Thursday, September 30, 2010

நகைச்சுவை நடிகர் சந்தானத்திற்கு ஒரு மடல்..

நண்பர் சந்தானம் அவர்களுக்கு



வணக்கம்..



உங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து பார்த்து வருகிறேன் என்னும் ஒரே காரணமே..இந்தக் கடிதம் எழுத என்னைத் தூண்டியது.



அப்போதே..இதோ மற்றுமொரு நகைச்சுவை நடிகர் உருவாகிக் கொண்டிருக்கிறார்..என்ற எண்ணம் ஏற்பட்டது.



அதற்கேற்றார் போல..படிப்படியாக முன்னேறி..விவேக், வைகைப் புயலை நெருங்கமுடியாத தயாரிப்பாளர்களுக்கு மாற்று நகைச்சுவை நடிகர் சந்தானமே என்ற எண்ணத்தைத் தயாரிப்பாளர்கள் மனதில் தோற்றுவித்து விட்டீர்கள்.



நகைச்சுவை நடிகர்களில் பலவகை உண்டு..அங்க சேஷ்டை செய்து முன்னேறுவது, டைமிங்க் காமெடி, டயலாக் காமெடி, அருமையான உச்சரிப்பு என்று..



தங்கவேலு,வி.கே.ராமசாமி ஆகியோர் தங்கள் வசன உச்சரிப்பாலும்..டயலாக் காமெடியாலும்..வாயைத் திறந்தாலே ரசிக்க வைத்தார்கள்.



சற்று அங்க சேஷ்டை, அசைவுகள் என அசைக்க முடியா நகைச்சுவை நடிகர்கள் நாகேஷ்,சந்திர பாபு..



முக பாவம்..தனித்துவத்தில் சிறந்தவர் பாலையா



சுருளி ராஜன், தேங்காய் ஸ்ரீனிவாசன் இருவருக்கும் குரல் ஒரு சொத்து.



மற்றவரை வைத்து ஏசி நகைச்சுவை விருந்தளித்தவர் கவுண்ட மணி, செந்தில்.



நகைச்சுவையோடு..சமுதாய நலனையும் யோசித்தவர் கலைவாணர்.



ஆனால் நீங்கள் இதில் எந்த வகையில் வருகிறீர்கள்?



டயலாக் காமெடியில்..



சமீபத்தில் பாஸ் என்னும் பாஸ்கரன் படத்தில்..சந்தானம் இல்லாவிடில் படம் இல்லை..சந்தானத்தின் நகைச்சுவை படம் முழுதும் சிரிக்க வைத்தது என ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது..



ஆனால்..என்னைப் போன்றவர்கள் கருத்து..



உங்க வசன உச்சரிப்பு சிறப்பாய் உள்ளது..ஆனால் வசனத்தை ஒப்புவிக்கிறீர்கள்..அதில் சிறிதும் மாடுலேஷன் இல்லை..



இந்தக் குறையை நிவர்த்தி செய்துக் கொண்டால்..முண்ணனி நகைச்சுவை நடிகன் ஆவதில் எந்த தடையும் இருக்காது.



எந்திரனில் ரஜினியுடன் நடித்துள்ளீர்கள்..சரக்கில்லாமல் இது சாத்தியமில்லை.



ஆனாலும்..நான் சொன்ன இந்த சின்னக் குறையை சரி செய்துக் கொண்டால்...திரையில் சந்தானம் பல ஆண்டுகள் நிலைத்திருப்பார் என்பது நிச்சயம்.



நன்றி



அன்புடன்

உங்கள் ரசிகன்

7 comments:

goma said...

WELL SAID

vasu balaji said...

யெஸ் சார்:)

ஹேமா said...

நீங்கள் சொல்வது சரி.கவனித்து முயற்சித்தால் நிச்சயம் வளர்ச்சி நிச்சயம் சந்தானம் அவர்களுக்கு.

Thamira said...

அப்பிடியே கொஞ்சம் டபிள்மீனிங்கையும் குறைச்சுக்க சொல்லியிருந்தீங்கன்னா நல்லாருக்கும். உருப்படவேண்டிய ஆளு. பாப்போம், என்ன பண்றார்னு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோமா, பாலா, ஆதி..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
அப்பிடியே கொஞ்சம் டபிள்மீனிங்கையும் குறைச்சுக்க சொல்லியிருந்தீங்கன்னா நல்லாருக்கும். உருப்படவேண்டிய ஆளு. பாப்போம், என்ன பண்றார்னு.//

நீங்கள் சொல்வதும் உண்மைதான்..விவேக் பாணிதான் இதில்..அதையும் மற்றிக் கொள்ள வேண்டும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ஹேமா said...
நீங்கள் சொல்வது சரி.கவனித்து முயற்சித்தால் நிச்சயம் வளர்ச்சி நிச்சயம் சந்தானம் அவர்களுக்கு.//

வருகைக்கு நன்றி ஹேமா