Thursday, September 2, 2010

எம்.பி.,க்கள் என்னும் வியாபாரிகள்





ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான்

அவன் வியாபாரம் செழித்து..லாபம் எறிக் கொண்டிருந்தாலும்..தன் குடும்பச் செலவிற்கு தேவையான பணத்தையே லாபத்திருந்து எடுப்பான்.அநாவசிய செலவுகள் செய்ய மாட்டான்.

அவனுக்கு வயதாகிக் கொண்டிருந்ததால்..தன் மகனை தன் வியாபாரத்தில் ஈடுபடுத்தினான்..

ஆனால் மகனோ..தனக்குத் தேவைப்படும் போதெல்லாம்..அவசிய செலவா..அநாவசிய செலவா என்றெல்லாம் யோசிக்காது வியாபாரத்திலிருந்து பணம் எடுக்க ஆரம்பித்தான்.

இப்படியே போய்க் கொண்டிருந்தால்..தான் பாடுபட்டு வளர்த்த வியாபாரமும் அழியும்..கை பணமும் குறையும் என்று எண்ணிய வியாபாரி..மகனை அழைத்து அறிவுரை கூறினான்.

'மகனே..இது நம் வியாபாரம்..நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை..அநாவசிய தேவைகளுக்கும்..அளவுக்கு அதிகமான செலவுகளுக்கும் உபயோகித்தால்..கூடிய விரைவில் அனைத்தும் இழந்து நாம் வீதிக்கு வர நேரிடும்' என்றான்.

'அப்பா..நீங்கள் சொல்வது புரிகிறது..ஆனால்..நான் சொல்வதையும் கேளுங்கள்..இந்த நாடு..நம்ம நாடு..இந்நாட்டை ஆளும் நபர்களை நாம் தேர்ந்தெடுத்து..நாட்டை அவர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.ஆனால், அவர்கள் நாட்டை சுரண்டி வருகின்றனர்.அது போதாது என சம்பள உயர்வையும் தங்களுக்கு அளித்துக் கொள்கின்றனர்.16000 சம்பளம் வாங்கியவர்கள்..இனி 50000 வாங்கப் போகிறார்கள்.அலுவலக அலவன்ஸாக 20000 வாங்கிவந்தவர்கள் 40000 வாங்கப் போகிறார்கள்.தொகுதி அலவன்ஸாக 20000 இனி 40000 ஆக ஆகப் போகிறது.தினப்படி 1000 இனி 2000.தவிர்த்து..இனி நீங்கள் வேண்டாம் என மக்கள் சம்பந்தப்பட்ட ஒருத்தரை தேர்ந்தெடுக்காவிடினும்..அவருக்கு ஓய்வூதியமாக 20000 வழங்கப்பட உள்ளது.இப்படி நாம் அமர்த்திய ஒருவர் நம் நாட்டை கொள்ளையடிக்கையில்..நமது வியாபாரத்திலிருந்து நான் பணம் எடுத்துக் கொள்ளக்கூடாதா?' என்றான்.

தந்தை என்ன சொல்வது என்று தெரியாமல் வாய் மூடினார்.

(டிஸ்கி-கேபினட் செயலாளரான அரசு ஊழியர்..வாங்கும் சம்பளத்தை விட..ஒரு ரூபாயாவது சம்பளம் அதிகம் வேண்டும்..எனக் கேட்ட எம்.பி.க்கள்..அரசு ஊழியர் வேலை செய்யாவிடின் (No work-No pay)சம்பளப் பிடித்தம் செய்யப் படுவது போல..பாராளுமன்றத்திற்கு வராவிட்டாலோ..பாராளுமன்றம் நடத்த முடியாமல் ஆர்ப்பாட்டம் செய்தாலோ..சம்பள பிடித்தம் செய்யப்படுமா? 60 வயதுக்கு மேல் ஓய்வு பெற ஒப்புக்கொள்வார்களா?)

8 comments:

Thenammai Lakshmanan said...

அரசு ஊழியர் வேலை செய்யாவிடின் (No work-No pay)சம்பளப் பிடித்தம் செய்யப் படுவது போல..பாராளுமன்றத்திற்கு வராவிட்டாலோ..பாராளுமன்றம் நடத்த முடியாமல் ஆர்ப்பாட்டம் செய்தாலோ..சம்பள பிடித்தம் செய்யப்படுமா? 60 வயதுக்கு மேல் ஓய்வு பெற ஒப்புக்கொள்வார்களா?) //

சரியான கேள்வி டி வி ஆர்

பவள சங்கரி said...

மகன் கேட்ட கேள்வி ஞாயம்தானுங்களே! சூப்பருங்க......

Chitra said...

(டிஸ்கி-கேபினட் செயலாளரான அரசு ஊழியர்..வாங்கும் சம்பளத்தை விட..ஒரு ரூபாயாவது சம்பளம் அதிகம் வேண்டும்..எனக் கேட்ட எம்.பி.க்கள்..அரசு ஊழியர் வேலை செய்யாவிடின் (No work-No pay)சம்பளப் பிடித்தம் செய்யப் படுவது போல..பாராளுமன்றத்திற்கு வராவிட்டாலோ..பாராளுமன்றம் நடத்த முடியாமல் ஆர்ப்பாட்டம் செய்தாலோ..சம்பள பிடித்தம் செய்யப்படுமா? 60 வயதுக்கு மேல் ஓய்வு பெற ஒப்புக்கொள்வார்களா?)


.....சரியான கேள்விகள்தான்!

vasu balaji said...

இனிமே நாமதான் பசங்கள நல்லா படிக்காம பெரிய எம்.பி.யா வரணும்னு வாழ்த்தணும்:))

suneel krishnan said...

இன்றைய தேதிக்கு அரசியல் என்பது ஒரு முதலீடு , ஒரு தொழில் one time investment என்று தேர்தல் தோறும் கோடிகளை வாரி இறைகின்றனர் , இதை 5 வருடம் மெதுவாக போட்ட முதலை விட 40 மடங்கு திருப்பி எடுகின்றனர் , இதில் ஊதிய உயர்வு வேறு , நம்மை தான் நாம் குறை சொல்லிக்கொள்ள வேண்டும் .ஜனநாயகம் எவ்வாறு வேலை செய்கிறது என்று நம்மில் பலருக்கு புரியவில்லை என்று சந்தேக்கிறேன் , கட்சி ,ஆட்சி என்று பாராமல் தொகுதியில் நிற்கும் வேட்பலார்களில் யார் தகுதியானவர் என்று பார்த்து ஒட்டு போடும் கலாச்சாரம் நமக்கு வர வேண்டும் . ஒரு நல்ல சுயேச்சை வேட்பாளர் நின்றால் கூட அவருக்கு ஒட்டு போடுவாதல் பிரயஜோனம் இல்லை என்று நாம் ஏதோ ஒரு கட்சி சார்பு நிலை எடுத்து விடுகிறோம் , கட்சியை பாராமல் தகுந்த வேட்பாளரை தேர்வு செய்வதன் மூலமே ஜனநாயகம் பூரணம் அடையும் . .

"உழவன்" "Uzhavan" said...

டிஸ்கி சூப்பர் சார்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

வசூல்ராஜாmbbs said...

அரசு ஊழியர் வேலை செய்யாவிடின் (No work-No pay)சம்பளப் பிடித்தம் செய்யப் படுவது போல..பாராளுமன்றத்திற்கு வராவிட்டாலோ..பாராளுமன்றம் நடத்த முடியாமல் ஆர்ப்பாட்டம் செய்தாலோ..சம்பள பிடித்தம் செய்யப்படுமா? 60 வயதுக்கு மேல் ஓய்வு பெற ஒப்புக்கொள்வார்களா?) // சரியான கௌல்வி