட்ட அளவிலான நீதி மன்றங்கள், சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே,தீர்ப்பு வழங்கும் அதிகாரம் படைத்தவை! உயர்/உச்ச நீதி மன்றங்களில், சட்டத்தின் அடிப்படை மட்டுமன்றி, நியாயத்தையும்,கால மாற்றங்களைக் கருத்தில் கொண்டும், அடிப்படை உரிமைகளைக் கருத்தில் கொண்டும் தீர்ப்பு வழங்கப்படுவதால், கீழ் கோர்ட் தீர்ப்புகள், மேல் கோர்டுகளில் சில சமயம் மாறுபடுகிறது!

க.பாலாசி said...

வெண்ணை, ஊசி.... புதிதாக அறிகிறேன்.

நல்ல இடுகை...

பிரபாகர் said...

நன்றாக இருக்கிறது அய்யா!

பிரபாகர்...

சிநேகிதன் அக்பர் said...

நல்லாயிருக்கு சார். வெண்ணையும் சேர்த்துட்டிங்க போல :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நண்டு @நொரண்டு -ஈரோடு said...நீதி மன்றங்கள் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் அறியாமையில் கூறுகின்றீர்கள் என நினைக்கின்றேன் .
தவறான புரிதல் மற்றும் தவறான பார்வை.மாற்றிக்கொள்ளுங்கள் மற்றும் தெரிந்துகொள்ளுங்கள்.//

" I disapprove of what you say ,
but
I will defend to the death your right to say it "

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வழிப்போக்கன் - யோகேஷ் said...
//
நாம் பிரபல பதிவராக ஆக என்ன செய்ய வேண்டும்
யாரையேனும் திட்டி ஒரு பதிவு போடு
//
T.V.R சார் : உங்ககிட்டேருந்து ஆரம்பிக்கவா///


தாரளமாக...என்னை வசைப்பாடுவதால் ஒருவர் புகழ் பெறுவார் என்றால் எனக்கு ஆட்சேபணையில்லை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி