Wednesday, September 1, 2010

உண்மையாய் சத்துணவு போட்டது யார்..?




பெருந் தலைவர் காமராஜ் பயணம் செய்யும் போது ஒருநாள்..ரயில்வே கேட் மூடியிந்ததால் நின்றது.அப்போது ஒரு சிறுவன் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.

அவனை அருகில் அழைத்தவர்..'ஏம்பா..ஸ்கூலுக்கு போகலியா?' என்றார்.

நான் இஸ்கூலுக்குப் போயிட்டா..யாரு சோறு போடுவாங்க? என்றான் சிறுவன்.

சாப்பாடு கெடச்சா ஸ்கூல் போவியா? என்று தலைவர் கேட்டதற்கு..'ஓ' என்று தலை அசைத்தான் சிறுவன்.

அப்போது தலைவரின் எண்ணத்தில் உதித்ததுதான் மதிய உணவு திட்டம்..

காலப்போக்கில்..எம்.ஜி.ஆர்., தன் ஆட்சியில்..அதே திட்டத்தில் சிறு மாற்றங்கள் செய்து..'சத்துணவுத் திட்டம்' என பெயரிட்டார்.

சத்துணவுத் திட்டம் எம்.ஜி.ஆர்., கொண்டு வந்தது..என விளம்பரப் படுத்தப் பட்டது.

இப்போது கலைஞர் 'எம்.ஜி.ஆர்.கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தை மேலும் விரிவாக்கி, அதை உண்மையான சத்துணவாக்கியது(அப்போது எம்.ஜி.ஆர்., காலத்து சத்துணவு என்றது பொய்யா? இதை நான் கேட்கவில்லை..அ.தி.மு.க.வினர் கேட்பர்) தி.மு.க., ஆட்சிதான்.வாரம் 3 முட்டை..முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் என்றாக்கியது தி.மு.க., ஆட்சி என்றார்.

டிஸ்கி- மத்திய (காங்கிரஸ்) அரசின் சாதனைகளையும்..திட்டங்களையும்..மாநில அரசு தன் சாதனையாகக் கூறி வருவதாக..இளங்கோவன் சமீபத்தில்..கூறியதற்கும் இந்த இடுகைக்கும் சம்பந்தமில்லை.

8 comments:

Vidhya Chandrasekaran said...

present:)

Unknown said...

அந்தாளு பகலிலேயே நிதானமா இருக்கிறது இல்லையாமே ?

நசரேயன் said...

உள்ளேன் ஐயா

T.V.ராதாகிருஷ்ணன் said...

// வித்யா said...
present:)//

நன்றி வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
அந்தாளு பகலிலேயே நிதானமா இருக்கிறது இல்லையாமே ?//

:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
உள்ளேன் ஐயா//


நன்றி நசரேயன்

M.Mani said...

காமராஜர் காலத்தில் ஏழை மாணவர்களுக்கு மிகக்குறைந்த செலவில் மதிய உணவு அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அதனைத் தேவையில்லாமல் எல்லோருக்கும் சுய விளம்பரத்துக்காக விரிவுபடுத்தினார். ஓவர் ஹெட் என்கிற செலவுதான் இதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

அபி அப்பா said...

\\கே.ஆர்.பி.செந்தில் said...

அந்தாளு பகலிலேயே நிதானமா இருக்கிறது இல்லையாமே ?
\\

அதான் விசயகாந்துக்கு கேக் ஊட்ட போனாரா??