Thursday, September 23, 2010

திரைப்பட இயக்குனர்கள் - 6 P.புல்லையா


பி.புல்லையா 1911 ல் பிறந்தவர்.

பிரபல தெலுங்கு இயக்குனரான இவரைப் பற்றி தமிழ்த் திரைப்பட இயக்குனர் வரிசையில் எழுதக் காரணம்..இவர் இயக்கிய தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்தாலும்..அவை வெற்றி படங்கள் என்பதால் தான்.

திரையுலக சேர,சோழ,பாண்டியரான எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி மூவர் படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.

1937ல் சாரங்கதாரா வை இயக்கியவர்..1943ல் பாக்யலட்சுமியையும், 1945ல் மாயமச்சீந்திராவையும் இயக்கினார்.

1953ல் ஜெமினி, சாவித்திரி நடித்த மனம் போல மாங்கல்யம்..வெற்றி படம்..இதற்கு பிறகு இந்த ஜோடி பிரபலமானது.

1956ல் சிவாஜி,ஜெமினி,சாவித்திரி நடிக்க பெண்ணின் பெருமை படத்தை இயக்கினார்.இப்படத்தில் அப்பாவியாக ஜெமினியும், வில்லனாக சிவாஜியும் நடித்தார்கள்.

1957ல் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது..சிவாஜி,சாவித்திரி நடிக்க இவர் இயக்கிய 'வணங்காமுடி' அருமையான பாடல்கள்..இப்படத்தின் வெற்றிக்கு துணையிருந்தன.

1958ல் ஜெமினி,அஞ்சலி நடித்த இல்லறமே நல்லறம் படம் வந்தது.இப்படத்தில் ..'மைனர் லைஃப்ஃபு ரொம்ப ஜாலி..மானம் மணிபர்ஸ் இரண்டும் காலி' என்ற பாடல்..இன்றும் பலர் உச்சரிக்கும் பாடல்களில் ஒன்றாகிவிட்டது.

1959ல் ஜெமினி நடித்த 'அதிசயத் திருடன்" படம் வந்தது.(முருகா என்றதும் உருகாதா..என்ற பாடல் பிரபலம்)

1965ல் எம்.ஜி.ஆர்., நடிக்க ஆசைமுகம் இயக்கினார்.

1966ல்..சிவாஜி கௌரவ வேடத்தில் நடிக்க..தாயே உனக்காக என்ற படத்தை இயக்கினார்..கருநீல மலை மீது தாய் இருக்க காஷ்மீரப் பனி மலையில் மகன் இருக்க' என்ற பாடல்..போருக்கு ராணுவத்தில் மகன் இருக்க தாய் வாடும் காட்சியாக எடுக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் தமிழ்ப் படங்களை இயக்கியவர் இவர்.

1939ல் என்.டி.ராமாராவ் நடிக்க வெங்கடேஷ்வர மகாதிமியம் என்ற தெலுங்குப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

பி.பானுமதியை ஸ்வர்கசீமா என்னும் படத்தில் அறிமுகப்படுத்தியவர் இவர்.

1985ல் அமரர் ஆனார்

2 comments:

Unknown said...

Bharathiraja was a assistant of
Pulliah

T.V.ராதாகிருஷ்ணன் said...

தகவலுக்கு நன்றி g