Tuesday, September 28, 2010

கல்லீரலைப் பாதிக்கும் குடியும், கொழுப்பும்

நமது உடலில் நடைபெறும் இரசாயன மாற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படையாகத் திகழ்கிறது கல்லீரல். கல்லீரல் பாதிக்கப்படும் போதுதான் மஞ்சள் காமாலையில் இருந்து நமது உடலை பெரிதும் பாதிக்கும் பல வியாதிகள் ஏற்படுகின்றன. எனவே கல்லீரலை முறையான உணவு மற்றும் ‘இதர’ பழக்கங்களில் மூலம் பாதிக்காமல் காப்பது உடல் நலத்தை காப்பதற்கு ஒப்பானதாகும்.



நமது நாட்டைப் பொறுத்தவரை கல்லீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கு இரண்டு காரணிகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒன்று, குடிப் பழக்கம். இரண்டாவதாக, கொழுப்பு நிறைந்த உணவுகள்.



அளவிற்கு அதிகமாக குடிப்பதனால் (மருத்துவரை கலந்தாலோசித்து மது அளவை நிர்ணயித்துக் கொள்ளவும்) கல்லீரலிற்கு ஏற்படும் பாதிப்பே சாதாரண மஞ்சள் காமாலை நோயிலிருந்து ஹெப்பாடிடிஸ் பி ஆகியனவும், நீரிழிவு உள்ளிட்ட நோய்களும் ஏற்படுகின்றன. இவற்றை ஆல்கஹால் தொடர்பான கல்லீரல் நோய்கள் என்று மருத்துவம் கூறுகிறது.





FILEமற்றொரு வகையான பாதிப்பு கல்லீரலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதால் உண்டாகிறது. இதனை ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு வியாதிகள் (Non-alcoholics fatty liver disease - NAFLD) என்று மருத்துவம் வகைப்படுத்துகிறது.



இந்த இரண்டாவது வகை - அதாவது கொழுப்பு சேகரிப்பால் கல்லீரல் கெடுவது - ஒருவருக்கு 35 வயதில் ஏற்படுகிறது என்று வைத்துக் கொண்டால், அவர் 55 வயதை அடையும்போது, கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு, அதனை மாற்றுக் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது. கல்லீரல் வீங்கி சிகிச்சையால் குண்பபடுத்த முடியாத நிலையைத்தான் லிவர் சிர்ரோசிஸ் என்றழைக்கின்றனர்.



நமது நாட்டைப் பொறுத்தவரை பலரும் மதுவினாலும், கொழுப்பு உணவுகளாலும் கல்லீரல் பாதிப்பிற்குள்ளானவர்களாக உள்ளனர். மது குடிப்பவர்கள் குடிக்கும் போது சாப்பிடும் உணவு வகைகள் பொதுவாக எண்ணெய் கலந்து தயாரிக்கப்படும் உடனடி உணவுகளாகவும் (fast foods), கொழுப்புச் சத்து அதிகம் கொண்ட உணவுகளாகவும் இருப்பதால் கல்லீரலிற்கு பாதிப்பு அதிகமாகிறது. இதுவே கல்லீரலை பலவீனப்படுத்தி, அது தொடர்பான எல்லா நோய்களுக்கும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது.



அளவான குடிப்பழக்கம், முறையான உணவுப் பழக்கம், காலையில் உடற்பயிற்சி ஆகியன கல்லீரலை பாதுகாக்கும் மிகச் சாதாரண வழிகளாகும். பாதிக்கப்பட்டாலும் மருத்துவத்தின் உதவியால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பு கல்லீரல் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும். எனவே, அதிகமாகக் குடித்தல், கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடுதல் ஆகியவற்றை தவிர்த்தால் போதும். நல்ல கல்லீரலுடன் வாழ்நாள் முழுவதும் நன்றாக வாழலாம்.



“நமது உடலில் கல்லீரல் தான் நமக்கு மிகவும் உதவும் உறுப்பு. நமது உடலில் ஏற்படும் பல இரசாயன மாற்றங்களுக்கு அதுவே அடிப்படையாக உள்ளது. காயப்பட்டாலும் மீண்டும் பழைய நிலைக்கு வரும் திறன் கொண்டது. ஆனால் குடிப்பழக்கம், கொழுப்புணவுகள் மூலம் அதனை அதிகமாக கெடுத்துவிட்டீர்களானால், அது செயலற்றுப் போய்விடும். அதன் விளைவாக மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும்” என்று எச்சரிக்கிறார் மருத்துவர் கோமதி நரசிம்மன். இவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் சென்னையிலுள்ள குறிப்பிடத்தக்க நிபுணர்களில் ஒருவர்.



குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களிடம் களைப்பு, மலச் சிக்கல், மஞ்சள் காமாலைக்கான லேசான அறிகுறி ஆகியன இருக்கும். இதனைக் கண்டவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி, இரத்தச் சோதனை உள்ளிட்ட உடல் சோதனைகளைச் செய்து, நிலையை அறிந்து உரிய சிகிச்சை பெற வேண்டும். அதனைச் செய்யத் தவறினால் அது கல்லீரல் வீக்கத்தில் (லிவர் சிர்ரோசிஸ்) சென்று முடியும். அந்த நிலையில் கல்லீரல் மாற்றுச் சிகிச்சை தவிர வேறு வழி இல்லை.



எனவே, வெளியில் உணவு அருந்தும் போதும், நண்பர்களுடன் வாழ்வின் ஆனந்தமான அந்தப் பொழுதை மதுபானத்துடன் கழிக்கும்போதும் நினைவில் நிறுத்துக: கல்லீரல் நலம்
                                                                                 
(நன்றி வெப்துனியா)

10 comments:

மணிகண்டன் said...

நான் மதுவை முதல்முறையாக சென்ற வாரம் முதல் அருந்த ஆரம்பித்து இருக்கிறேன். இந்த சமத்துல இது தேவையா சார் ? :)-

Unknown said...

அளவான குடிபழக்கம் எனக்கு இனிப்பான செய்தி ...

Vidhya Chandrasekaran said...

குடி குடியைக் கெடுக்கும்:(

Unknown said...

thanks
for
your
kind
information

க.பாலாசி said...

நல்ல பகிர்வுங்க சார்...

vasu balaji said...

அவசியமான பகிர்வு.

ஹேமா said...

தேவையானவர்களுக்குத் தேவையான பதிவு !

நையாண்டி நைனா said...

ஐயையோ...
இதுலே இவ்ளோ இருக்கா...
ரொம்ப டேஞ்சரு தான்...
ரொம்ப பயமா இருக்கே....
ரொம்ப டெண்சனாவும் இருக்கு...
ரொம்ப கவலையாவும் இருக்கு...
கவலைய மறக்க
ஒரு குவாட்டர் சொல்லிட்டு போங்களேன்....
உங்களுக்கு புண்ணியமா போகும்

(இதை பின்னூட்டம்னு நெனச்சா பின்னூட்டம்
கவிதைன்னு நெனச்சா நீங்க இந்த பதிவை இன்னொரு வாட்டி படிக்கணும்னு அர்த்தம் )

"உழவன்" "Uzhavan" said...

பயனுள்ள தகவல் சார்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி