தீண்டாமை பாவம்.பெருங்குற்றம் என்றெல்லாம் அனைவருக்கும் தெரியும்.ஆனாலும் ஆங்காங்கே அது தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.வட மாநிலங்களில் இது அதிகமாகவே உள்ளது.
தீண்டாமைக் கொடுமையின் கோர முகமே கௌரவக்கொலைகள்.தன் வீட்டைச் சேர்ந்த பையனோ, பெண்ணோ..தலித் வகுப்பைச் சார்ந்தவரைக் காதலித்தால், தங்கள் வீட்டு பிள்ளையையும் சேர்த்து கௌரவக் கொலை செய்துவிடுகின்றனர் உயர் சாதியினர்.
இந்நிலையில் தான் கௌரவக் கொலைகளைத் தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவர யோசித்துள்ளது.
அப்படிப் பட்ட தீண்டாமை அவலங்களில் சொல்லப்போவது புதுமையானது.
மத்திய பிரதேச மாநிலம், மொரேனா என்னும் மாவட்டத்தில் ஒரு அவலம் நடந்துள்ளது.
இதுவரை மனிதனிடம் மட்டுமே காட்டப்பட்டு வந்த தீண்டாமை நாயிடமும் காட்டப் பட்டுள்ளது.உயர் வகுப்பைச் சேர்ந்த ஒருவரது நாய்க்கு தலித் பெண்ணொருத்தி ஒரு ரொட்டித் துண்டைக் கொடுத்துவிட்டார் என்பதற்காக, அந்த நாயையே தீண்டாமையாக கருதி, அதனை விரட்டியுள்ளார் அதனை வளர்த்தவர்.
மொரேனா மாவட்டம் மானிக்பூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்பால் சிங்க்.இவர் உயர் சாதியைச் சேர்ந்தவர்.நிலச்சுவான்தார்.கூடவே அரசியல் செல்வாக்கு உடையவர்.இவர் ஒரு நாயை வளர்த்து வந்தார்.
இந்த நாய்.கடந்த வாரம் ஒரு நாள் அவர் வீட்டு அருகே வசித்த தலித் பெண் சுனிதா என்பவர் வீட்டருகே சென்றுள்ளது.
அப்போது சுனிதா தன் கணவருக்கு உணவு பரிமாறியுள்ளார்.அந்த நாயைப் பார்த்ததும்..ஒரு ரொட்டித் துண்டை நாய்க்குப் போட்டுள்ளார்.
நாய் அந்த ரொட்டித் துண்டை சாப்பிட, ராம்பால் சிங் பார்த்துவிட்டார்.
உடனே சுனிதாவிடம் 'என் நாய்க்கு நீ எப்படி ரொட்டியைப் போடலாம்' என சத்தம் போட்டார்.
பின்னர், தலித்திடம் ரொட்டி சாப்பிட்ட அந்த நாய் தீண்டத்தகாதது என விளக்குக் கம்பத்தில் அதைக் கட்டிப் போட்டுவிட்டு, பன்சாயத்தைக் கூட்டினார்.
பஞ்சாயத்தும், அந்த நாய் தீண்டத்தகாதது எனக் கூறி அது இனி சுனிதாவின் வீட்டில் வளர வெண்டும் என உத்தரவிட்டது.தவிர்த்து சுனிதாவிற்கு 15000 அபராதம் விதித்தது.இதைக் கண்டு சுனிதாகாவ நிலையத்தில் புகார் செய்தார்.
ஆனால் காவல்துறையினர் எஸ்சி/எஸ்டி வன்கொடுமைக் குற்றப்பிரிவினரிடம் புகார் அளிக்கும்படி அவளை விரட்டினர்.
அங்கு 'நீ ஏன் உயர்சாதியை சேர்ந்தவர் வளர்க்கும் நாய்க்குட்டிக்கு ரொட்டி கொடுத்தாய்' என்று கேட்டார் அங்கிருந்த அதிகாரி.
ஆனலும் சுனிதாவும் விடாது குற்றப்பிரிவின் டிஎஸ்பி யிடமும்,மாவட்ட ஆட்சியினரிடமும் மனு அளித்தார்.
ஆனால் இதுவரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவாகவில்லை.அதிகாரிகளோ விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்களாம்.
6 comments:
அட கொடுமையே:(
கதையா...உண்மையா !
எப்போதான் திருந்த போறாங்களோ இந்த மாதிரி மடமுட்டிங்கலாம்...
:(
//வானம்பாடிகள் said...
அட கொடுமையே:(//
:((
//ஹேமா said...
கதையா...உண்மையா//
உண்மை
// லெமூரியன்... said...
எப்போதான் திருந்த போறாங்களோ இந்த மாதிரி மடமுட்டிங்கலாம்...
:(//
சரியான தண்டனைக் கொடுத்தால் திருந்துவாங்க...அதை அரசு முதலில் செய்யணும்
Post a Comment