தி.மு.க.,விற்கு எதிராக தமிழகத்தில் ஆவேச அலை வீசுவதாகவும், தி.மு.க., இனி வெற்றி பெற முடியாது என்கிறார் வை.கோ., அ.தி.மு.க., கூட்டணியே வெற்றி பெறும் என சமீபத்தில் செய்தியாளர்களிடம் வை.கோ., கூறினார்.
இந்நிலையில்..விஜய்காந்திற்கும்..அ.தி.மு.க.,விற்கும் ஒரு உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாகவும் தே.மு.தி.க.,60 இடங்களில் போட்டியிடும் என்றும் ஒரு அதிகாரப் பூர்வமற்ற செய்தி ஒன்றும் கூறுகிறது.இது உண்மையானால் மீத முள்ள தொகுதிகளில் பெரும்பான்மை அ.தி.மு.க. எடுத்துக் கொள்ளும்.தோழமைக் கட்சிகளுக்கு சொற்பத் தொகுதிகளே கிடைக்கும்.அப்போது வை.கோ.விற்கு எதிர்பார்த்த அளவு தொகுதிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவே!
சென்ற சட்டசபைத் தேர்தலில்..இங்கும்,அங்கும் அவர் அல்லாடியது போல இம்முறையும் அவரை பந்தாடுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.ஆகவே சிறிது காலம் அவர் தி.மு.க., வை கண்மூடித்தனமாக எதிர்ப்பதை தவிர்ப்பது நலம் என்றே தோன்றுகிறது.
இதற்கிடையே விடுதலை சிறுத்தைக் கட்சி திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் தலைமையில் சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்கும் என்றும்..தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும், அதற்கான திட்டம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
சமீபத்தில் மூப்பனார் நினைவு நிகழ்ச்சியில்..விஜய்காந்த்,இளங்கோவன், ஜி.கே.வாசன் ,திருமாவளவன் ஆகியோர் ஆலோசனை நடத்தியதையும் மறப்பதற்கல்ல.
இந்நிலையில்..மேற்கு வங்க சட்டசபை தேர்தலில்...காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை, கௌரவம் தராத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுள்ளார் ராகுல்.இது திரினாமுல் காங்கிரஸிற்கு மட்டும் சொல்லியிருக்க மாட்டார் என்றும் தோன்றுகிறது
28 comments:
அம்மா ஆட்சியில் இருந்தால் வைகோ நாட்டு சிறையில் இருப்பார்,
இல்லை என்றால் அம்மாவின் வீட்டுச் சிறையில் இருப்பார்.
:)
வைகோ இப்போ எங்கே இருக்கிறார்? உள்ளேயா, வெளியேயா?
கோவி.கண்ணன்
:)))))))
என்னத்தை சொல்ல?
வை டோண்ட் கோ:))
வருகைக்கு நன்றி
கோவி.கண்ணன்
//உடன்பிறப்பு said...
வைகோ இப்போ எங்கே இருக்கிறார்? உள்ளேயா, வெளியேயா?//
:)))
வருகைக்கு நன்றி வித்யா
//Chitra said...
என்னத்தை சொல்ல?//
:)))
//வானம்பாடிகள் said...
வை டோண்ட் கோ:))//
Where?
வருகைக்கு நன்றி Bala
உண்மையிலயே பாவம் !!
கோவாலு நிலமை இப்படி ஆயிருச்சே :(
உங்கள் இடுகைப்படி நிகழ்ந்தால் நெருக்கடி யாருக்கு?
வழக்கமா ஜோக்ஸ்னு தனியா எழுதுவீங்க ள்ல.? :-))
//ஆதிமூலகிருஷ்ணன் said...
வழக்கமா ஜோக்ஸ்னு தனியா எழுதுவீங்க ள்ல.? :-))//
ஆதி...நீங்கள் சொல்வது போல ஜோக்ஸ் என நான் தனியாகத்தான் எழுதுவேன்..
ஆனால்..இந்த இடுகையில்
வைகோ சொன்னது உண்மை
திருமாவளவன் சொன்னது உண்மை
விஜய்காந்த் கூட்டணி இணைய இதழ் ஒன்றில் வந்துள்ளது
ராகுல் கல்கத்தாவில் பேசியது உண்மை..
வைகோ சென்றமுறை இங்கும் அங்கும் அல்லாடியது உண்மை
இது எல்லாம் ஜோக்ஸ் என்றால்..என்னத்தைச் சொல்ல
டிவிஆர் சார், இவங்க சொன்னதெல்லாம் உங்க ஜோக்ஸையே அடிச்சு சாப்பிட்டுடும்னு சொல்லவந்தேன். :-))
// ராஜ நடராஜன் said...
உங்கள் இடுகைப்படி நிகழ்ந்தால் நெருக்கடி யாருக்கு?//
தி.மு.க., அதிமுக ஆகிய இரண்டிற்குமே அறுதிப்பெரும்பான்மை கிடைக்காது.கூட்டணிக்கட்சிகளின் ஆட்சியை தவிர்க்க முடியாது..
ஆனால்..தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழந்து நிற்பது..ம.தி.மு.க., தான்..அது சற்று அதிகத் தொகுதிகளில் போட்டியிட்டால் தான் இழந்ததை பெற முடியும்.
//dr suneel krishnan said...
உண்மையிலயே பாவம் !!//
:)))
//எம்.எம்.அப்துல்லா said...
கோவாலு நிலமை இப்படி ஆயிருச்சே :(//
எனக்கும் வருத்தம்தான்
//ஆதிமூலகிருஷ்ணன் said...
டிவிஆர் சார், இவங்க சொன்னதெல்லாம் உங்க ஜோக்ஸையே அடிச்சு சாப்பிட்டுடும்னு சொல்லவந்தேன். :-))//
நன்றி ஆதி
PMK+MDMK+uthiri katchigal+jaathi katchigal=set avuma? 3 vathu koottani
//ILA(@)இளா said...
PMK+MDMK+uthiri katchigal+jaathi katchigal=set avuma? 3 vathu koottani//
போகிற போக்கில் உத்திர பிரதேசம், பீகார் போல காங்கிரஸ் தலைமையில் சிறு கட்சிகள் 3ஆவது கூட்டணி அமைய வாய்ப்புண்டு
நீங்க எழுதியிருக்கிறதைப் பார்த்தா, நிலைமை என்னமோ ரொம்பத் தெளிவா இருக்கிறா மாதிரி இருக்கே? மெய்யாலுமா?? :-))
சோக்கர எடுத்து எங்க சொருகுனாலும் சேந்துக்கிரும்ணே.
பொரட்சித்தலைவி, பொரட்சிப்பொயலு,
பொரட்சிக்கலிஞ்சரு மூணு பேரும் சேந்து வர்றத நெனைச்சாலே ஒடம்பு புல்லரிக்குது.
மூணு பொரட்சியும் சேந்து 2011ல தனி ஈழமும், தனித்தமிழ்நாடும் வாங்கிக்கொடுத்துருவோம்னு பொடனியில அடிச்சு சத்தியம் செஞ்சு
கொடுத்துருக்காக.
ஆகவே பதிவுலக பொரட்சிகளே தங்கள் பொன்னான வாக்கை பொரட்சித்தலைவிக்கு அளித்து அகண்ட தமிழகம் உருவாக உதவிடுங்கள்.
வருகைக்கு நன்றி சேட்டைக்காரன்
வருகைக்கு நன்றி ஒரிஜினல் "மனிதன்"
வருகைக்கு நன்றி ஒரிஜினல் "மனிதன்"
வருகைக்கு நன்றி ஒரிஜினல் "மனிதன்"
Post a Comment