Monday, September 13, 2010

திருப்பதி சென்று திரும்பி வந்தால்....


திருப்பதி சென்று திரும்பி வந்தால்....

கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல் ஒன்று உண்டு...அது..

'திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேருமடா..-நம்
விருப்பம் கூடுமடா' என்றபாடல்..

இது கண்ணதாசனின் இறை நம்பிக்கை.

அதுபோல வாழ்வில் நமக்கும் பல சமயங்களில்..எதிர்பாரா திருப்பம் ஏற்பட்டு..வாழ்க்கைப் பாதையையே மாற்றி அமைத்ததுண்டு.

'பராசக்தி' என்ற படம் நடிகர் திலகத்தின் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.

அண்ணாவின் மறைவு..கலைஞரின் அரசியல் வாழ்வில்..மா பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது..'வடை போச்சே..' என நெடுஞ்செழியனை எண்ண வைத்தது.

ரஜினி, கமல் ஆகியவர்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியவர் கே.பாலசந்தர்..

பாரதிராஜா வருகை..தமிழ்த் திரையில் மற்ற தயாரிப்பாளர்களையும் கிராமத்தை நோக்கி ஓடும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

அவசரகால அறிவிப்பு இந்திரா காந்தியின் அரசியல் வாழ்க்கையில் சிறு மாற்றத்தை ஏற்படுத்த..மொரர்ஜியின் பிரதமர் ஆகும் ஆசை நிறைவேறிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

அரிசி தட்டுப்பாடு..தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மறையும் திருப்பத்தையும்...

வெங்காயத் தட்டுப்பாடு ஒரு சமயம் பா.ஜ.க., ஆட்சி மாறவும் காரணமாய் அமைந்த துண்டு.

பெரியாரின் மணம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி..தி.மு.க., உருவாகக் காரணமாய் அமைந்ததுண்டு..

வாகன ஓட்டிகள்..பலவேலைகளில்..திருப்பங்களை சரியாக பார்க்காததால் போக்குவரத்து போலீசிடம் மாட்டிக் கொண்டதுண்டு.

ஆகவே...திருப்பங்கள் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்திவிடும் சக்தியைக் கொண்டவை..

இப்படிப்பட்ட ஒரு திருப்பம் தமிழ் வலைப்பதிவாளர் இடையே என்றேனும் கண்டிப்பாக உண்டாகும்..

அன்று..

பெண் பதிவாளர்கள் .ஆண் பதிவாளர்களை தவறாக எண்ணும் போக்கையும்..

ஆண் பதிவாளர்களின் ஆணாதிக்கப் போக்கையும்..

சர்ச்சையைத் தூண்டுவோர் போக்கையும்

கண்டிப்பாக மாற்றி..அனவரும் ஒரே குடும்பம் என எண்ணும் எண்ணத்தை அனைவரிடமும் உண்டாக்கும் என நம்புவோம்.


11 comments:

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி..

இரண்டு முறை பதிவாகி உள்ளது சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சூர்யா..
தவறை சரி செய்து விட்டேன்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

Unknown said...

Easy 1...2...3. Read and write your own article. A new collabrative dimension - www.jeejix.com

Vidhya Chandrasekaran said...

ம்ம்ம்.

vasu balaji said...

சார்! அந்த பெருமாளே ஒரு ப்ளாக் ஆரம்பிச்சாலும் திருப்பம் நேராதுசார்:))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Swetha

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala