ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Tuesday, September 21, 2010
போடாங்க..நீங்களும் உங்க கொள்கையும்..
சமீபத்திய இரு செய்திகள்
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்போருக்கான இலவச செல்போன் வழங்கும் திட்டம் இன்று திருப்பூரில் தொடங்கி வைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பாலக்கரை அவினாசியில் வறுமைக் கேர்ட்டிற்கு கீழ் வாழம் ஏழை மக்களுக்கு, இலவச செல்போன்கள் வழங்கும் திட்டத்தின் தொடங்க விழா நடைபெற்றது. அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா பயனாளிகளுக்கு வழங்கினார்.
அவினாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட 36 கிராமங்களைச் சேர்ந்த 1200 குடும்பங்களுக்கு இலவச செல்போன்களை ராசா வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் தொலைபேசி மற்றும் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 70 கோடியாக உயர்த்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
2) மக்களுக்கு இலவச கோதுமை வழங்குவது குறித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசின் கொள்கை வடிவமைத்தலில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்பது என் கருத்து....இது நமது பிரதமர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளது
டிஸ்கி..இடுகையின் தலைப்பிற்கும் ,செய்திகளுக்கும் தொடர்பிருப்பதாக நீங்க நெனச்சா கம்பெனி பொறுப்பல்ல
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
அந்த படம்......... மனசாட்சி குத்துகிறது.
செல்போன், வாழ்க்கைக்கு, அதுவும் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு, எவ்வளவு அவசியம் என்று புரியாமல் இந்த மாதிரி பதிவு போடுபவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
அரசு மக்களுக்குச் செய்யும் சேவைகளைக் குறை கூறுவதே சிலருக்குப் பிழைப்பாய் போய்விட்டது?
கல்லாப்பொட்டி எவ்வளவு ரொம்பிச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா?
வருகைக்கு நன்றி சித்ரா
வருகைக்கு நன்றி
DrPKandaswamyPhD
சோறை விட செல்போன் ரொம்ப முக்கியம் போல:(((
உண்மையாலுமே வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவங்களுக்கு செல்போனா?
இல்ல நகைச்சுவைக்காகவா?
அதிர்ச்சி அளிக்கிறது!!!!!!!!
:(((((((((((((((
சார் வறுமைக்கோடு எதை வச்சு முடிவு பண்ணுறாங்க. அந்த கோடு எங்கே இருக்குன்னு சொன்னா எல்லாரைப்போலவும் நானும் அதுக்கு கீழே போய் நிப்பேன். (ஏற்கனவே அரசாங்க கணக்குப்படி நான் கோட்டிற்கு கீழேதான் இருப்பதாக ஞாபகம்)
எந்த காலத்திலும் ஏழைகளின் பேரைச்சொல்லி மத்தவங்க சாப்பிட்டுத்தான் பழக்கம்.
வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களில் எத்தனை பேர் உண்மையான ஏழைகள் ?
தலைப்பையே மறுபடியும் இங்கே நினைக்கவும். :)
//வித்யா said...
சோறை விட செல்போன் ரொம்ப முக்கியம் போல:(((//
அதுதானே..
//யாசவி said...
உண்மையாலுமே வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவங்களுக்கு செல்போனா?
இல்ல நகைச்சுவைக்காகவா?
அதிர்ச்சி அளிக்கிறது!!!!!!!!..//
கதையல்ல நிஜம்
//சிநேகிதன் அக்பர் said...
சார் வறுமைக்கோடு எதை வச்சு முடிவு பண்ணுறாங்க. அந்த கோடு எங்கே இருக்குன்னு சொன்னா எல்லாரைப்போலவும் நானும் அதுக்கு கீழே போய் நிப்பேன். (ஏற்கனவே அரசாங்க கணக்குப்படி நான் கோட்டிற்கு கீழேதான் இருப்பதாக ஞாபகம்)
எந்த காலத்திலும் ஏழைகளின் பேரைச்சொல்லி மத்தவங்க சாப்பிட்டுத்தான் பழக்கம்.
வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களில் எத்தனை பேர் உண்மையான ஏழைகள் ?
தலைப்பையே மறுபடியும் இங்கே நினைக்கவும்.//
மக்களின் வருவாய்,வீடு,நிலம்,வாழ்க்கைத் தரம் என பல பிரிவுகள் கணக்கிலிடப்பட்டு வறுமைக் கோடு தீர்மானிக்கப் படுகிறது.
2009ன் ஆய்வுப்படி நாள் ஒன்றுக்கு $1.25 (இந்திய ரூபாய் படி கிட்டத்தட்ட 68ரூபாய் வரை )நாளொன்றுக்கு செலவு செய்யும் தகுதியுள்ளவர் மட்டுமே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்.
நீங்க எப்படி
வருகைக்கு நன்றி அக்பர்
"வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு இலவச செல்போன்"
அப்ப அவங்க பேச ஐ.னா ரீசார்ஜ் செய்து தருமா?
//புதுவை சிவா♠ said...
"வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு இலவச செல்போன்"
அப்ப அவங்க பேச ஐ.னா ரீசார்ஜ் செய்து தருமா?//
:)))
உங்க கிட்ட இருந்து இந்த தலைப்பு ஒன்னே போதும். செல்ஃபோன், கோதுமைன்னு ரெண்டு வார்த்தையே போதும்.
நன்றி Bala
Post a Comment